Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Sunday, 23 August 2026

இலவசம், உதவி என்ற பெயரில் ஊனமாக்கும் சமூக சேவைகள்: சிந்திக்க வேண்டிய நிமிடம்



-முர்ஷித்

இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வரலாறு பல்வேறு சிக்கல்களைக் கொண்டுள்ளது. 2004ஆம் ஆண்டு சுனாமி, 30 வருட உள்நாட்டு யுத்தம் மற்றும் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகியவை நாடு முழுவதும் மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.


இவ்வாறான சூழ்நிலைகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மீது பரிவும் பொறுப்பும் கொண்டு, பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் (NGOs) நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தன.

இது தொடக்கத்தில் தேவையான உதவியாக இருந்தாலும், காலப்போக்கில் இவை மனித வளத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, 'இலவச மனப்பான்மையை' ஊக்குவிக்கும் ஒரு நிரந்தர நிலையை உருவாக்கி விட்டன.

 வரலாற்றுப் பின்னணி:

• 2004 சுனாமி: இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்குக் கரையோரங்களை பயங்கரமாக தாக்கியது. தாய்லாந்து, ஜப்பான், USAID, UNICEF போன்றவைகளின் மூலம் மாபெரும் நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

• உள்நாட்டு யுத்தம்: வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பெருமளவிலான மக்கள் முகாம்களில் தங்கிவைத்தனர். இங்கு தொடர்ச்சியாக உணவு, உடை, கல்வி, உடல் நல சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

• 2022 பொருளாதார வீழ்ச்சி: எரிபொருள், மருந்து, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, உலக நிவாரண அமைப்புகள் மீண்டும் முன்வந்தன.

இந்த மூன்று முக்கிய இடையூறுகளும், நாட்டு மக்கள் மத்தியில் “தானாகவே வரக்கூடிய இலவச உதவி” என்ற ஒரு புலனற்ற நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளது.

தற்போதைய நிலை மற்றும் அதன் விளைவுகள்:

இலவச மனப்பான்மை வளர்ச்சி:

இன்றைய பிரதேச சுயஅரசுகளின் மதிப்பீடுகளின்படி, பல குடும்பங்கள் எந்த ஒரு செயற்பாட்டிலும் ஈடுபடாமல், மாதம்தோறும் உதவி பெறும் நிலைமை உள்ளன.

இலங்கை புள்ளியியல் திணைக்களம் 2023-இல் வெளியிட்ட அறிக்கையின் படி, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 40%-45% குடும்பங்கள் அரசு அல்லது தொண்டு நிவாரணங்களில்தான் சார்ந்துள்ளனர்.

உடல் மற்றும் மன அழுத்தங்கள்:

தொடர்ச்சியான நிவாரணத்தை எதிர்பார்ப்பது ஒரு வகை மன அழுத்தத்தை உருவாக்குகிறது. உடல் உழைப்பு இல்லாததால் பலர் நோயாளிகளாகவும், உளவியல் ரீதியில் பின்வாங்கிய நிலைக்கு செல்வதையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலை வாய்ப்பு மறுப்பு:

விவசாய வேலை, கட்டிட தொழில், சிறு தொழில் வாய்ப்புகள் உள்ளபோதும், இலவச உணவுக்கு மட்டுமே எதிர்பார்ப்புடன் காத்திருப்பது தற்போது ஒரு சமூக நோயாகவே மாறியுள்ளது.

சர்வதேச ஒப்பீடுகள்:

ஜப்பான் (World War II பின்):

அழிவுக்கு பின்னர், மக்கள் நலன் மீட்பு திட்டங்களில் மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தல், உழைப்புத் திட்டங்களை வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. “Give a man a fish, he eats for a day. Teach him to fish, he eats for a lifetime” என்ற கொள்கையையே நடைமுறைக்கு கொண்டு வந்தது.

வியட்நாம்:
போருக்குப் பின் மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக திறன் அபிவிருத்தி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

 தொழிற்சாலைகள், விவசாய மையங்கள் திறக்கப்பட்டன. தொழிலுக்கு பயிற்சி பெற்றவர்கள் தங்களையே அல்ல, பிறரையும் வேலைக்கொள்ளும் நிலைக்கு சென்றனர்.

ருவாண்டா:
1994 இனப்படுகொலையின் பின்னர், “community transformation projects” மூலம் வேலைவாய்ப்பு, தொழில் மேம்பாடு, உளவியல் சிகிச்சைகள் உள்ளிட்ட அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

தீர்வுகள் மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிகள்:

 தன்னிறைவு அடையும் திட்டங்கள்:

• உதவி அளிக்கும்போது, அவற்றுடன் தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.

• பெண்களுக்கு வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சுண்டல் தயாரிப்பு, உலர் உணவுகள், துணி வேலைகள் போன்றவை ஊக்குவிக்கப்படலாம்.

• உதவியாளராக தொடங்கிய நபர், பிறகு வேலையளிப்பவராக மாறவேண்டும்.


 சமூக வலுவூட்டல் – Participation Based Development:

மக்களை தீர்மானக் கட்டங்களில் பங்கேற்க வைப்பது, திட்டங்களை நிலைபேருடையதாக்கும் வழியாய் அமையும். உதவிக்கு எதிராக வேலை செய்யும் திட்டங்கள் அமைய வேண்டும் (Cash-for-work models).

ஒருங்கிணைந்த அரசு-தொண்டு அமைப்புகள்:

• NGOக்கள் தங்கள் திட்டங்களை பிரதேச செயலகம்/அரச அமைப்புடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

• திட்டங்களுக்கு காலவரையறை, நபருக்கான வளர்ச்சி வழிகாட்டி (Exit Strategy) இருக்க வேண்டும்.

அரசாங்க பரிந்துரைகள்:

• NGO Registration & Monitoring Framework:
தேசிய மட்டத்தில் சீராக NGO செயற்பாடுகளை பதிவு செய்து, அவர்களின் செயற்பாடுகளை சமூக மாற்றம் அடிப்படையிலான தர அடிப்படையில் மதிப்பீடு செய்யும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

• தன்னிறைவு அடையும் தரவுப் பெட்டி (Exit Database):
உதவிகள் பெறும் நபர்கள் சுயமாக எப்போது வெளியேறினார்கள் என்பதற்கான கண்காணிப்பு திட்டம்.

• அரச-தொண்டு அமைப்புகள் கூட்டுத்திட்டங்கள்:
“Livelihood 360” போன்ற திட்டங்களில், உணவு, தொழில், மனநலம், குழந்தை கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

சுட்டிக்காட்டுகள் – மக்கள் குரல்:

• அமுதா (வவுனியா): “2005ல் நிவாரணம் பெற்றேன். இன்று என் வீட்டில் மசாலா பொருட்கள் தயாரிக்கிறேன். என் கணவர் வாகன ஓட்டுநர். நாங்கள் நிவாரணத்திற்கு இல்லை.”

• முகம்மது யூசுப் (மட்டக்களப்பு): “5 வருடமாக ஒரு NGO-வில் பயிற்சி பெற்றேன். இப்போது 3 பேருக்கு வேலை கொடுக்கிறேன்.”

