Tuesday 26 August 2014

முதுமை


மன மலரில்
தேன் ஊறுகிறது...
தேக வேரில்
தண்ணீர் ஏருகிறது...
முதுமை!
தகமை!
முதுமை!
அறிவின் முதிர்ச்சி!

கல்விச்சோலையில்
தென்றலாய் உலாவியபோது
பட்டமும் பதவியும்
இரு கண்களாய் கிடைத்தன!..
செல்வமும் கௌரமும்
வாழ்வின் தூண்களாய்
நிலை நிறுத்தின!..
இப்படி...
இப்படி...
அழைப்பிதல் தந்து
அழைத்துச்சென்றது முதுமையிடம்...

போசாக்கான உணவுக்குளத்தில்
குளித்தபோது
ஆரோக்கியம் பளிச்சிட்டது!..
பால்,பழங்கள்,
தாணியங்கள்,தாவரங்கள்
உண்டபோது
நோய்கள் பயந்தோடின
நெருங்காமல் 
அவை மாண்டன!..

அழகான கவிதைபோல்
மனைவி!..
முத்து பூத்தாற்போல்
இரு பிள்ளைகள்!..
சொத்தாக வித்தாக
வாழ்வின் சத்தாக
கல்விப்பால் ஊட்டி
நல்ல நிலை செய்தபோது
அமைதி வெளியில்
சிறகு முளைத்து பறந்தேன்!..

கற்கண்டு வாழ்க்கையில்
தித்திப்பு கரந்தேன்!...
முதுமை மாணிக்கமானது
பட்டை தீட்டதீட்ட!..
முதுமை முழுமையானது..
மகிழ்ச்சி ஊறஊற!..

வாழக்கை சாலையின்
ஓரத்தில் வந்து நின்றபோது
பௌர்ணமி கொண்டது 
என் முதுமையில்
கல்வியால் வென்றேன
என் ஆயுளை!..

('தேசிய முதியோர் வாரம்-2010' யில் நிந்தவூர் பிரதேச செயலக போட்டியில் வெற்றி பெற்றது)

*மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*

No comments:

Post a Comment