Sunday, 18 December 2016

‘அம்ரிதா ஏயெம் ' இலக்கியத்தின் மூலம் சமாதானம்! புதிய நாகரீகம் ஏற்படுத்தப்படுவது அவசியம்!



இலக்கியம் என்பது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம்.

“இலக்கியம் என்பது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம். இலக்கியமானது இவ்வாறான தொடர்பாடலை சிறப்பாக செய்வதற்குரிய வாகனமாகும். எனவே இலக்கியத்தின் மூலம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, புதிய நாகரீகம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.”என்கிறார் ‘அம்ரிதா ஏயெம்’ என அறியப்படும் ஏ.எம். றியாஸ் அகமட்.

Thursday, 25 August 2016

நாட்டார்கலைகளைப் பேணுவதில் முஸ்லிம்கள் அசமந்தம்:--எழுகவி_ஜெலீல்

தமது நாட்டார் கலை இலக்கிய வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பதில் முஸ்லிம்கள் அசமந்தமாக இருக்கிறார்கள் என்கிறார் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த எழுகவி ஜெலீல் (49) “நாட்டார் பாடல்களுக்கு ஆசியரியர்கள் இல்லை” எனும் பொது நியதியை தகர்த்து “அரை நிலை நாட்டார் பாடல்கள்” எனும் புது வடிவத்தினை இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்கொண்டு செல்கிறார் ஜெலீல்.
முஸ்லிம் கலை, இலக்கியப் பாரம்பரியம் மிக்க தென்கிழக்குப் பிராந்தியத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வாழ்பவர்தான் இவர் , நாட்டார் பாடல்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல பாடுவதிலும் அதனைப் பாதுகாத்துத் தொகுதியாக்குவதிலும் 35வருடங்களுக்கு மேலாக தன்னை ஈடுபடுத்தி வருபவர்.

Friday, 5 August 2016

கவிதை பற்றிய புரிதல் மற்று பயிற்சிப்பட்டறை

முர்சித் முகம்மது

சாய்ந்தமருது ஒன்று கூடுவோம் இளைஞர் அமைப்பு இளைஞர் நல்லிணக்க நிலையத்தில் (20.11.2015)  அன்று இடம்பெற்ற கவிதைப்பட்டறை (கவிதை பற்றிய புரிதல் மற்று பயிற்சிப்பட்டறை) மிகச்சிறப்பாக நடந்தது. 

இதை இளைஞர் கலை, இலக்கியப் பேரவை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்நிகழ்வில் கவிஞர், விமர்சகர் றியாஸ் குரானா கலந்துரையாடினார். அத்தோடு கவிஞர் ஜெமில் உள்ளிட்ட கவிதைச் செயற்பாட்டாளர்களும் கலந்தகொண்டு பேசினர்.

இங்கு கவிதை, கவிதையின் மொழியூடான வளர்ச்சி, இன்றைய காலகட்டத்திலான கவிதை இயங்குதளம்  மற்றும் கவிதை  தொடர்பிலான புரிதல் உள்ளிட்ட பல விடயங்கள் கருத்தாடலாக கையாளப்பட்டதுடன் கேள்வி பதில் முறையும் கையாளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏழை மீனவனின் இருண்ட கனவு


முர்சித் முகம்மது


இலங்கையின் கரையோரக் கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்பிடியையே தனது ஜீவிதமாகக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களுள் சிலயில் தங்களின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மெழுகுவர்த்தியாய் கரைந்துகரைந்து அவர்களின் வாழ்வின் மீதானகனவுகள் கானல் நீர் போல கனவாகிறது. அந்தவகையில் கிழக்கிலங்கையின் நிந்வூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்தான் 60 வயதாகும் நாகூர்த்தம்பி. இவரின் வாழ்க்கை விபரம் தெரிந்த காலம் முதல் இன்றுவரை கடலோடு கதையா கலந்துகிடக்கிறார். அவருடனான அனுபகப்பதிவு இதுரைத்தவிர ஏனையவர்கள் கடலைத் தவிர மாற்று வாழ்வாதாரமற்ற நிலை.