சமூக சேவை என்ற பெயரில் வழங்கப்படும் உதவிகள், மக்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான உந்துதலாக இல்லாமல், அவர்களை பின்வாங்கிய மனநிலைக்கு இட்டுச் செல்லக்கூடாது. உதவிகள் ஒரு தற்காலிக தாய்பால் மாதிரி; ஆனால் தன்னிறைவு என்பது நிலையான உணவாக இருக்க வேண்டும்.
உண்மையான சமூக சேவை என்பது, மக்கள் தங்களைத் தாங்களே முன்னேற்றும் பாதையில் செல்ல வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். அதற்கு இலவசங்களை வழங்குவதைவிட, செயல்படும் வாய்ப்புகளை உருவாக்குவதே சமூக மாற்றத்தின் சாவிதியாக அமையும்.

6.பெண்கள் தொழில் முனைவோரின் அமைதியான புரட்சி.Part 6.5 — எதிர்காலத்தை உருவாக்கும் பெண்கள்.

-முர்ஷித்

ஒரு பெண் தொழில் ஆரம்பிக்கும் போது,
அவர் வெறும் வருமானம் உருவாக்குவதில்லை.
அவர் எதிர்காலத்தையும் உருவாக்கத் தொடங்குகிறார்.

Industrial Development Board of Ceylon உடன் பணியாற்றிய பல ஆண்டுகளில் நான் மிகத் தெளிவாக உணர்ந்த ஒன்று
ஒரு woman entrepreneur-ன் தாக்கம், அவரது business-ஐவிட மிகப் பெரியது.

அவர்:

•ஒரு குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை மாற்றலாம்
•ஒரு குழந்தையின் கல்வி வாய்ப்பை உருவாக்கலாம்
•ஒரு சமூகத்தின் mindset-ஐ மாற்றலாம்
•மற்ற பெண்களுக்கு inspiration ஆகலாம்


இதுவே women entrepreneurship-இன் multiplier effect.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில்,
பெண்கள் economic participation அதிகரிக்கும் போது, ஒரு நாட்டின் சமூக அமைப்பே மெதுவாக மாறத் தொடங்குகிறது.

ஏனெனில் women-led income பெரும்பாலும்:

•education
•nutrition
•healthcare
•family wellbeing

போன்ற துறைகளில் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது.

இதனால் women entrepreneurs வெறும் business owners அல்ல.
அவர்கள் சமூக முதலீட்டாளர்கள்.

ஆனால் இன்னும் பல barriers தொடர்கின்றன:

•unequal access to finance
•limited property ownership
•social stereotypes
•networking gaps
•digital divide

இவைகள் பல talented women-ஐ slow down செய்கின்றன.

இதனால் future development policies-இல் women entrepreneurship central place பெற வேண்டும்.

அதற்காக:

•women-focused incubation programs
•rural digital training
•safe market access
•childcare support systems
•mentorship networks

மிகவும் அவசியமானவை.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி sustainable ஆக இருக்க வேண்டுமெனில், அதன் பெண்களின் திறன்களும் முழுமையாக பயன்பட வேண்டும்.

இன்று உலகம் knowledge economy-க்குள் நகர்கிறது.
இந்த புதிய உலகில்:

•creativity
•communication
•adaptability
•emotional intelligence

போன்ற திறன்கள் மிக முக்கியமானவை.

இந்தப் பகுதிகளில் பல women entrepreneurs extraordinary strengths கொண்டிருக்கிறார்கள்.

இதனால் எதிர்கால economy-யில் women-led businesses மிகவும் powerful force ஆக மாறக்கூடும்.

ஆனால் இன்னொரு ஆழமான உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்கள் entrepreneurship பற்றி பேசும்போது:

“அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்ற mindset மட்டும் போதாது.


அவர்களை:
•innovators
•leaders
•employers
•economic architects

ஆக பார்க்கும் பார்வை உருவாக வேண்டும்.

ஏனெனில் பல women entrepreneurs இன்று:

•jobs உருவாக்குகிறார்கள்
•local supply chains sustain செய்கிறார்கள்
•digital markets உருவாக்குகிறார்கள்
•cultural industries பாதுகாக்கிறார்கள்

இது தேசிய பொருளாதார பங்களிப்பு.

இன்று ஒரு பெண்:

•தனது வீட்டிலிருந்து business நடத்தலாம்
•international customers reach செய்யலாம்
•digital brand உருவாக்கலாம்
•AI tools பயன்படுத்தலாம்
•global marketplace-இல் compete செய்யலாம்

இதுவே புதிய பொருளாதார காலம்.

ஆனால் future women entrepreneurship-இன் மிகப்பெரிய சக்தி technology மட்டும் அல்ல.
அது resilience.

பல பெண்கள்:

•சமூக அழுத்தங்களையும்
•பொருளாதார சிரமங்களையும்
•குடும்ப பொறுப்புகளையும்

மீறி தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அதுவே silent revolution.

ஒரு woman entrepreneur வெற்றி பெறும் போது,
அவர் தனியாக முன்னேறுவதில்லை.
அவருடன்:

°ஒரு குடும்பம்
•ஒரு சமூக நம்பிக்கை
•ஒரு புதிய தலைமுறை கனவு

முன்னேறுகிறது.

இன்று இலங்கையின் பல வீடுகளில் அமைதியாக உருவாகிக்கொண்டிருப்பது வெறும் small businesses அல்ல.
அவை நாளைய inclusive economy-யின் விதைகள்.

சில நேரங்களில் ஒரு பெண்ணின் சிறிய தொழில் முயற்சியில்தான்,
ஒரு நாட்டின் மிகப்பெரிய சமூக மாற்றம் அமைதியாக ஆரம்பிக்கிறது.

— முடிவு —

Sunday, 16 August 2026

மலைகளின் நினைவின் முதுசம் — சாகித்திய ரத்னா, வாழ்நாள் சாதனையாளர் மு. சிவலிங்கம் ஐயாவுக்கு வாழ்த்துப் பூத்தூவல்கள்…

மூத்த எழுத்தாளர்; மலையக மக்களின் அரசியல், சமூக, கலை, இலக்கிய வரலாற்றின் முக்கியமான ஆளுமை; இலங்கைத்தீவின் புலமைச் சொத்து; சாகித்திய ரத்னா மு. சிவலிங்கம் ஐயா அவர்களுடனான எனது நினைவுகள் எப்போதும் தனித்துவமானவை.
ஒரு எழுத்தாளரைப் பற்றி எழுதுவது என்பது அவரது நூல்களின் பட்டியலை அடுக்குவது மட்டுமல்ல. அவர் வாழ்ந்த காலத்தையும், அவர் எதிர்கொண்ட சமூகத்தையும், அவர் எழுப்பிய கேள்விகளையும், அவர் பதிவு செய்த கண்ணீரையும், அவர் விதைத்த நம்பிக்கைகளையும், அவர் விட்டுச் சென்ற சிந்தனைகளையும் மீண்டும் நினைவுகூர்வதாகும்.

அந்த வகையில் மு. சிவலிங்கம் ஐயா அவர்கள் ஒரு தனிமனிதர் அல்லர்.

அவர் மலையகத் தமிழர் சமூகத்தின் ஒரு நீண்ட வரலாற்றின் உயிருள்ள ஆவணம்.

மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தின் மண்ணிலிருந்து எழுந்த அவர், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளராகவும், கலைஞராகவும், ஆய்வாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் தனது வாழ்வை பல தளங்களில் விரித்தவர்.

