Sunday 7 September 2014

மலைக்காட்சி
















பச்சை போர்த்திய மலைகள்!..-நன்றாய்
இச்சை ஊட்டிய மலர்கள்!..
பிச்சை கொட்டிய அருவி!..-அழகாய்
கச்சை கட்டிய குறவர்!..

கட்டையோரம் ஊரும் அட்டை-கண்டேன்

அட்டையில் தீட்டா ஓவியமாய்!..

மலையூர் செல்லும் நரைமேகங்கள்-நன்றாய்
கலையூர் கொள்ளை கொண்ட திரவியமாய்!..

பாம்பாட்டம் ஆடிவரும் ஆறுகள்-பார்த்து
தெம்பூற்றாய் தேறிவந்தது உள்ளம்!..
கொம்புத்தேன் வழிந்தோடிய விழியில்-இனிமை
கொவ்வைக்கனியாய் கனிந்து நின்றது மனசு!..

காலைப்பனி காதலனை மடிதாங்கும்-நன்றாய்
காதலிப்புல் நுனி சாயும்!..
காமக்கதையை படித்து முடித்து-அதிகாலை
சிந்திய கண்ணீர்; அமுதப்பன்னீர்!..

பனியை மோரும் குதிரை-உற்று
குதியை கீறும் குளிரால்!..
மதியில் ஊறும் கவிதை-சற்று
உயிரில் உரசும் எழிலால்!..

தாவரங்கள தாங்கிய பட்சிகள்-பச்சை
பூமரங்கள் சிந்திய தேன் துளிகள்!..
கொடிமரங்கள் பற்றிய கொழுகொம்பு-கொழு
பொடிவைக்கும் அழகின் அலைவரிசை!..

இத்தனையும் அத்தனையாய் பத்திரமாய்-கண்டேன்
இன்பத்தின் அத்வைத பாத்திரமாய்!..
நுவரெலிய பயணத்தில்-நான்
மலை ஏறிய பேரூந்தில்!...

 மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)

காதல்!
















காதல்!-என்ற
மூன்றெழுத்துக்குள் முழு
பிரபஞ்சமேயடங்கி கிடக்கிறது!..

காதல்! தான்
உயிருக்கான அத்தாட்சி!..
உணர்வுகளுக்கான அரிச்சுவடி!..

எரிமலை குமுறுகிறதா?
'காதல்!..' என்ற சொல்லை
காற்றில் தூதுவிடுங்கள்-அது
பனிமலை ஆகிவிடும்!..

சூரியனில் ரோஜா
நட வேண்டுமா?..
காதலை நீராக்குங்கள்!..
காதலை உரமாக்குங்கள்!..

ஓராயிரம் ஆண்டுகள் செய்த
தவவலிமை கூட ஓர் நொடியில் 
பஸ்பமாகிவிடுகிறது!..
காதல் பார்வையில்!..

காதல்!
ஆக்கவும் செய்கிறது!..
காதல்!
அழிக்கவும் செய்கிறது!..

காதலில் தான்
உலகம் பிறந்தது!..
காதலால் தான்
உலகம் இறக்கயிருக்கிறது!..

 மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)