Friday, 5 August 2016

ஏழை மீனவனின் இருண்ட கனவு


முர்சித் முகம்மது


இலங்கையின் கரையோரக் கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்பிடியையே தனது ஜீவிதமாகக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களுள் சிலயில் தங்களின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மெழுகுவர்த்தியாய் கரைந்துகரைந்து அவர்களின் வாழ்வின் மீதானகனவுகள் கானல் நீர் போல கனவாகிறது. அந்தவகையில் கிழக்கிலங்கையின் நிந்வூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்தான் 60 வயதாகும் நாகூர்த்தம்பி. இவரின் வாழ்க்கை விபரம் தெரிந்த காலம் முதல் இன்றுவரை கடலோடு கதையா கலந்துகிடக்கிறார். அவருடனான அனுபகப்பதிவு இதுரைத்தவிர ஏனையவர்கள் கடலைத் தவிர மாற்று வாழ்வாதாரமற்ற நிலை.

இலங்கையின் கரையோரக் கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்பிடியையே தனது ஜீவிதமாகக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களுள் சிலரைத்தவிர ஏனையவர்கள் கடலைத் தவிர மாற்று வாழ்வாதாரமற்ற நிலையில் தங்களின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மெழுகுவர்த்தியாய் கரைந்துகரைந்து அவர்களின் வாழ்வின் மீதானகனவுகள் கானல் நீர் போல கனவாகிறது. அந்தவகையில் கிழக்கிலங்கையின் நிந்வூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்தான் 60 வயதாகும் நாகூர்த்தம்பி. இவரின் வாழ்க்கை விபரம் தெரிந்த காலம் முதல் இன்றுவரை கடலோடு கதையா கலந்துகிடக்கிறார். அவருடனான அனுபகப்பதிவு இது.
கதகதப்புடன் மெல்லிய குளிர்காற்று இளம்தளிர்களோடு பழங்கதை நாகூர்த்தம்பி பேச நீலக்கடலின் காரிருளைக் கிழித்துக் கொண்டு பிரசவம் பார்த்த தனது தோணிகளை கடலுக்குள் அனுப்பிய ஏக்கப்பெருமூச்சுடன் கடலலைகளை ஒதுக்கி விட்டு பெருமூச்சுவிட்டு நின்றார் நாகூர்த்தம்பி. 'ஏன்னப்பா நாகூர்த்தம்பி' என்றவுடன் இனந்தெரியாத சோகங்கள் மெல்லிய இழையாடவட்டப் புன்சிரிப்பை உதிர்த்த அவர் 'என்னப்பா' என்று எனது கேள்வியையே என்னைப்பார்த்துக் கேட்டார். 'இல்லண்ணஇ நெடுநாளாக சந்திக்ககிடைக்கவில்லை. அதான் சுகம் விசாரிக்கவந்தேன்' என்றேன். நேரமோ இரவு 9 மணியை முத்தமிட்டு இருந்தது. இருள் கவ்வி இருந்த இரவு அது. அமாவாசையை விழுங்கி ஏப்பம் விட்ட இரவு அது. அந்தகாரிருளையும் அவனது ஏக்கத்தையும் தொடர்புபடுத்தி இறைவன் எழுதும் நாடகம் தான் அவரைச் சூழசுழலும் வாழ்க்கை என்பதை எண்ண ஓட்டம் வெளிச்சம் போட்டது.

