Friday, 5 August 2016

கவிதை பற்றிய புரிதல் மற்று பயிற்சிப்பட்டறை

முர்சித் முகம்மது

சாய்ந்தமருது ஒன்று கூடுவோம் இளைஞர் அமைப்பு இளைஞர் நல்லிணக்க நிலையத்தில் (20.11.2015)  அன்று இடம்பெற்ற கவிதைப்பட்டறை (கவிதை பற்றிய புரிதல் மற்று பயிற்சிப்பட்டறை) மிகச்சிறப்பாக நடந்தது. 

இதை இளைஞர் கலை, இலக்கியப் பேரவை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்நிகழ்வில் கவிஞர், விமர்சகர் றியாஸ் குரானா கலந்துரையாடினார். அத்தோடு கவிஞர் ஜெமில் உள்ளிட்ட கவிதைச் செயற்பாட்டாளர்களும் கலந்தகொண்டு பேசினர்.

இங்கு கவிதை, கவிதையின் மொழியூடான வளர்ச்சி, இன்றைய காலகட்டத்திலான கவிதை இயங்குதளம்  மற்றும் கவிதை  தொடர்பிலான புரிதல் உள்ளிட்ட பல விடயங்கள் கருத்தாடலாக கையாளப்பட்டதுடன் கேள்வி பதில் முறையும் கையாளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற கவிதை தொடர்பிலான புரிதல் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் தொடர் திட்டங்களாக கொண்டுசெல்லப்படும். 






No comments:

Post a Comment