Wednesday 16 July 2014

முஸ்லீம் நாட்டார் இலக்கிய பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆய்வாளர் எஸ்.முத்து மீரானும் அவரின் பணியும். -கவிஞர்.இலக்கியன் மு.முர்சித்-



ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் சார்ந்த வரலாற்று விழுமியங்களை குறைகளின்றி நிறைவாகக் கூறும் இலக்கியங்களில்> நாட்டுப்புற இலக்கியங்களே முதன்மை பெற்று விளங்குகின்றன. உலகில் மனிதன் தோன்றி அவன் சமூதாயக் குழுக்களாக வாழத்தொடங்கிய காலத்திலிருந்து நாட்டார் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. எழுத்தறிவில்லா இம் மக்கள் தங்களது உணர்வுகளையெல்லாம் தங்களுக்குத் தெரிந்த மொழியின் மூலம் இலக்கியங்களாக படைக்கத்தொடங்கினார்கள்.

வயல்களிலும்> கடலிலும் கரையிலும்> காடுகளிலும் வேலை செய்யும் வேளைகலும் தங்கள் களைப்பைப் போக்கி> உச்சாகமடைந்த> வேலைகளில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க கிராமப்புற ஏழைமக்கள் தங்கள் மனதில் பட்டதையெல்லாம் பாடிப்பாடி மகிழ்வார்கள். இவர்கள் கண்ணெதிரே காணுகின்ற காட்சிகளையெல்லாம் கற்பனைத்தேரேறி> ஓசைநயத்தோடு பாடிப்பாடி தங்கள் நண்பர்களையும்> கூடியிருக்கும் உறவினர்களையும் மகிழ்வித்து> அவர்களும் உச்சாகமடைவார்கள்.


இவர்களுடைய பாடல்களின் இனிமையும்> ஓசையும்> பொருள் நயமும் சிறப்பாக இருப்பதைக்காணலாம். இப் பாடல்கள் கவனிப்பாரற்று இவர்களின் இதயங்களில் தேங்கிக்கிடந்து, காலவோட்டத்தில் இவர்களின் வாழ்க்கையோடு அவைகளும் அழிந்து விட்டன. அக்காலத்தில் இப்பாடல்களை தேடியெடுத்து எழுத்துருவில் தருவதற்கு யாருமே முயற்சிக்கவில்லை. நாட்டுப்புற பாடலாசிரியர்கள் எல்லொரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கலாக இருந்த காரணத்தால்> இது நடைபெறவில்லை. மேலும>; இப் பாடல்களைத்தேடியெடுத்து அவைகளை எழுத்துவடிவமளித்து> வருங்கால சமூதாயத்திற்கு அளிப்பதற்கு யாருமே முன்வரவில்லையென்றே கூறலாம். இதனால்> இம் மக்களின் 'விலை மதிப்பில்லா முதிசம" என போற்றப்படும் இவர்களின் பாடல்கள் கவனிப்பாரற்று அவைகள் பிறந்த இடத்திலேயே கிடந்து அழிந்து விட்டன. இப்பாடல்களை மனங்களிலேயே சுமந்திருந்தவர்கள் முதுமையின் காரணத்தால் மடியும் போது யாரும் தேடுதல் செய்யாமல் அவர்களின் நெஞ்சங்களோடு கிடந்து எல்லாம் மடிந்து விட்டன. நாட்டார் இலக்கியத்திற்கு இது ஒரு பெருந் துர்ப்பாக்கியமென்றே கூறலாம். எண்ணற்ற எத்தனையோ கருத்தாழமும்> கற்பனை வளமும் செறிந்த பாடல்கள்> எவரும் கவனிக்காமல் அழிந்து சிதைந்து போனமை> இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பெனலாம். இப்பாடல்களைத் தாங்கி இருந்த உள்ளங்கள் எல்லாம் அழிந்து> இன்று கண்ணுக்குள் கருக்கக்கூட யாருமே இல்லாமல் போய் விட்டன.