அவரது பயணம் ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் பயணம் அல்ல.

அது மலையக மக்களின் குரல் எவ்வாறு எழுத்தாகியது; அந்த எழுத்து எவ்வாறு அரசியல் கேள்வியாகியது; அந்த அரசியல் எவ்வாறு சமூக உரிமைக்கான போராட்டமாகியது என்பதன் நீண்ட வரலாறும்கூட.

மலைகளின் மண்ணிலிருந்து எழுந்த குரல்

மலையகத்தின் தேயிலைத் தோட்டங்கள் அவருக்கு வெறும் பசுமையான நிலப்பரப்புகளாக இருக்கவில்லை.

அந்த மலைகளின் ஒவ்வொரு தேயிலை இலையிலும் ஒரு தொழிலாளியின் வியர்வையை அவர் கண்டார்.

ஒவ்வொரு தொழிலாளர் குடியிருப்பிலும் ஒரு குடும்பத்தின் வரலாற்றைக் கண்டார்.

ஒவ்வொரு தலைமுறையின் வாழ்க்கையிலும் பிரஜாவுரிமை, அடையாளம், கல்வி, வாழ்வுரிமை, சமூக நீதி, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற எண்ணற்ற கேள்விகளை வாசித்தார்.

அதனால்தான் அவரது எழுத்தில் மலையகம் ஒரு புவியியல் அல்ல; ஒரு மனிதப் பிரபஞ்சம்.

அங்கு உழைப்பின் வாசனையும் இருக்கிறது.

வறுமையின் வலியும் இருக்கிறது.

அடையாளத்திற்கான போராட்டமும் இருக்கிறது.

தலைமுறைகளைத் தாண்டி வரும் கனவுகளும் இருக்கின்றன.

அரசியல் புறக்கணிப்பின் காயங்களும் இருக்கின்றன.

அவற்றையெல்லாம் கடந்து வாழ வேண்டும் என்ற மனிதனின் அசைக்க முடியாத நம்பிக்கையும் இருக்கிறது.

கலைக்கும் இலக்கியத்திற்கும் இடையில் ஒரு பாலம்

மு. சிவலிங்கம் ஐயாவின் ஆளுமையை ஒரு துறைக்குள் அடைத்துவிட முடியாது.

நாடகம், திரைப்படம், கவிதை, சிறுகதை, நாவல், அரசியல் கட்டுரை, சமூக எழுத்து, நகைச்சுவை எழுத்து, மொழிபெயர்ப்பு, நாட்டுப்புறவியல், ஆவணப்படுத்தல் என அவரது படைப்புலகம் பல்வேறு தளங்களில் விரிந்துள்ளது.

அவரது இலக்கியத்தில் கலை என்பது அலங்காரம் அல்ல.

கலை என்பது மக்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவி.

இலக்கியம் என்பது வெறும் ரசனையின் வெளி அல்ல.

இலக்கியம் என்பது வரலாற்றைச் சாட்சியப்படுத்தும் ஒரு பொறுப்பு.

அதனால்தான் அவரது படைப்புகளை வாசிக்கும் போது ஒரு கதையை மட்டும் வாசிப்பதில்லை.

ஒரு சமூகத்தின் வரலாற்றை வாசிக்கிறோம்.

மலையகத்தின் குரலைப் பதிவுசெய்த எழுத்து

‘மலைகளின் மக்கள்’, ‘ஒரு விதை நெல்’, ‘ஒப்பாரி கோச்சி’, ‘வெந்து தணிந்தது காலம்’ போன்ற படைப்புகள் மலையக வாழ்வியலின் பல்வேறு முகங்களை இலக்கியப் பதிவுகளாக முன்னிறுத்துகின்றன.

‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ என்ற நாவலும், ‘உயிர்’ என்ற குறுநாவலும் அவரது படைப்புலகின் வேறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன.

அதேபோல் ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்’ போன்ற ஆய்வு முயற்சிகள், ஒரு சமூகத்தின் வாய்மொழி மரபையும், பண்பாட்டு நினைவுகளையும், நாட்டுப்புறக் கலைச் செல்வங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுக்காகப் பதிவு செய்யும் பணியாக அமைந்துள்ளன.

‘தேயிலை தேசம்’ வழியாக கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் Born to Labour படைப்பை தமிழுக்குக் கொண்டு வந்திருப்பது, அவரது மொழிபெயர்ப்பு மற்றும் ஆவணப்படுத்தல் பணியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இவை அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, மு. சிவலிங்கம் ஐயாவின் எழுத்து என்பது தனிப்பட்ட படைப்பாற்றலின் வெளிப்பாடு மட்டுமல்ல;

ஒரு சமூகத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை எழுத்தில் பாதுகாக்கும் பண்பாட்டு முயற்சி.

எழுத்திலிருந்து சமூக அரசியல்வரை…

மு. சிவலிங்கம் ஐயாவின் அரசியல் என்பது வெறும் பதவி அல்லது அதிகாரத்திற்கான அரசியல் அல்ல.

அது மக்களின் வாழ்க்கையிலிருந்து பிறந்த அரசியல்.

மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை, தேசிய அடையாளம், கல்வி, சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம், வாழ்வுரிமை போன்ற கேள்விகளோடு பின்னிப் பிணைந்த அரசியல்.

அவர் எழுத்தாளராக மட்டும் நின்றுவிடவில்லை.

மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதினார்.

அவற்றை அரசியல் அரங்கிற்குக் கொண்டு சென்றார்.

சமூகக் குரல்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

அதனால் அவரது எழுத்தில் ஒரு இலக்கியவாதியின் உணர்வும், ஒரு சமூகச் செயற்பாட்டாளரின் கவலையும், ஒரு அரசியல் சிந்தனையாளரின் பார்வையும் ஒரே நேரத்தில் இயங்குகின்றன.

அவரை ‘மலையக எழுத்தாளர்’ என்று மட்டும் வரையறுப்பது அவரது ஆளுமையின் பரப்பைக் குறைத்துவிடும்.

அவர்—

ஒரு எழுத்தாளர்.
ஒரு பத்திரிகையாளர்.
ஒரு கலைஞர்.
ஒரு சமூகச் சிந்தனையாளர்.
ஒரு அரசியல் செயற்பாட்டாளர்.
ஒரு ஆய்வாளர்.
ஒரு மொழிபெயர்ப்பாளர்.
ஒரு ஆவணப்படுத்தலாளர்.
மக்களின் உரிமைக்குரலை எழுத்தில் பதிவு செய்த போராளி.

ஆய்வும் ஆவணப்படுத்தலும்

ஒரு சமூகத்தின் வரலாறு அரசியல் ஆவணங்களில் மட்டும் இருப்பதில்லை.

அது அதன் பாடல்களில் இருக்கிறது.

அதன் நாட்டுப்புறக் கதைகளில் இருக்கிறது.

அதன் துயரங்களில் இருக்கிறது.

அதன் கொண்டாட்டங்களில் இருக்கிறது.

அதன் தொழிலாளர் குடியிருப்புகளில் இருக்கிறது.

அதன் தலைமுறை நினைவுகளில் இருக்கிறது.

மு. சிவலிங்கம் ஐயா இந்த நுண்ணிய உண்மையை உணர்ந்திருந்தார்.