Tuesday, 1 September 2015

பேரா. மௌனகுரு ஐயா ஒரு வித்தியாசக்காரர்.-காண்டவதகனம் கூத்து, பரதம் தழுவிய நாடகம்




          பேரா. மௌனகுரு ஐயா அவர்களின் முயற்சியினால் 2009 இல் நிறுவப்பட்ட அரங்க ஆய்வுகூடமானது புதிய சிந்தனைகள் ஊடாக இளம் தலைமுறையினருக்கு கலைசார் படைப்பாற்றல் பயிற்சிகளை அளித்து வருகின்றது.


    அரங்க ஆற்றுகையில் புதிய, புதிய பயிற்சிகளை மேற்கொள்ள, சுதந்திரமான ஒரு மனவெளியையும் படைப்பின் திறன்களையும் அளிப்பதே ஆய்வுகூடத்தின் நோக்கமாகக்  கூறப்படுகிறது. பல விதமான பயிற்சிப்பட்டறைகளை வாரம்தோறும் நடாத்தி வருகின்ற அரங்க ஆய்வுகூடமானது இதுவரை 15க்கும் மேற்பட்ட பரிசோதனை ஆற்றுகைகளை நிகழ்த்தியிருக்கின்றதாம்.


இரண்டு உள்ளே.. இரண்டு வெளியே.. ஒன்று மட்டும் மேலே..


முர்சித் முகம்மது


பாவங்களால் கட்டப்பட்ட

ஆலயங்களின்
வாசல்களில்
யாசகம் கேட்கின்றன
நன்மைகள்
..
..
முற்றுப்புள்ளிகளுக்குள்
முற்றுகை செய்கின்றன
ஆயிரம் கேள்விக்குறிகள்
..
..
எனது நித்திரைகளுக்குள்
ஒரு சிலந்தி
வளர்ந்திருக்கவேண்டும்
அழகழகாய் கனவுகளை
பின்னுகின்றதே
..
..
ஓநாய்களின் மேய்ச்சலில்
புல்வெளியின் பனித்துளிகள்
ஆவியாகியிருக்ன்றன
..
..
தண்ணீர்த்தொட்டிக்கு
ஒப்பனை செய்கிறது

நிலவு
..
..
-முர்சித்-

நான் என்ன செய்வேன்?.



கொழுத்து வளர்ந்து கொடி கட்டாமல்
பறந்துகொண்டிருக்கிறது-ஓர்

ஓயாத ஒட்டுண்ணியின் ராஜ்ஜியம்!..
எனது விரல்களின் நாட்டியத்தில்,
தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது
ஒட்டுண்ணியின் பட்டறைப் புகைச்சல்!..
எனது துளிர்த்தல்,பூத்தல்,
காய்த்தல் எல்லாம் சிறைப்பட்டுக்
கிடக்கின்றனஒட்டுண்ணியின் மறுத்தலில்!..
என்னில் நிழல் தேடி
ஒதுங்குவோருக்கு நான்
என்ன செய்வேன்?
எனக்கான தென்றல்
என்னை கட்டித்தழுவும்போதும்
எனக்கான மழை
என்னை தூய்மைசெய்யும்போதும்
இந்த ஒட்டுண்ணியின்
இறுக்கம் இருக்கப்போவதில்லை
எனது புதுத்தளிர்கள் பலநூறு
கிளைகள் செய்யும்போது
என்னில் ஆயிரம் ஆயிரம்
பறவைகள் அடைக்களம் பெறலாம்!..
ஊருக்கே நிழல் இறைவன்
என்னுள் சமைத்துக் கொண்டேதான் இருக்கிறான்
.
-முர்சித்- 

தூவானம்-அடையாளம் பகுதி





கடந்த (2015.05.23) சனிக்கிழமை காலை 10 மணிக்கு இ வசந்தம் ரீ.வீ யின் இரண்டு முறை தேசிய விருதுகளை வென்ற ''தூவானம்'' கலை- இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியின் அடையாளம் பகுதி அறிமுகமாகி என்னைப்பற்றி பேசியது.