சுமார் பதினெட்டாம் நூற்றாண்டளவில்> உலகில் நாட்டார் இலக்கியங்களைத் தேடியெடுத்து ஆவணப்படுத்தும் முயற்சி மேலை நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டன. இம் முயற்சி சர்வகலாசாலைகள் மட்டத்தில் கள ஆய்வு முயற்சிகள் மூலம் வெற்றி பெற்று> பலர் பட்டப்படிப்புகளை மேற்கொண்டு நாட்டுப்புற இலக்கியத்தில் கலாநிதி பட்டங்களைப் பெற்றனர். இதைத்தொடர்ந்து இந்திய பல்கலைக்கழகங்களும் இம் முயற்சியில் கூடுதலாக ஈடுபட்டு> 'நாட்டுப்புறவியல்" என்னும் துறையையும் பல்கலைக்கழகங்களில் ஆரம்பித்து அதன் மூலம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டனர். இதைத்தொடர்ந்து இலங்கை பல்கலைக்கழகங்களிலும் நாட்டாரியலை ஒரு பாடமாக ஆரம்பித்து> இதில் தேடுதல்களை மேற் கொண்டனர். ஆனால்> இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இலங்கை கிராமத்து முஸ்லீம்களின் நாட்டர் இலக்கியங்கள் பற்றி எவரும் களஆய்வினை செய்து சிறப்பாகத்தேடுதல் செய்யவில்லை. சிலர்> இம் மக்களால் பாடப்பட்ட கவிகள் என்னும் ஈரடிப்பாடல்களை மட்டுமே வைத்து அடிக்கடி பத்திரிகையில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினர். முக்கியமாக> சில பல்கலைகழக கலாநிதிகளும்> வேறு சிலரும் தங்கள் கைகளில் கிடைத்த காதல்  கவிதைகளை மட்டும் வைத்துக் கொண்டு> சில கட்டுரைகள் எழுதினர். சொல்லப் போனால்>  இவர்கள் எந்த தேடுதலும் மேற்கொள்ளாமல் கிடைத்தவற்றை  வைத்து தங்கள் வித்துவங்களை காட்டினர். இதை> இவர்களின் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் ஆய்வுகளுக்கு ஆணிவேராக கருதிக்கொண்டு> தங்கள் விரிவுரையாளர்களை திருப்திப்படுத்தும் பணியை செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க சிறப்பாக மேற் கொண்டனர். சில எழுத்தாளர்கள் இம்மக்களின் அசல்களை வெட்டிக் கிறுக்கி> தங்கள் விருப்பப்படி இவ்வேழைக்கிராமத்து மக்களின் நாட்டுப்புற பாடல்களை> கேலி செய்யத் தொடங்கினர். உண்மைகளை அழித்து இம் மக்களின் பாடல்களை> தங்கள் மன இச்சைக்கு ஏற்றவாறு மாற்றி எதை எதையோ எழுதத் தொடங்கினர். பொதுவாக> கிழக்கிலங்கை முஸ்லீம் பெண்களும் ஆண்களும் இக்கவிகளை நினைத்த நேரம் பாடும் திறமையும்> சக்தியும் பெற்றிருந்தனர். இதை ஏற்காமல் சிலர் தங்கள் வித்துவங்களை காட்டினர். இவர்களில் ஆண்கள் பெண்களாகவும்>பெண்கள் ஆண்களாகவும் தங்களை உருவகப்படுத்திக் கொண்டு பாடுவதில் மிகவும் வல்லமை பெற்றிருந்ததை மறுத்து எழுதினார்கள். கிராமத்து பாமர மக்களின் ஆன்மாவாக விளங்கிக் கொண்டிருக்கும் இப்பாடல்களில் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. நாட்டுப்புறப் பாடல்களின் மூல வடிவத்தை யாரும் கண்டதில்லை. ஆதலால் உலகப் பொதுச் சொத்தாகி விட்ட நாட்டுப்புற பாடல்களில் வேறு பாட்டைக் கண்டு உண்மையான பாடல் எது என்று உறுதியாகக் கூற முடியாதுள்ளது. பாடல்களில் தங்கள் விருப்பப்படி கிறுக்கல் செய்பவர்களுக்கு> இதுவொரு துணையாகி விட்டது.