அதனால்தான் அவரது ஆய்வுப் பார்வை இலக்கியத்தைக் கடந்து மலையக மக்களின் பண்பாட்டு நினைவுகளையும், வாய்மொழி மரபுகளையும், சமூக வரலாற்றையும் ஆவணப்படுத்தும் பணியாக விரிந்தது.

இது எதிர்கால தலைமுறைகளுக்கான ஒரு பெரிய அறிவுச் சொத்து.

விருதுகள் — ஒரு நீண்ட பயணத்தின் அங்கீகாரங்கள்

அவரது நீண்டகால இலக்கிய மற்றும் சமூகப் பணிகளுக்கு கிடைத்த பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் அவரது பங்களிப்பின் நிறுவன ரீதியான அங்கீகாரங்களாகும்.

ஆனால், எந்த விருதையும் விட உயர்ந்த விருது ஒன்று இருக்கிறது.

மக்களின் நினைவில் நிலைத்திருப்பது.

அந்த விருதை எந்த நிறுவனமும் வழங்க முடியாது.

அதை காலம்தான் வழங்குகிறது.

அதை மக்கள் மட்டுமே வழங்குகிறார்கள்.

அந்த வகையில் மு. சிவலிங்கம் ஐயா அவர்கள் ஏற்கனவே காலத்தின் மிகப்பெரிய விருதைப் பெற்றுவிட்டவர்.

எனது நினைவுகளில் மு. சிவலிங்கம் ஐயா

எனக்கு மு. சிவலிங்கம் ஐயா ஒரு தொலைதூர இலக்கிய ஆளுமை மட்டுமல்ல.

அவர் எனது ஆசான்; எங்களுடைய மண்ணின் பெருமைமிகு எழுத்தாளர் எஸ். முத்துமீரான் அவர்களின் நெருங்கிய நண்பர்.

கிழக்கு மண்டலத்தின் கலை, இலக்கிய மரபுகள் மற்றும் அதன் தனித்துவமான படைப்பியல் வடிவங்கள் குறித்து மிகுந்த ஈடுபாட்டுடன் பேசக்கூடியவர்.

கிழக்கும் மலையகமும் வெவ்வேறு புவியியல் வெளிகள்.

ஆனால் மனிதர்களின் வலியும், உழைப்பும், பண்பாடும், அடையாளத் தேடலும், இலக்கியக் கனவுகளும் அந்த எல்லைகளைத் தாண்டிச் செல்கின்றன என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

கடந்த காலங்களில் அவரிடமிருந்து நான் நிறையக் கற்றிருக்கிறேன்.

அவரோடு பயணித்திருக்கிறேன்.

மட்டக்களப்பு சத்துருகொண்டான் இலக்கியச் சந்திப்பு, கொட்டகலை இலக்கியச் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் அவரோடு பங்கேற்றிருக்கிறேன்.

தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே, நடுகல்லுக்கு ( சுமைதாங்கி) அருகில் இடம்பெற்ற அவரது ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டிருக்கிறேன்.

அந்த நிகழ்வு எனது நினைவில் ஒரு நூல் வெளியீடாக மட்டும் இல்லை.

மலையக மண்ணின் நடுவே மலையகத்தின் வரலாறே தன்னைத் தானே வாசித்துக்கொண்ட ஒரு தருணமாக அது பதிந்திருக்கிறது.

அவரோடு நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்.

அவரது அனுபவங்களைச் செவிமடுத்திருக்கிறேன்.

அவரது பார்வைகளோடு உடன்பட்டும், சில இடங்களில் சிந்தித்தும், பல இடங்களில் கற்றும் இருக்கிறேன்.

ஒரு வீடு… ஒரு பல்கலைக்கழகம்…

குறிப்பாக 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில், பேராசிரியர் சே. யோகராசா அவர்களுடனும் நண்பர் அக்கறைப்பற்று நாளீருடனும் அவரது இல்லத்தில் தங்கியிருந்த நினைவு இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது.

அப்போது ஐயா அவர்களும் அவர்களது துணைவியாரும் எங்களை விருந்தினர்களாக நடத்தவில்லை.

தங்களுடைய வீட்டுப் பிள்ளைகளைப் போலவே உபசரித்தனர்.

அந்த அன்பில் எந்தப் பாசாங்கும் இருக்கவில்லை.

ஒரு மூத்த எழுத்தாளரின் பெருமிதம் இருக்கவில்லை.

ஒரு அறிவுஜீவியின் தூரமும் இருக்கவில்லை.

அங்கு இருந்தது—

அன்பு.
மனிதநேயம்.
பகிர்வு.
உரையாடல்.

இலக்கியத்தில் உயர்ந்திருந்த ஒருவர், மனித உறவுகளில் இன்னும் உயரமாக இருக்க முடியும் என்பதை அந்த நாட்கள் எனக்குக் கற்றுத் தந்தன.

அவரது வீடு எனக்கு ஒரு வீடாக மட்டும் இருக்கவில்லை.

அது ஒரு சிறிய பல்கலைக்கழகம்.

அங்கே பாடத்திட்டம் இல்லை.

ஆனால் பாடங்கள் இருந்தன.

இலக்கியம் பற்றிப் பேசினோம்.

அரசியல் பற்றிப் பேசினோம்.

மலையக மக்களின் வாழ்வு பற்றிப் பேசினோம்.

கிழக்கின் கலை மரபுகள் பற்றிப் பேசினோம்.

எழுத்தாளர்கள் பற்றிப் பேசினோம்.

வரலாறு பற்றிப் பேசினோம்.

படைப்பின் பொறுப்பு பற்றிப் பேசினோம்.

மனிதர்களைப் பற்றிப் பேசும்போது, அவரது குரலில் ஒரு எழுத்தாளனின் கூர்மையும், ஒரு சமூகச் செயற்பாட்டாளனின் கவலையும், ஒரு மூத்தவரின் அன்பும் ஒன்றாகக் கலந்திருக்கும்.

அந்த உரையாடல்கள் இன்றும் என்னுள் ஒலிக்கின்றன.

அந்த நினைவுகள் வெறும் கடந்தகாலச் சம்பவங்கள் அல்ல.

எனது இலக்கியப் பயணத்தின் ஒரு அமைதியான பாடசாலை.

சிவாமுதம்’ — நினைவைக் கௌரவமாக்கும் தருணம்

அத்தகைய ஒரு பெரும் ஆளுமைக்கு ‘சிவாமுதம்’ எனும் சிறப்பு இதழை வெளியிட்டு, அவரது கலை, இலக்கிய, சமூக, அரசியல் மற்றும் அறிவுசார் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

மலையக மக்களின் குரலை எழுத்தின் வழியாக பல தசாப்தங்களாகப் பதிவு செய்த ஒருவரை கௌரவிப்பது என்பது ஒரு தனிமனிதரைப் போற்றுவது மட்டும் அல்ல.

ஒரு சமூகத்தின் நினைவைக் கௌரவிப்பது.

ஒரு தலைமுறையின் போராட்டங்களை நினைவுகூர்வது.

ஒரு பண்பாட்டு மரபை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பது.

ஒரு எழுத்தாளருக்கு மட்டுமல்ல, அவர் எழுதிய மக்களுக்கும் மரியாதை செலுத்துவது.

அதனால்தான் இந்த நிகழ்வு ஒரு சாதாரண பாராட்டு நிகழ்வாக எனக்குத் தெரியவில்லை.