Sunday, 22 February 2015

'அகர ஆயுதம்'(இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி)-2015.01.31


'அகர ஆயுதம்' (இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் அமைப்பு ஏற்பாடு செய்த முதலாவது கலை,  இலக்கிய சந்திப்பும் மற்றும் கவியரங்கும் நிந்தவூரில்  மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இடம் பெற்றது,
இன்நிகழ்வை கவிஞர்களும், 'அகர ஆயுதம்' (இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) ஏட்பாட்டாளர்களுமான கவிஞர், இலக்கியன் முர்சித், கவிஞர் எஸ்.ஜனூஸ், கவிஞர் இப்றாஹிம் அஹ்சன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்ததுடன் நிந்தவூரில் உள்ள அம்பாரை மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய மண்டபத்தில் இன்நிகழ்வு நடைபெற்றது.

Wednesday, 18 February 2015

தொடர்புகளுக்கு







எம்.ஏ.எம். முர்சித் (இலக்கியன்)
221, 2ம் குறுக்குத் தொரு, நிந்தவூர்-13
இலங்கை.

MAM. Mursith (ilakkiyan)
221, 2nd Cross street, Nindavur -13
Sri Lanka.

தொ.இல.            : 094 77 84 86 168 / 094 75 28 68 687
மின்அஞ்சல் : mursithmohammathu@gmail.com
முகநூல் : mursith mohamed
முகநூல்ப்பக்கம்:  விதைப்பு வெளி , இவன் புதியவன்
ட்விட்டர் : poetmursith





Monday, 8 December 2014

உலகத்தமிழ் இலக்கியத்தின் இலட்சிய புத்திரன் 'எஸ்.பொ.'எனும் எஸ்.பொன்னுத்துரை.

தமிழ் உலகின் மூத்த ஆளுமை 'எஸ்.பொ' எனப்படும் எஸ்.பொன்னுத்துரை!, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 26-11-2014 அன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். இவரை பற்றியும் இவரது இலக்கிய பணிபற்றியும் இன்றைய மற்றுமன்றி எதிர்கால இலக்கிய செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைரும் தெரிந்திருத்தல் காலத்தின் கட்டாயமாகும் அந்தவகையில் எஸ்.போவின் உற்ற நண்பரான இளம்பிறை எம்.ஏ ரகுமபன், மூத்த இலக்கிவாதி, கலாபூசணம், சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் மற்றும் இஸ்லாமிய இலக்கியக்காவலர் எஸ்.ஏ.ஆர்.எம் செய்யிது ஹஸன் மௌலானா ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கட்டுரை எழுதியிருக்கிறேன். 

Sunday, 7 September 2014

மலைக்காட்சி
















பச்சை போர்த்திய மலைகள்!..-நன்றாய்
இச்சை ஊட்டிய மலர்கள்!..
பிச்சை கொட்டிய அருவி!..-அழகாய்
கச்சை கட்டிய குறவர்!..

கட்டையோரம் ஊரும் அட்டை-கண்டேன்

அட்டையில் தீட்டா ஓவியமாய்!..

மலையூர் செல்லும் நரைமேகங்கள்-நன்றாய்
கலையூர் கொள்ளை கொண்ட திரவியமாய்!..

பாம்பாட்டம் ஆடிவரும் ஆறுகள்-பார்த்து
தெம்பூற்றாய் தேறிவந்தது உள்ளம்!..
கொம்புத்தேன் வழிந்தோடிய விழியில்-இனிமை
கொவ்வைக்கனியாய் கனிந்து நின்றது மனசு!..

காலைப்பனி காதலனை மடிதாங்கும்-நன்றாய்
காதலிப்புல் நுனி சாயும்!..
காமக்கதையை படித்து முடித்து-அதிகாலை
சிந்திய கண்ணீர்; அமுதப்பன்னீர்!..

பனியை மோரும் குதிரை-உற்று
குதியை கீறும் குளிரால்!..
மதியில் ஊறும் கவிதை-சற்று
உயிரில் உரசும் எழிலால்!..