இத்தனை மதிப்பும் சிறப்புமுள்ள நாட்டார் இலக்கியங்களை யாரும் கண்டு கொள்ளாமல்> மனித மனங்களே தஞ்சமெனக்கிடந்து அழிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் சில எழுத்தாளர்களும்> ஆய்வாளர்களும் இவைகளைத் தேடியெடுத்து ஆவணப்படுத்த முனைப்புக் காட்டினர். இவர்களில் ஜனாப் எஸ் .முத்துமீரான் முதன்மையானவராவார். பல இன்னல்கள்;;>; கஸ்டங்களுக்கிடையில் முஸ்லீம் கிராமங்களில் ஆய்வின் மூலம் தேடுதல் மேற் கொண்டு> மனித மனங்களே தஞ்சமெனக்கிடந்து மடிந்து கொண்டிருந்த இலங்கை கிராமத்து முஸ்லீம்களின் முதுசமெனக் கொள்ளப்படும் நாட்டார் இலக்கியங்களை நூலுருவாக்கித் தந்துள்ளார். இவ்விலக்கியங்களில் 'கவி"கள் எனக்கூறப்படும் நாட்டார் இலக்கியக் கூறினுள்ள காதல் பாடல்களை மட்டும் எடுத்து சிலர் கட்டுரை எழுதினர். இதன் பின்னர் சோர்ந்து விட்டனர். அதுவும் சிலர் தேடியேடுத்து சேகரித்து வைத்த இக்கவிகளைக் கொண்டு தங்கள் கட்டுரைகளை எழுதினார்கள் . இவர்களில் சிலர் தங்கள் வித்துவச் செருக்கினால்> எத்தனையோ இன்னல்களுக்கிடையில களஆய்வின் மூலம் தேடியெடுத்து நூலுருவாக்கித் தந்தவர்களின் நாட்டார் இலக்கிய நூல்களில் பிழை கண்டுபிடித்து> அவர்களின் முயற்சியை மழுங்கடிக்கவும் முனைந்தனர். இப்படிப்பட்ட கோடரிக் கம்புகளையெல்லாம் கணக்கில் எடுக்காது> தன் முயற்சியில் இடைவிடாது பாடுபட்டுவரும் ஆய்வாளர் முத்துமீரான் இதுவரை இலங்கை கிராமத்து முஸ்லீம்களின் நாட்டார் இலக்கியங்களில் ஆறு ஆய்வு நூல்களையும் பல கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டு> இலங்கை முஸ்லீம்களுக்கும்> இலக்கிய உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளார். நாட்டார் இலக்கியங்கபை; போல் எளிமையும்> தற்பெருமையுமில்லா முத்துமீரான் கிழக்கிழங்கையில் பிரபல்யமான வழக்கறிஞர்களில் ஒருவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எல்லோருடனும் அன்பாகவும்> பண்பாகவும் பேசிப் பழகும் செருக்கில்லாப் பண்பாளராவார்.


 இவர் இலங்கை கிராமத்து முஸ்லீம்களின் நாட்டார் இலக்கியத்தினை பல கூறுகலாக பிரித்து> அவைகளின் தன்மைகளுக்கேற்ப> பாகுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 'கவி" என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டும் முஸ்லீம்களின் நாட்டுப்புற இலக்கியத்தை சிறைப்படுத்தாது> அவைகளின் சிறப்பினை தனித்தனியாக பாகுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கிராமத்து முஸ்லீம்களுக்குள்ளும் நாட்டார் இலக்கியம் இருக்கின்றனவா? என்று கொடுக்குக் கட்டிக்கொண்டிருந்த கலாநிதிகள்> பேராசிரியர்களுக்கெல்லாம் வாய்ப்பூட்டுப் போட்டு வெற்றி கண்ட முத்துமீரான் நூலுருவாக்கித்தந்த நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்கள் பினவருமாறு.