இது ஒரு இலக்கியக் கடன் செலுத்தும் தருணம்.

மலைகளின் மடியில் பிறந்த ஒரு குரல், இலங்கையின் இலக்கியப் பரப்பைக் கடந்து பல தலைமுறைகளின் நினைவுக்குள் சென்று விட்டது.

அந்தக் குரலை நாம் கேட்க வேண்டும்.

அந்த எழுத்தை நாம் வாசிக்க வேண்டும்.

அந்த வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும்.

அந்த சிந்தனைகளை நாம் விவாதிக்க வேண்டும்.

அந்த மனிதநேயத்தை நாம் தொடர வேண்டும்.

ஏனெனில்—

சில எழுத்தாளர்கள் நூல்களில் வாழ்கிறார்கள்.

சிலர் விருதுகளில் வாழ்கிறார்கள்.

சிலர் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

ஆனால்,

மு. சிவலிங்கம் ஐயா போன்றவர்கள்
மக்களின் நினைவிலும்,
மண்ணின் மணத்திலும்,
தேயிலை இலையின் பசுமையிலும்,
தொழிலாளியின் வியர்வையிலும்,
இலக்கியத்தின் வரிகளிலும்,
எதிர்கால தலைமுறைகளின் கேள்விகளிலும்
தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பார்கள்.
மலைகளின் வரலாற்றை எழுதியவருக்கு,
மலைகளின் மக்கள் சார்பில்
எமது அன்பையும் மரியாதையையும்
வாழ்த்துகளாகப் பூத்தூவுவோம்.

சாகித்திய ரத்னா
வாழ்நாள் சாதனையாளர்
மு. சிவலிங்கம் ஐயா அவர்களுக்கு கிழக்கில் இருந்து
இதயம் நிறைந்த வாழ்த்துகள்!

அவரை கௌரவிக்கும் ‘சிவாமுதம்’ சிறப்பு இதழ் வெளியீடும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வும் சிறப்புற நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மலைகளின் நினைவின் முதுசத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துப் பூத்தூவல்கள்…!

— இலக்கியன் முர்ஷித்

#முசிவலிங்கம்
#சிவாமுதம்
#மலையகஇலக்கியம்
#மலையகத்தமிழர்
#சாகித்தியரத்னா
#வாழ்நாள்சாதனையாளர்
#தமிழ்இலக்கியம்
#இலங்கைத்தமிழ்இலக்கியம்
#மலையகவரலாறு
#இலக்கியன்_முர்ஷித்

Tuesday, 11 August 2026

6. பெண்கள் தொழில் முனைவோரின் அமைதியான புரட்சி”Part 6.4 — Digital Women Entrepreneurs

#முர்ஷித்

ஒரு காலத்தில் பெண்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டுமெனில்:

•shop தேவைப்பட்டது
•பெரிய முதலீடு தேவைப்பட்டது
•வெளியுலக தொடர்புகள் தேவைப்பட்டன
இன்று ஒரு smartphone மற்றும் internet connection கூட,
ஒரு பெண்ணின் பொருளாதார உலகத்தை மாற்றக்கூடிய கருவிகளாக மாறியுள்ளன.

Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் மிகத் தெளிவாகக் கண்ட மாற்றங்களில் ஒன்று

பல women entrepreneurs, digital platforms மூலம் தங்களுக்கான புதிய சந்தைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு mother entrepreneur:

•homemade cakes online-இல் விற்கிறார்
•Facebook live மூலம் products showcase செய்கிறார்
•WhatsApp orders manage செய்கிறார்

ஒரு rural artisan:

•தனது handicrafts-ஐ TikTok videos மூலம் அறிமுகப்படுத்துகிறார்
•nationwide delivery செய்கிறார்

இது வெறும் technology adoption அல்ல.
இது economic visibility.

Facebook, TikTok, மற்றும் WhatsApp Business போன்ற platforms இன்று:

•பெண்களின் குரலாகவும்
•அவர்களின் சந்தையாகவும்
•அவர்களின் marketing office-ஆகவும்

மாறிவிட்டன.

முன்பு பல women entrepreneurs:

“நமக்கு exposure கிடைக்காது” என்று நினைத்தார்கள்.

ஆனால் இன்று:

ஒரு village-based home business கூட viral ஆக முடிகிறது

ஒரு homemade product கூட national customer base உருவாக்க முடிகிறது

இதுவே digital democratization.

ஒரு முக்கியமான மாற்றம் என்னவெனில், online business பெண்களுக்கு flexibility-யையும் வழங்குகிறது.

அவர்கள்:

•family responsibilities manage செய்யும் போது கூட
•business operations நடத்த முடிகிறது
•customers respond செய்ய முடிகிறது
•digital marketing செய்ய முடிகிறது

இதனால் traditional mobility limitations சில அளவில் குறைகின்றன.

ஆனால் digital entrepreneurship-க்கும் challenges இருக்கின்றன.

பல women entrepreneurs:

•online scams பற்றி பயப்படுகிறார்கள்
•technology confidence குறைவாக இருக்கிறது
•professional branding தெரியவில்லை
•pricing strategy-இல் சிக்குகிறார்கள்

இதனால் digital literacy training மிகவும் அவசியமாகிறது.

இன்று future-ready women entrepreneurs தெரிந்திருக்க வேண்டியவை:

•social media branding
•online customer communication
•digital payment systems
•product photography
•content creation
•cyber safety awareness

ஏனெனில் future market increasingly online ஆக மாறிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் — storytelling.

பல women-led businesses-க்கு powerful human stories இருக்கின்றன.

ஒரு widow woman rebuilding her life.
ஒரு mother supporting her children’s education.
ஒரு rural creator preserving traditional craft.

இந்த stories customers-உடன் emotional connection உருவாக்குகின்றன.

இன்று digital marketing-இல் authenticity itself ஒரு brand value ஆக மாறியுள்ளது.

ஒரு முக்கியமான psychological transformation கூட நடக்கிறது.

முன்பு பல women entrepreneurs:

“நான் business woman இல்லை” என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் இன்று:

•online customers
•repeat orders
•positive reviews
•digital visibility

இவைகள் அவர்களின் self-confidence-ஐ மாற்றுகின்றன.

இதுவே economic identity transformation.

ஒரு woman entrepreneur online-இல் தனது முதல் order பெறும் அந்த தருணம் —
அது வெறும் sale அல்ல.

அது: “என் உழைப்புக்கு உலகத்தில் இடம் இருக்கிறது” என்ற உணர்வு.

இன்று இலங்கையின் பல வீடுகளில் அமைதியாக உருவாகிக்கொண்டிருப்பது வெறும் digital businesses அல்ல.
அவை பெண்களின் புதிய தலைமுறை பொருளாதார இயக்கங்கள்.

சில நேரங்களில் ஒரு mobile notification-இல்தான்,
ஒரு பெண்ணின் புதிய சுயநம்பிக்கை ஆரம்பிக்கிறது.

(தொடரும்…)

Thursday, 6 August 2026

6. பெண் தொழில் முனைவோரின் அமைதியான புரட்சி”Part 6.3 — சிறு சேமிப்பிலிருந்து பொருளாதார சுதந்திரம் வரை


-முர்ஷித்

பல பெண்கள் entrepreneurship-ஐ பெரிய கனவுகளோடு ஆரம்பிப்பதில்லை.
அவர்கள் ஆரம்பிப்பது —
ஒரு சிறிய தேவையிலிருந்து.