தாவரங்கள தாங்கிய பட்சிகள்-பச்சை
பூமரங்கள் சிந்திய தேன் துளிகள்!..
கொடிமரங்கள் பற்றிய கொழுகொம்பு-கொழு
பொடிவைக்கும் அழகின் அலைவரிசை!..

இத்தனையும் அத்தனையாய் பத்திரமாய்-கண்டேன்
இன்பத்தின் அத்வைத பாத்திரமாய்!..
நுவரெலிய பயணத்தில்-நான்
மலை ஏறிய பேரூந்தில்!...

 மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)

காதல்!
















காதல்!-என்ற
மூன்றெழுத்துக்குள் முழு
பிரபஞ்சமேயடங்கி கிடக்கிறது!..

காதல்! தான்
உயிருக்கான அத்தாட்சி!..
உணர்வுகளுக்கான அரிச்சுவடி!..

எரிமலை குமுறுகிறதா?
'காதல்!..' என்ற சொல்லை
காற்றில் தூதுவிடுங்கள்-அது
பனிமலை ஆகிவிடும்!..

சூரியனில் ரோஜா
நட வேண்டுமா?..
காதலை நீராக்குங்கள்!..
காதலை உரமாக்குங்கள்!..

ஓராயிரம் ஆண்டுகள் செய்த
தவவலிமை கூட ஓர் நொடியில் 
பஸ்பமாகிவிடுகிறது!..
காதல் பார்வையில்!..

காதல்!
ஆக்கவும் செய்கிறது!..
காதல்!
அழிக்கவும் செய்கிறது!..

காதலில் தான்
உலகம் பிறந்தது!..
காதலால் தான்
உலகம் இறக்கயிருக்கிறது!..

 மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)

Tuesday, 26 August 2014

கண்ணீர் மடல்...



உலகில் காதலர்கள் எல்லாம்
பேசிக்கொள்ளும் ஒரே மொழி
மௌனம்!..


நீ கண் அசைத்தால்
இடிந்து போகிறது
என் இதயம்!..

என் இரவுகளுக்கு
தானம் செய்கிறேன்
உன் நினைவுகளை!..

என் கண்கள்
பேசும் பாசை
உனக்கு புரிகிறதா?..

என் விழிகள் வரைகிறது
ஆயிரம் மடல்கள்
உனக்காகவே!..

புதிதாய் மலர்கிறது
என் கண்கள்
உன்னை காணும் போதெல்லாம்!..

கனவுகளை மட்டும் ஓட விட்டு
என் கண்களை
திருடிக் கொண்டாய்!..

என் கனவில்
அஞ்சலிட்ட கடிதம்
உன்னை வந்து சேர்ந்ததா?..

என் கண்கள்
அடிக்கடி பிரசவிக்கிறது
கண்ணீரை மட்டும் தான்!..

* மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*




பிரபல சிறுகதையாசிரியர் எஸ். முத்துமீரானின் '' மானிடம் உயிர் வாழ்கிறது'' எனும் சிறுகதைக்கான எனது விமர்சனம் 2014.08.23 (சனி) அன்று வீரகேசரியின் 'சங்கமம்' இலக்கியப்பகுதியில் வெளியானது
வீரகேசரியின் ''சங்கமம்'' இலக்கியப் பகுதி 

முதுமை


மன மலரில்
தேன் ஊறுகிறது...
தேக வேரில்
தண்ணீர் ஏருகிறது...
முதுமை!
தகமை!
முதுமை!
அறிவின் முதிர்ச்சி!

கல்விச்சோலையில்
தென்றலாய் உலாவியபோது
பட்டமும் பதவியும்
இரு கண்களாய் கிடைத்தன!..
செல்வமும் கௌரமும்
வாழ்வின் தூண்களாய்
நிலை நிறுத்தின!..
இப்படி...
இப்படி...
அழைப்பிதல் தந்து
அழைத்துச்சென்றது முதுமையிடம்...

போசாக்கான உணவுக்குளத்தில்
குளித்தபோது
ஆரோக்கியம் பளிச்சிட்டது!..
பால்,பழங்கள்,
தாணியங்கள்,தாவரங்கள்
உண்டபோது
நோய்கள் பயந்தோடின
நெருங்காமல் 
அவை மாண்டன!..