                                     
'என்னத்தைச் செல்ல' என்று ஆரம்பித்த அந்த ஆத்மாவிடம்இ காலத்தின் காத்திரமான பதிவுக்காக உன்னைப்போல் எத்தனைபேர் காத்திருக்கிறார்கள் என்று பேச்சை தொடர்ந்தபோது அவர் சொன்னார்இ 'தன்னை நம்பிக் கரம்பிடித்த தனது மனைவி இனந்தெரியாத நோயினால் பீடிக்கப்பட்டு தன்னையும் தனது ஒரு பெண்ணும்இ ஒரு ஆணுமாய் இரண்டு பிள்ளைகளையும் வாழ்வின் இடைநடுவே விட்டுவிட்டு காற்றோடு கரைந்துவிட்டாள்' என்ற நீங்காத்துயர் ஒருபுறம்இ பெரு மழை காற்று என்றால் இருக்கும் தொழிலும் இல்லையென்ற நிலை இன்னும் ஒருபுறம்இ நம்பிக்கை என்ற வாழ்வின் ஒரு பொருளைமட்டும் நம்பி எப்படிகாலம் ஓட்டுவது என்ற சிந்தனை ஓட்டம் வேறுபுறம்இ இவ்வாறு குழப்பமான எண்ண ஓட்டங்களால் பீடிக்கப்பட்ட அவனது உள்ளம் இந்த காரிருளை வைத்தே அதனைக் கற்பனையையும் தீட்டிவைத்திருந்தது என்பதை அடுத்த அவனின் மௌனத்தின் பின்னரான அவதரிப்பு எடுத்துரைத்தது.
பெண்பிள்ளைகளை கரைசேர்க்க வேண்டியகாலத்தின் திணிப்பு அவனை ஆட்கொண்டு இருந்தது. பலதோணிகளை பல இடர்களுக்குள்ளும் செலுத்தி கரைசேர்த்த நாகூர்த்தம்பிக்கு இது சாமர்த்தியமான சவாலாக இருக்கின்றது என்றால் ஒரு சமூகத்தின் திணிப்பை அந்த உள்ளம் எங்கனம் போராடி வெல்லும் என்பதை நினைத்துப் பார்க்கமுடியாதுள்ளது. நாகூர்த்தம்பியின் வாழ்க்iயில் இப்படி ஒரு கனவாஇ கலையாதவண்ணமாய்இ கலங்கரை விளக்கமாய் தனது மகளை வக்கீலாக பார்க்கவேண்டும் என்று அவன் ஆசைப்படுவது காலத்தின் மீதுஅவன் கொண்டகாதலா இல்லை இந்த சமுதாயத்தின் மீது அவன் கொண்ட வெறுப்பாபுரியவில்லை. ஏனெனில் நேரம்கூட 10 மணியைத்தாண்டி இருந்தது. இருள் எங்கும் சூழ்ந்து இருந்தது. அந்த காரிருளுக்கும் தொலைவில் இருந்து தோணியில் தெரியும் விளக்கின் மெல்லிய ஒளிக்கீற்று போல அவனது எதிர்காலசிந்தனையும் என்னைஆக்கிரமித்துவிட்டது.

தனது ஆண் பிள்ளை எப்படியாவது வாழ்வில் கரைசேர்ந்துவிடுவான். ஆனால் சீதனக் கொடுமையை ஜெயிக்கனும் என்ற பேரவாவைவிடவும் தனது பெண் பிள்ளையை வக்கீலாக வல்லவளாக பாரினில் காணவிளையும் இவனது சிந்தனை சிகரத்தில் முளைக்கக் காத்திருக்கும் வித்திற்க்கு ஒப்பானது. வறுமையின் தாண்டவம்இ தனது காதலின் உச்சம் பரிசளித்த தனது அருமைப் புதல்வியை பார்போற்றும் வக்கீலாக பிரசவிக்கக் காத்திருக்கும் நாகூர்த்தம்பி போன்ற தந்தைமார் எத்தனைபேர்-பல பிரசவ வேதனைகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு முகத்தில் கறும் புன்னகை யோடு தங்கள் ஆசைகளை கண்களுக்குள் மறையும் புன்னகையோடு சுருக்கி கொண்டவர்கள். இந்த சமுதாயம் எல்லாப் பக்கத்திலும் கொடுத்த மரண அடிகலகல வென்ற உளமருந்தான சிரிப்பை அவனை விட்டும் பறித்துவிட்டது. இருந்த போதிலும் அவனது உள தைரியத்தை இந்த உலகம் ஏதும் சொல்லவில்லை. எதுவும் செய்யப் போவதுமில்லை. எதுவும் நினைத்தாலும் செல்ல முடியாதது நாகூர்த்தம்பி உயிரோடு உள்ள வரை .ஆவன் பின்னாலும் அவள் கனவு நீடிக்கும். அவனது மகள் வக்கீலாக உள்ளரை. மீனோடு கதைபேசிய அவன் சிறுகுடும்பம். நீதிமன்ற வளாகத்தில் சட்டம் பேசும் காலம் தொலைவிலில்லை என்றது கரைசேர்ந்ததோணிகளில் ஒன்று. இரவு நேரமோ 11.30.



No comments:

Post a Comment