கொழுத்து வளர்ந்து கொடி கட்டாமல்
பறந்துகொண்டிருக்கிறது-ஓர்
ஓயாத ஒட்டுண்ணியின் ராஜ்ஜியம்!..
எனது விரல்களின் நாட்டியத்தில்,
தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது
ஒட்டுண்ணியின் பட்டறைப் புகைச்சல்!..
எனது துளிர்த்தல்,பூத்தல்,
காய்த்தல் எல்லாம் சிறைப்பட்டுக்
கிடக்கின்றனஒட்டுண்ணியின் மறுத்தலில்!..
என்னில் நிழல் தேடி
ஒதுங்குவோருக்கு நான்
என்ன செய்வேன்?
எனக்கான தென்றல்
என்னை கட்டித்தழுவும்போதும்
எனக்கான மழை
என்னை தூய்மைசெய்யும்போதும்
இந்த ஒட்டுண்ணியின்
இறுக்கம் இருக்கப்போவதில்லை
எனது புதுத்தளிர்கள் பலநூறு
கிளைகள் செய்யும்போது
என்னில் ஆயிரம் ஆயிரம்
பறவைகள் அடைக்களம் பெறலாம்!..
ஊருக்கே நிழல் இறைவன்
என்னுள் சமைத்துக் கொண்டேதான் இருக்கிறான்
.
-முர்சித்-
No comments:
Post a Comment