அழகான கவிதைபோல்
மனைவி!..
முத்து பூத்தாற்போல்
இரு பிள்ளைகள்!..
சொத்தாக வித்தாக
வாழ்வின் சத்தாக
கல்விப்பால் ஊட்டி
நல்ல நிலை செய்தபோது
அமைதி வெளியில்
சிறகு முளைத்து பறந்தேன்!..

கற்கண்டு வாழ்க்கையில்
தித்திப்பு கரந்தேன்!...
முதுமை மாணிக்கமானது
பட்டை தீட்டதீட்ட!..
முதுமை முழுமையானது..
மகிழ்ச்சி ஊறஊற!..

வாழக்கை சாலையின்
ஓரத்தில் வந்து நின்றபோது
பௌர்ணமி கொண்டது 
என் முதுமையில்
கல்வியால் வென்றேன
என் ஆயுளை!..

('தேசிய முதியோர் வாரம்-2010' யில் நிந்தவூர் பிரதேச செயலக போட்டியில் வெற்றி பெற்றது)

*மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*

Wednesday, 16 July 2014

முஸ்லீம் நாட்டார் இலக்கிய பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆய்வாளர் எஸ்.முத்து மீரானும் அவரின் பணியும். -கவிஞர்.இலக்கியன் மு.முர்சித்-



ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் சார்ந்த வரலாற்று விழுமியங்களை குறைகளின்றி நிறைவாகக் கூறும் இலக்கியங்களில்> நாட்டுப்புற இலக்கியங்களே முதன்மை பெற்று விளங்குகின்றன. உலகில் மனிதன் தோன்றி அவன் சமூதாயக் குழுக்களாக வாழத்தொடங்கிய காலத்திலிருந்து நாட்டார் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. எழுத்தறிவில்லா இம் மக்கள் தங்களது உணர்வுகளையெல்லாம் தங்களுக்குத் தெரிந்த மொழியின் மூலம் இலக்கியங்களாக படைக்கத்தொடங்கினார்கள்.

Friday, 27 June 2014

குறுங்கவிதை-தினக்குரல்


கடந்த 2010.12.05 ஞாயிறு தினக்குரலில் (இலங்கை) வெளியான எனது குறுங்கவிதைகள் , நன்றி தினக்குரல் வாரமஞ்சரி.

அரபு வசந்தம்-தினக்குரல்



கடந்த 2014.05.25 ஞாயிறு தினக்குரலில் (இலங்கை) வெளியான ''அரபு வசந்தம்'' எனும் எனது கவிதை ,நன்றி தினக்குரல் வாரமஞ்சரி.

Saturday, 10 May 2014

அன்னை





















அன்பு,பாசம்,
அரவணைப்பு,பாதுகாப்பு
இவை எல்லாம்
அன்னை என்ற சொல்லின்
அவதாரங்கள்!..

அன்னை!
பத்து மாதங்கள் தான்
கருவறையில் சுமந்தாள்!..
ஆயுள்வரை-தன்
நெஞ்சறையில் சுமக்கிறாள்!..

உனக்கு ஓர்
தீங்கு நிகழ்கிறதா?
உயிரிருந்தும் உயிரற்று
போகிறாள்
அன்னை!..

உலகை
அறிமுகம் செய்தவர்
தந்தையாகலாம் ...
தந்தையை தந்தவள்
அன்னைதான்!..

அன்னை!
ஓர் முத்தம் இடுகிறாள்
ஆயுளோ.. 
தூய்மையடைகிறது!..
ஆறிவை சலவை செய்கிறாள்
உனக்கு
நிலாக்காட்டி சோறூட்டிய போது!..

அன்னை தான்-உன்
நன்மை!..

அன்னையை
அபிசேகம்செய்யுங்கள்.. 
அன்பால்!.. -ஆயுள் முழுதும்
அழகு செய்யுங்கள்...
ஆதரவால்!..

அன்னை தான்-உன்
நன்மை!..

*இலக்கியன் மு.முர்சித்*