Sunday, 22 February 2015

'அகர ஆயுதம்'(இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி)-2015.01.31


'அகர ஆயுதம்' (இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் அமைப்பு ஏற்பாடு செய்த முதலாவது கலை,  இலக்கிய சந்திப்பும் மற்றும் கவியரங்கும் நிந்தவூரில்  மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இடம் பெற்றது,
இன்நிகழ்வை கவிஞர்களும், 'அகர ஆயுதம்' (இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) ஏட்பாட்டாளர்களுமான கவிஞர், இலக்கியன் முர்சித், கவிஞர் எஸ்.ஜனூஸ், கவிஞர் இப்றாஹிம் அஹ்சன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்ததுடன் நிந்தவூரில் உள்ள அம்பாரை மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய மண்டபத்தில் இன்நிகழ்வு நடைபெற்றது.


பிரபல எழுத்தாளரும் பன்நூல் ஆசிரியருமான சிரேஸ்ட சட்டத்தரணி  கலாபூசணம் எஸ்.முத்துமீரான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கின் பலபாகங்களிலிருந்தும் இளைய மற்றும் மூத்த இலக்கிய வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் நிந்தவூர் கலை, இலக்கியப்பேரவையின் தலைவர் டாக்டர் ஏ.எம் ஜாபிர், பேரவையின் செயலாளர் ரீ.இஸ்மாயில் உட்பட பேரவையின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் விசேட கவியரங்கு, இலக்கிய கலந்துரையாடல், பாடல்கள் உட்பட எழுத்தாளர் றியாஸ் குரானா மற்றும் இஸ்லாமிய இலக்கிய காவலர் அஸ்சேக் ஹசன் மௌலானா ஆகியோரது கருத்துரைகளும் ஆற்றப்பட்டதுடன் கிராமத்தான் கலிபா எழுதிய 'நழுவி' மற்றும் பிரகாசகவி அன்பர் எழுதிய 'தடம் தொலைத்த தடயங்கள்' ஆகிய நூல்களின் அறிமுகமும் இடம்பெற்றது.

மேட்படி இலக்கிய நிகழ்வு பிரதி மாதமும் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவம், இம்மாதம் சாய்ந்தமருதில் இன்நிகழ்வு நடைடிபறும் என ஏறபாட்டாளர்கலான கவிஞர், இலக்கியன் முர்சித், கவிஞர் எஸ்.ஜனூஸ், கவிஞர் இப்றாஹிம் அஹ்சன் ஆகியோர் தெரிவித்தனர்













இம்போட் மிறரில்:

No comments:

Post a Comment