ஒரு குழந்தையின் school fees.
ஒரு குடும்பத்தின் monthly expenses.
ஒரு அவசர மருத்துவச் செலவு.
அல்லது “யாரிடமும் கையேந்தாமல் வாழ வேண்டும்” என்ற அமைதியான தீர்மானம்.
Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் மிக ஆழமாக உணர்ந்த ஒன்று —
பல women entrepreneurs-ன் முதல் capital money அல்ல.
அது self-respect.

ஒரு பெண்:

•homemade food sales ஆரம்பிக்கிறார்
•tailoring orders எடுக்கிறார்
•beauty products தயாரிக்கிறார்
•small online reselling செய்கிறார்

ஆரம்பத்தில் income மிகவும் குறைவாக இருக்கலாம்.

ஆனால் அந்த முதல் வருமானம் அவர்களுக்கு வெறும் பணம் அல்ல.
அது:

•confidence
•identity
•independence
•decision-making power

இவைகளின் ஆரம்பம்.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், பெண்களின் பொருளாதார சுதந்திரம் குடும்பங்களின் சமூக அமைப்பையே மாற்றக்கூடிய சக்தி.

ஒரு woman entrepreneur:

•தனது income-ஐ education-க்கு பயன்படுத்தலாம்
•family nutrition மேம்படுத்தலாம்
•savings culture உருவாக்கலாம்
•next generation mindset மாற்றலாம்

இதனால் women-led microbusinesses பல நேரங்களில் சமூக முதலீடுகளாக மாறுகின்றன.

ஆனால் இந்தப் பயணம் எளிதானதல்ல.

பல women entrepreneurs:

•limited capital-இல் ஆரம்பிக்கிறார்கள்
•informal borrowing-ஐ நம்புகிறார்கள்

profit-ஐ முழுவதும் family expenses-க்கு செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

இதனால் business scaling மிகவும் slow ஆகிறது.

இங்கே financial literacy மிகவும் முக்கியமானது.

ஒரு woman entrepreneur தெரிந்திருக்க வேண்டியது:

•savings discipline
•reinvestment strategy
•expense separation
•pricing awareness
•emergency fund culture

ஏனெனில் income உருவாக்குவது மட்டும் empowerment அல்ல.
அதை sustain செய்வதுதான் long-term empowerment.

பல நேரங்களில் நான் களத்தில் பார்த்திருக்கிறேன் —
ஒரு பெண் entrepreneur:

•தனது முதல் sewing machine வாங்குகிறார்
•பின்னர் ஒரு assistant hire செய்கிறார்
•பின்னர் small production unit உருவாக்குகிறார்

அந்த journey வெறும் business growth அல்ல.
அது identity transformation.

ஒரு காலத்தில்: “வீட்டில் இருப்பவர்” என்று பார்க்கப்பட்ட ஒருவர்,
பின்னர்:

•employer ஆக
•trainer ஆக
•community leader ஆக
மாறுகிறார்.

இதுவே women entrepreneurship-இன் silent power.

இன்று digital economy இந்த மாற்றத்தை இன்னும் வேகப்படுத்துகிறது.

Facebook மற்றும் WhatsApp Business போன்ற platforms காரணமாக:

•women entrepreneurs direct customers reach செய்கிறார்கள்
•home-based brands உருவாக்குகிறார்கள்
•online communities build செய்கிறார்கள்

இதனால் traditional business barriers சில அளவில் உடைகின்றன.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயம் — ownership mindset.

பல women entrepreneurs இன்னும்:

“இது small side income தான்” என்று தங்களின் business-ஐ underestimate செய்கிறார்கள்.

ஆனால் small consistent income கூட:

•economic stability
•family resilience
•social confidence

உருவாக்கக்கூடிய சக்தி.

ஒரு பெண் தனது முதல் தனிப்பட்ட வருமானத்தை சம்பாதிக்கும் அந்த தருணம் —
அது வெறும் financial transaction அல்ல.

அது: “நானும் உருவாக்க முடியும்” என்ற உள்ளார்ந்த அறிவிப்பு.

இன்று இலங்கையின் பல வீடுகளில் அமைதியாக உருவாகிக்கொண்டிருப்பது வெறும் small businesses அல்ல.
அவை பெண்களின் புதிய பொருளாதார குரல்கள்.

சில நேரங்களில் ஒரு சிறிய சேமிப்பு பெட்டியில்தான்,
ஒரு பெண்ணின் முழு வாழ்க்கை மாற்றத்தின் முதல் விதை மறைந்திருக்கும்.

(தொடரும்…)

Sunday, 2 August 2026

6. பெண்கள் தொழில் முனைவோரின் அமைதியான புரட்சி. Part 6.2 — குடும்பம், சமூகம், மற்றும் மறைக்கப்பட்ட தடைகள்


-முர்ஷித்

ஒரு பெண் தொழில் ஆரம்பிக்கும் போது,
அவர் வெறும் சந்தையோடு மட்டும் போராடுவதில்லை.
பல நேரங்களில் அவர் முதலில் போராடுவது — சமூக எதிர்பார்ப்புகளோடு.

கைத்தொழில் துறையின் கள அனுபவங்களில் நான் மிகத் தெளிவாகக் கண்ட ஒன்று —
பல talented women entrepreneurs business failure காரணமாக அல்ல, support system இல்லாமையால் சோர்வடைகிறார்கள்.
ஒரு பெண்:

•ஒரு food business ஆரம்பிக்க விரும்புகிறார்
•tailoring unit expand செய்ய நினைக்கிறார்
•online business உருவாக்க முயல்கிறார்


ஆனால் அவரைச் சுற்றி எழும் கேள்விகள்:

•“இதெல்லாம் தேவையா?”
•“வீட்டு வேலை போதாதா?”
•“Business பண்ணி என்ன ஆகப் போகுது?”
•“பெண்கள் இவ்வளவு வெளியே போக வேண்டாமே!”

இந்த invisible discouragement பல பெண்களின் confidence-ஐ மெதுவாக உடைக்கிறது.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், பெண்கள் entrepreneurship பற்றி நாம் பேசும்போது:

•loans
•training
•marketing

போன்ற விஷயங்களைப் பேசுகிறோம்.

ஆனால் emotional environment பற்றி மிகவும் குறைவாக பேசுகிறோம்.

ஒரு woman entrepreneur-க்கு:

•encouragement
•respect
•psychological safety
•family cooperation

இவைகளும் equally important.

ஏனெனில் பல பெண்கள் business நடத்துவது “free time” கொண்டு அல்ல.

அவர்கள்:

•cooking செய்கிறார்கள்
•குழந்தைகளை கவனிக்கிறார்கள்
•elderly care செய்கிறார்கள்
•household responsibilities handle செய்கிறார்கள்

அதற்குப் பிறகுதான் business-ஐ manage செய்கிறார்கள்.

இதனால் அவர்களின் entrepreneurship journey often invisible labour-ஆல் நிரம்பியுள்ளது.

பல women entrepreneurs:

•midnight orders pack செய்கிறார்கள்
•அதிகாலை production ஆரம்பிக்கிறார்கள்
•family sleeping பிறகு social media marketing செய்கிறார்கள்

இந்த silent effort வெளியில் பெரும்பாலும் தெரியாது.

