Tuesday 1 September 2015

பேரா. மௌனகுரு ஐயா ஒரு வித்தியாசக்காரர்.-காண்டவதகனம் கூத்து, பரதம் தழுவிய நாடகம்




          பேரா. மௌனகுரு ஐயா அவர்களின் முயற்சியினால் 2009 இல் நிறுவப்பட்ட அரங்க ஆய்வுகூடமானது புதிய சிந்தனைகள் ஊடாக இளம் தலைமுறையினருக்கு கலைசார் படைப்பாற்றல் பயிற்சிகளை அளித்து வருகின்றது.


    அரங்க ஆற்றுகையில் புதிய, புதிய பயிற்சிகளை மேற்கொள்ள, சுதந்திரமான ஒரு மனவெளியையும் படைப்பின் திறன்களையும் அளிப்பதே ஆய்வுகூடத்தின் நோக்கமாகக்  கூறப்படுகிறது. பல விதமான பயிற்சிப்பட்டறைகளை வாரம்தோறும் நடாத்தி வருகின்ற அரங்க ஆய்வுகூடமானது இதுவரை 15க்கும் மேற்பட்ட பரிசோதனை ஆற்றுகைகளை நிகழ்த்தியிருக்கின்றதாம்.


இரண்டு உள்ளே.. இரண்டு வெளியே.. ஒன்று மட்டும் மேலே..


முர்சித் முகம்மது


பாவங்களால் கட்டப்பட்ட

ஆலயங்களின்
வாசல்களில்
யாசகம் கேட்கின்றன
நன்மைகள்
..
..
முற்றுப்புள்ளிகளுக்குள்
முற்றுகை செய்கின்றன
ஆயிரம் கேள்விக்குறிகள்
..
..
எனது நித்திரைகளுக்குள்
ஒரு சிலந்தி
வளர்ந்திருக்கவேண்டும்
அழகழகாய் கனவுகளை
பின்னுகின்றதே
..
..
ஓநாய்களின் மேய்ச்சலில்
புல்வெளியின் பனித்துளிகள்
ஆவியாகியிருக்ன்றன
..
..
தண்ணீர்த்தொட்டிக்கு
ஒப்பனை செய்கிறது

நிலவு
..
..
-முர்சித்-

நான் என்ன செய்வேன்?.



கொழுத்து வளர்ந்து கொடி கட்டாமல்
பறந்துகொண்டிருக்கிறது-ஓர்

ஓயாத ஒட்டுண்ணியின் ராஜ்ஜியம்!..
எனது விரல்களின் நாட்டியத்தில்,
தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது
ஒட்டுண்ணியின் பட்டறைப் புகைச்சல்!..
எனது துளிர்த்தல்,பூத்தல்,
காய்த்தல் எல்லாம் சிறைப்பட்டுக்
கிடக்கின்றனஒட்டுண்ணியின் மறுத்தலில்!..
என்னில் நிழல் தேடி
ஒதுங்குவோருக்கு நான்
என்ன செய்வேன்?
எனக்கான தென்றல்
என்னை கட்டித்தழுவும்போதும்
எனக்கான மழை
என்னை தூய்மைசெய்யும்போதும்
இந்த ஒட்டுண்ணியின்
இறுக்கம் இருக்கப்போவதில்லை
எனது புதுத்தளிர்கள் பலநூறு
கிளைகள் செய்யும்போது
என்னில் ஆயிரம் ஆயிரம்
பறவைகள் அடைக்களம் பெறலாம்!..
ஊருக்கே நிழல் இறைவன்
என்னுள் சமைத்துக் கொண்டேதான் இருக்கிறான்
.
-முர்சித்- 

தூவானம்-அடையாளம் பகுதி





கடந்த (2015.05.23) சனிக்கிழமை காலை 10 மணிக்கு இ வசந்தம் ரீ.வீ யின் இரண்டு முறை தேசிய விருதுகளை வென்ற ''தூவானம்'' கலை- இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியின் அடையாளம் பகுதி அறிமுகமாகி என்னைப்பற்றி பேசியது.