1.கிழக்கிலங்கை முஸ்லீம்களின் கிராமியக்கவியமுதம் -மே> 1991
2.கிழக்கிலங்கை முஸ்லீம்களின் நாட்டார் பாடல்கள்   -நவம்பர்>1997
3.இலங்கை கிராமத்து முஸ்லீம்களின் பழமொழிகள்   -மே>2005
4.இலங்கை கிராமத்து முஸ்லீம்களின் தாலாட்டுப் பாடல்கள் -மே> 2007
5.கிழக்கிலங்கை முஸ்லீம்களின் வாய்மொழிக் கதைகள் -2011
6.கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லீம்களின்                பூர்வீகமும்> வாழ்வும்> வாழ்வாதாரங்களும். –ஜனவரி> 2013
7. முஸ்லிம்களின் நாட்டுப்புற இலக்கியம்.(கட்டுரைத்தொகுதி)   அச்சில்

ஆய்வாளர் முத்துமீரான் நாட்டுப்புற இலக்கியங்களை கீழ்வரும் பகுதிகளாக பிரித்து வகைப்படுத்தி அதன் அடிப்படையில் தனது நூல்களையும் வெளியிட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற இலக்கியம் என்று பொதுவாக அழைக்கப்பட்டு வந்தவைகளை இவர் கீழ்வரும்> முறையில் வகைப்படுத்தி> இவ்விலக்கியங்களுக்கு சிறப்பும் செழுமையும் சேர்த்துள்ளார்.


 இவைகள் பின்வருமாறு .
1. நாட்டுப்புறப் பாடல்கள் (தொழில்>காதல்> தூதுவிடு> பிரார்த்தனை>       சத்தியப்பாடல்)
2. தாலாட்டுப் பாடல்கள்.
3. வாய் மொழிக்கதைகள்.
4. பழமொழிகள்.
5. கட்டுரைத்தொகுதி.(தொழில் பாடல்கள்> நெய்தல் நிலப்பாடல்கள்>    அம்பாப் பாடல்கள்)

    இப்பிரிவுகளில் அதிகம் மக்கள் இலக்கியமாக பேசப்படுவது 'கவி" என்னும்  நாட்டுப்புறப்பாடல்களேயாகும்.
1.   பிராத்தனைப்பாடல்கள்.
2.   சத்தியப்பாடல்கள்.
3.   தொழிற்பாடல்கள்.
4.   காதற்பாடல்கள்.
5.   குழந்தைப்பாடல்கள்.
6.   நையாண்டிப்பாடல்கள்.
7.   தூதுவிடு பாடல்கள்.

மேற்சொன்ன பிரிவுகளில் அடங்கியுள்ள பாடல்கள் யாவும் தனித்தனிப் பாடல்களாகவுள்ளன. இப்பாடல்களை கிராமத்து மக்கள் 'கவி" என்றும் கூறுவார்கள். இவைகளில் காதல் சம்பந்தப்பட்ட பாடல்கள் மனித வாழ்வில் எழுகின்ற உணர்வுகள்  உள்உந்தல்கள்> களவொழுக்கங்கள்> இல்லறம் சார்ந்த மனவுணர்வுகள் பற்றியதாகவும் உள்ளன. காதல் வாழ்வில் தூதுவிடுதல்> பிரார்த்தனைகள்> சத்தியம் செய்தல்> நையாண்டியாகப் பேசுதல்> பழித்தல் போன்றவைகளைப் பற்றியதாகவும் உள்ளன இவைகளில் தொழிற்பாடல்களாக வயல்களில் வேலை செய்யும் போதும் கடற்றொழிலில் ஈடுபடும் போதும் சோர்வைப் போக்கவும் சுகதுக்கங்களை பகிர்ந்து ஆறுதல் பெறவும் மனவெழுச்சிகளை வெளிப்படுத்தவும் பாடப்படும் பாடல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன  என்று முத்துமீரான் கூறுகிறார் மேலும் இவர் விளையாட்டில் சிறுவர்கள் சேர்ந்து  தங்கள் உணர்வுகளையும் விருப்பங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும் போது பாடப்படும் பாடல்களை  குழந்தைப்பாடல்கள் என்றும் இவர்கள் தங்கள் மனதில் பட்டதையெல்லாம் இசை வடிவில் பாடிப்பாடி விளையாடும் போது காட்டாறு போல் இப்பாடல்கள் இவர்களிடம் கரைபுரண்டோடிக்கொண்டிருக்கும் என்றும் கூறுகின்றார். இவைகளை மையமாக வைத்து இவர் கிராமியக்கவியமுதம் ,நாட்டார் பாடல்கள் என இரு ஆய்வு நூல்களையும் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளார்.