ஆனால் இதுவே பல குடும்பங்களின் பொருளாதார backbone.

இன்னொரு முக்கியமான சிக்கல் — mobility barriers.

பல rural women:

•markets செல்ல முடியாமல் இருக்கிறார்கள்
•exhibitions attend செய்ய முடியவில்லை
•networking opportunities குறைகிறது

இதனால் அவர்களின் business growth limited ஆகிறது.

ஆனால் digital era சில barriers-ஐ உடைக்கத் தொடங்கியுள்ளது.

Facebook, WhatsApp Business, மற்றும் online marketplaces மூலம் பல women entrepreneurs:

•வீட்டிலிருந்தே customers reach செய்கிறார்கள்
•online brand உருவாக்குகிறார்கள்
•nationwide delivery செய்கிறார்கள்

இது ஒரு transformative shift.

ஆனால் technology access கூட gender-equal இல்லை என்பதை நாம் மறக்கக்கூடாது.

இன்னும் பல பெண்களுக்கு:

•digital literacy குறைவு
•device access குறைவு
•online confidence குறைவு

இதனால் targeted support systems மிகவும் அவசியமானவை.

ஒரு முக்கியமான சமூக மாற்றமும் தேவை.

ஒரு woman entrepreneur success அடைந்தால்:

“அவள் family-ஐ neglect பண்ணுறா?” என்று கேட்காமல்

“அவள் value உருவாக்குறா” என்று பார்க்கும் culture உருவாக வேண்டும்.

ஏனெனில் பெண்கள் entrepreneurship வெறும் personal achievement அல்ல.
அது சமூக முன்னேற்றத்தின் indicator.

ஒரு economically empowered woman:

•தனது குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்கிறார்
•குடும்ப health standards மேம்படுத்துகிறார்
•community-க்கு inspiration ஆகிறார்

இதனால் women-led businesses சமூகத்தில் ripple effect உருவாக்குகின்றன.

இன்று இலங்கையின் பல பெண்கள் அமைதியாக:

•businesses உருவாக்குகிறார்கள்
•digital brands வளர்க்கிறார்கள்
•local economies sustain செய்கிறார்கள்

ஆனால் அவர்களின் மிகப்பெரிய தேவை: “sympathy” அல்ல.
“equal opportunity.”

ஒரு பெண்ணின் தொழில் முயற்சியை குடும்பம் நம்பும் அந்த தருணம் —
அதுவே ஒரு புதிய பொருளாதார எதிர்காலம் ஆரம்பிக்கும் தருணமாக இருக்கலாம்.

(தொடரும்…)

Monday, 27 July 2026

6. பெண் தொழில் முனைவோரின் அமைதியான புரட்சிPart 6.1 — வீட்டின் சமையலறையிலிருந்து சந்தை வரை

#முர்ஷித்

இலங்கையின் பல பொருளாதார மாற்றங்கள் headlines-இல் தோன்றாமல் நடந்துகொண்டிருக்கின்றன.
அதில் மிகவும் அமைதியானதும் சக்திவாய்ந்ததும் —
பெண் தொழில் முனைவோரின் எழுச்சி.

Industrial Development Board of Ceylon உடன் பணியாற்றிய அனுபவங்களில் நான் மிக ஆழமாகக் கண்ட ஒன்று —
பல பெண்கள் தொழில்களை “business opportunity” ஆக ஆரம்பிக்கவில்லை.
அவர்கள் ஆரம்பித்தது:

•குடும்பத்தை காப்பாற்ற
•குழந்தைகளின் கல்வியை தொடர
•வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க
அல்லது தங்களின் மரியாதையை பாதுகாக்க

ஆக.

ஒரு வீட்டின் சமையலறையில் ஆரம்பித்த food production.
ஒரு தையல் இயந்திரத்துடன் ஆரம்பித்த tailoring service.
ஒரு சிறிய handicraft முயற்சி.
ஒரு homemade beauty product.

இவை அனைத்தும் ஆரம்பத்தில் மிகவும் சிறியதாகத் தோன்றியிருக்கலாம்.

ஆனால் அந்தச் சிறிய முயற்சிகளின் பின்னால் இருந்தது —
ஒரு பெண்ணின் அமைதியான உறுதி.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், பெண்கள் entrepreneurship பல நேரங்களில் necessity-driven.

அதாவது:

•survival
•responsibility
•குடும்ப நிலைத்தன்மை

இவைகளின் அடிப்படையில் உருவாகிறது.

இதனால் அவர்களின் business journey மிகவும் emotional-ஆகவும் இருக்கும்.

அவர்கள்:

•business நடத்துகிறார்கள்
அதே நேரத்தில் family responsibilities handle செய்கிறார்கள்
•caregiving செய்கிறார்கள்
•social expectations face செய்கிறார்கள்

இந்த double burden பற்றி நாம் சமூகமாக மிகவும் குறைவாக பேசுகிறோம்.

ஒரு male entrepreneur business failure சந்திக்கும்போது,
அவர் “risk எடுத்தவர்” என்று பார்க்கப்படலாம்.

ஆனால் ஒரு பெண் entrepreneur struggle செய்தால்:

•judgement வேகமாக வருகிறது
•confidence உடைக்கப்படுகிறது
•குடும்ப ஆதரவு குறைகிறது

இதுவே பெண்கள் entrepreneurship-இன் மறைக்கப்பட்ட psychological barrier.

ஆனால் இத்தனை சவால்களுக்குப் பிறகும், இலங்கையின் பல பெண்கள்:

•home industries உருவாக்குகிறார்கள்
•online businesses நடத்துகிறார்கள்
•employment உருவாக்குகிறார்கள்
•local economies sustain செய்கிறார்கள்

இது ஒரு silent economic revolution.

இன்று social media மற்றும் digital tools காரணமாக பெண்கள் entrepreneurs-க்கு புதிய வாய்ப்புகள் திறந்துள்ளன.

ஒரு woman entrepreneur இன்று:

•வீட்டிலிருந்தே business manage செய்ய முடிகிறது
•online orders பெற முடிகிறது
•Facebook marketing செய்ய முடிகிறது
•WhatsApp customer network உருவாக்க முடிகிறது


இதனால் mobility barriers சில அளவில் உடைக்கப்படுகின்றன.

ஆனால் technology மட்டும் போதாது.

பெண்கள் entrepreneurs-க்கு இன்னும் தேவை:

•access to finance
•mentorship
market exposure
•family support
•safe business environments
•முக்கியமாக confidence.

ஏனெனில் பல talented women:

“என்னால முடியுமா?” என்ற கேள்வியிலேயே நிறுத்தப்படுகிறார்கள்.

ஒரு முக்கியமான மாற்றம் என்னவெனில், பெண்கள் entrepreneurship இன்று வெறும் குடும்ப வருமானம் பற்றிய விஷயம் அல்ல.

அது:

•பெண்களின் பொருளாதார சுதந்திரம்
•decision-making power
•சமூக மரியாதை
•next generation inspiration

இவைகளோடும் இணைந்துள்ளது.

ஒரு mother entrepreneur தனது குழந்தைகளுக்கு வெறும் income மட்டும் தரவில்லை.
அவர் ஒரு mindset-ஐ உருவாக்குகிறார்.

“நாம் உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையை.