தாலாட்டுப் பாடல்கள்
நாகரீகத்தின் அணுங்குப் பிடியில் தாய்மை இன்று அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது.  தாய்மை உலகிற்கு அளித்த அருங்கொடையான தாலாட்டுப்பாடல்களை இன்று உலகம் அடியோடு மறந்து விட்டது. இக்காலகட்டத்தில் முஸ்லிம்களிடையே பரவிக் கிடந்த தாலாட்டுப் பாடல்களை கள ஆய்வினூடே தேடியெடுத்து அவைகளை முத்துமீரான் ஆவணப்படுத்தியுள்ளார.; தாய்மையின் இக் கொடை படிப்படியாக மறைந்து அழிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஆய்வாளர் முத்துமீரான் பல இன்னல்களுக்கிடையில் இத்தாலாட்டுப் பாடல்களைத் தேடியெடுத்து அவைகளை நூலுருவாத் தந்துள்ள இப்பணி நாட்டார் இலக்கியத்திற்கு இவர் செய்த அரும்பணிகளில் சிறந்ததாகக் கொள்ளலாம். இன்று தாலாட்டுப் பாடல்களை எந்தப் பெண்ணும் பாடுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் உலகம் தாலாட்டை மறந்து விட்டது இனிமையும் சிறப்பான ஓசை நயமும் ஒருங்கிணைந்த தாலாட்டுப் பாடல்களைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் கூட இலங்கையில் முத்துமீரானின் 'தாலாட்டுப் பாடல்கள்" என்னும் நூலையே நாடவேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாய்மொழிக் கதைகள்
மனிதன் வாழ்வியலின் இன்பதுன்பங்களை உணரத்தொடங்கிய காலம முதல்> அவன் கண்டதை ரசித்ததைப் பற்றி கதையாகக் கூறத்தொடங்கி விட்டான். இக்கதைகளே இன்று வாய்மொழிக் கதைளாக> நாட்டார் இலக்கியத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. நாட்டுப்புற மக்கள் வழிவழியாக கேட்டுவந்த அல்லது அவர்களாகவே உருவாக்கிய இக்கதைகளைத் தேடியெடுத்து அசல் அழியாது 'வாய்மொழிக் கதைகள" என்று நூலாக்கித்தந்துள்ள ஆய்வாளர் முத்துமீரானின் இப்பணி பாராட்டத்தக்கது. இந்நூலிலுள்ள கதைகளைப் படிக்கும் போது> இலங்கை கிராமத்து முஸ்லிம் மக்களின் வாழ்வியலின் சிறப்பும்> தன்மையும் எங்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.  ஆய்வாளர் முத்துமீரான் இதைப் போன்று இன்னும் பல கதைகளைத் தேடியெடத்து நூலுருவாக்கித் தரவேண்டுமென்று வினயமுடன் கேட்கின்றேன். எத்தனையோ வேலைப் பளுக்களுக்கிடையில் இச் சேவையைச் செய்து வரும் இவரை வருங்கால சமுதாயமும்> இலக்கிய உலகமும் என்றும் நினைவு கூர்ந்து பாராட்டும் என்பது என் அசையாத நம்பிக்கை.


பழமொழி;கள்
மனித சமுதாயம் உலகில் தோன்றிய காலம் முதல் பழமொழிகளின் செல்வாக்கு உயிர்த்துடிப்போடு வாழ்ந்து வருகின்றன. இவைகள் பாமர மக்களின் சித்தாந்த தத்துவமாகும். பல்லாயிரம் ஆண்டுகளில் மனிதன் சேகரித்த அறிவுக்கருவூலமான இப்பழமொழிகள் இருளில் வழிகாட்டும் ஒளியாக மக்களுக்கு விளங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தனை சிறப்பு மிக்க பழமொழிகளை முத்துமீரான் அவர்கள் 'கிழக்கிழங்கை முஸ்லிம்களின் பழமொழிகள்" என்னும் நூலாக உருவாக்கித் தந்து நாட்டார் இலக்கியத்திற்கு சிறந்த சேவையாற்றியுள்ளார் . பல்லாயிரக்கணக்கான பழமொழிகள் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவைகளைத்தேடியெடுத்து நூலுருவாக்கித் தரவேண்டுமென இவரை வினயமுடன் வேண்டுகிறேன்.

  இன்று கிராமத்து மக்களின் நாட்டுப்புற இலக்கியங்களை உலகத்தின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் ஆய்வுப் பொருளாகவும் வைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பையும்மகிமையையும் புடம் போட்டுக் காட்டுகிறது. இவ்வரிய இலக்கிய செல்வங்களை ஆர்வமுள்ள அறிஞர்களும் இளைஞர்களும் பல்கலைக்கழகங்களும் முன்வந்து இவைகளை சேகரித்துத் தொகுத்து ஆய்வு முறையில் நூலாக வெளியிட முயலவேண்டுமென்பதே என் பணிவான வேண்டுதலாகும்.

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் நாட்டுப்புற இலக்கியங்களில் மேற் சொன்னவைகள் மட்டும்தான் உள்ளன என்று கருதக்கூடாது. நாட்டுப்புற இலக்கியங்கள் ஆழம் காண முடியாத சமுத்திரம். ஆய்வாளர்கள் முழுமனதோடு இச்சமுத்திரத்தில் மூழ்கித்தேடுதல் செய்து> இன்னும் அறியாத நாட்டார் இலக்கியச்செல்வங்களையெல்லாம் அறிந்து> நூலுருவாக்கித்தருதல் வேண்டும். கல்விமான்களும்> கலாநிதிகளும்> பேராசிரியர்களும் இப்பணியில் ஈடுபட்டு நாட்டுப்புற இலக்கியத்தின் தனித்துவத்தையும் சிறப்பையும் உலகறியச் செய்தல் வேண்டும்.  'இலங்கை முஸ்லிம்களுக்குக்கிடையேயும் நாட்டுப்புற இலக்கியங்கள் உள்ளனவா?" என்று கொட்டாவி விடுபவர்களுக்கு இப்பணியை செய்து உண்மையை உலகறியச் செய்தல் வேண்டும்.

இலங்கையில் இப்பணியை சிறப்பாக செய்துள்ள ஆய்வாளர் எஸ்.முத்துமீரான் பாராட்டக்குரியவராவார். முற்றத்து மல்லிகையாக மணம் வீசிக்கொண்டிருக்கும் இலங்கை முஸ்லீம்களின் நாட்டுப்புற இலக்கியங்கள்> உலகளாவிய ரீதியில் மணம்பரப்ப வேண்டும். இதுவே என் ஆசையும் வேண்டுதலும்.

இன்று ,தன் முதுமைக்காலத்திலும் இப்பணியில் முழு மூச்சாயக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆய்வாளர் எஸ்.முத்துமீரானுக்கு 2014ம் ஆண்டு பெப்ருவரி மாதம் தென்இந்தியா தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டில் முஸ்லீம் நாட்டார் இலக்கியப் பணிக்காக 'வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்

வாழ்வில் எளிமையும்> எல்லோரையும் மதித்து அன்போடும்பண்போடும் பழகும் தன்மையைக் கொண்ட ஆய்வாளர் எஸ்.முத்துமீரான் தான் பிறந்த மண்ணையும்> அங்கு வாழும் மக்களையும் மரியாதையோடும்>சிறப்போடும் போற்றி வாழ்பவர். பிறந்த தாய் மண்ணை நேசித்து, மக்களின்  வாழ்வியலை இலக்கியமாகப் படைத்தளிக்கும் ஆய்வாளர் எஸ்.முத்துமீரான் எந்த இடத்திலும் தன்னை 'கிராமத்தான" என்று கூறுவதைப் பெருமையாகவும், மதிப்பாகவும் கொள்ளும் சிறந்த பண்பாளர். இவருக்கு இன்னும் பல பரிசில்களும்> பாராட்டுக்களும் கிடைக்க வேண்டுமென்பதே என்பேரவா. தற்பெருமை இல்லா இம்மானிட நேசனை இலக்கிய உலகம் கட்டாயம் போற்றுதல் அதன் கடமையாகும்.

வாழ்வில் வழக்கறிஞராக தொழில் புரிந்தாலும் இலக்கிய வாழ்வை> சிறப்பாகக் கருதி> உயிர்த்துடிப்போடு இயங்கிவரும் எஸ்.முத்துமீரானின் வாழ்வு சிறக்க என் பிராத்தனைகள்.






-,yf;fpad; Ku;rpj;-

No comments:

Post a Comment