இன்று இலங்கையின் பல கிராமங்களில் அமைதியாக உருவாகிக்கொண்டிருப்பது வெறும் small businesses அல்ல.
அவை பெண்களின் புதிய பொருளாதார அடையாளங்கள்.

சில நேரங்களில் ஒரு வீட்டின் சமையலறையில் ஆரம்பிக்கும் சிறிய தொழில் கூட,
ஒரு பெண்ணின் முழு வாழ்க்கைப் பாதையை மாற்றத் தொடங்குகிறது.

(தொடரும்…)

Friday, 24 July 2026

05.தோல்வியடைந்த தொழில்களின் பாடங்கள்”Part 05.05 -தோல்விக்குப் பிறகு மீண்டும் எழுவது

#முர்ஷித்

ஒரு தொழில் மூடப்பட்ட பிறகு,
மக்கள் பொதுவாக பார்க்கிறார்கள் — தோல்வியை.
ஆனால் நான் பல ஆண்டுகளாக களத்தில் பார்த்தது வேறொன்று.
அந்த தோல்விக்குப் பிறகும் அமைதியாக மீண்டும் எழ முயலும் மனிதர்களை.

 நான் மிகவும் மரியாதையுடன் நினைவுகூரும் மனிதர்கள்,
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர்கள் அல்ல.
தோல்விக்குப் பிறகும் முயற்சியை நிறுத்தாதவர்கள்.

ஒரு business collapse ஆன பிறகு என்ன நடக்கிறது தெரியுமா?

வெறும் financial loss மட்டும் இல்லை.

அதோடு சேர்ந்து:

•confidence உடைகிறது
•family pressure அதிகரிக்கிறது
•society judgement ஆரம்பிக்கிறது
•self-doubt உருவாகிறது

சில entrepreneurs: “நான் இதற்குத் தகுதியில்லையோ?”
என்று கூட நினைக்கத் தொடங்குகிறார்கள்.

இதுவே business failure-இன் மிகவும் ஆபத்தான பகுதி — psychological collapse.

ஆனால் ஒரு முக்கியமான உண்மை என்னவெனில்:

Entrepreneurship என்பது ஒருபோதும் straight line journey அல்ல.

அது:

•முயற்சிகள்
•தவறுகள்
•losses
•lessons
•reinventions

இவைகளின் தொடர்ச்சி.

உலகின் பல பெரிய நிறுவனங்களின் பின்னாலும்:

•rejected ideas
•failed launches
•bankruptcies
•broken partnerships

இருந்திருக்கின்றன.

ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை.

இதனால் ஒரு entrepreneur failure-ஐ எப்படி பார்க்கிறார் என்பது மிகவும் முக்கியம்.

ஒருவர்: “என் வாழ்க்கை முடிந்துவிட்டது”
என்று பார்க்கலாம்.

மற்றொருவர்: “இது expensive lesson”
என்று பார்க்கலாம்.

இந்த mindset difference தான் future-ஐ தீர்மானிக்கிறது.

பல small entrepreneurs failure-க்குப் பிறகு இரண்டு தவறுகள் செய்கிறார்கள்:

•முழுமையாக முயற்சியை கைவிடுகிறார்கள்

•அல்லது lesson கற்றுக்கொள்ளாமல் அதே mistakes மீண்டும் செய்கிறார்கள்


ஆனால் true recovery என்பது:

•pause எடுப்பது
•analyse செய்வது
•mistakes identify செய்வது
•slowly rebuild செய்வது

இவைகளில் இருக்கிறது.

ஒரு தொழில் தோல்வியடைந்த பிறகு entrepreneur கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்:

•market mismatch இருந்ததா?
•pricing தவறானதா?
•accounting weak ஆக இருந்ததா?
•customer understanding குறைந்ததா?
•expansion too fast ஆக நடந்ததா?

இந்த honest reflection இல்லாமல் second attempt கூட ஆபத்தாக மாறலாம்.

ஆனால் ஒரு மிக ஆழமான உண்மையை நாம் மறக்கக்கூடாது.

ஒரு failed entrepreneur கூட:

•market experience பெற்றிருக்கிறார்
•customer psychology கற்றிருக்கிறார்
•negotiation skill develop செய்திருக்கிறார்
•resilience build செய்திருக்கிறார்

அதாவது அவர் வெறும் “தோல்வியடைந்தவர்” அல்ல.
அவர் field-tested மனிதர்.

இன்று உலகம் fast success stories-ஐ celebrate செய்கிறது.
ஆனால் sustainable entrepreneurs பல நேரங்களில் slow survivors.

அவர்கள்:

•விழுந்தும் எழுகிறார்கள்
•loss இருந்தும் முயல்கிறார்கள்
•rejection இருந்தும் உருவாக்குகிறார்கள்

இதுவே entrepreneurial courage.

நாம் சமூகமாகவும் மாற்றப்பட வேண்டும்.

ஒரு business failure-ஐ:

•shame ஆக பார்க்காமல்
•learning process ஆக பார்க்க வேண்டும்

ஏனெனில் risk எடுக்காத சமூகங்கள் innovation உருவாக்க முடியாது.

ஒரு entrepreneur மீண்டும் ஆரம்பிக்கும் அந்த தருணம் —
அதுவே உண்மையான வெற்றி ஆரம்பிக்கும் இடமாக இருக்கலாம்.

சில நேரங்களில் ஒரு மூடப்பட்ட கடை கதவின் பின்னால்,
ஒரு இன்னும் வலிமையான எதிர்கால நிறுவனம் அமைதியாக உருவாகிக்கொண்டிருக்கிறது.

— முடிவு —

Tuesday, 21 July 2026

5. தோல்வியடைந்த தொழில்களின் பாடங்கள்Part 5.4 — கடன் மற்றும் மன அழுத்தம்


-முர்ஷித்

ஒரு small entrepreneur-ன் முகத்தில் நீங்கள் எப்போதும் பார்க்க முடியாத ஒரு சுமை இருக்கிறது.
அது physical work அல்ல.
அது financial pressure.

Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் அடிக்கடி கவனித்த ஒரு அமைதியான உண்மை —
பல தொழில்கள் சந்தை காரணமாக மட்டும் சோர்வடைவதில்லை.
அவை “கடன் அழுத்தம்” காரணமாக உள்ளிருந்து உடைகின்றன.
ஒரு entrepreneur ஆரம்பத்தில்:

•business expand செய்ய
•machine வாங்க
•raw materials purchase செய்ய
•cash flow manage செய்ய

கடன் எடுக்கிறார்.

அது தவறல்ல.

உண்மையில் சரியான முறையில் பயன்படுத்தப்படும் finance, ஒரு business-ஐ வளர்க்கக்கூடிய சக்தி.

ஆனால் பிரச்சினை ஆரம்பிக்கிறது:

•repayment planning இல்லாதபோது
•income stability இல்லாதபோது
•emotional borrowing நடக்கும் போது

பல small entrepreneurs:

•business growth-ஐவிட faster-ஆக debt increase செய்கிறார்கள்.

இதுவே dangerous imbalance.

ஆரம்பத்தில்: “இந்த மாதம் somehow manage பண்ணிடலாம்”
என்று நினைக்கிறார்கள்.

பின்னர்:

•instalments accumulate ஆகிறது
•interest pressure அதிகரிக்கிறது
•suppliers payment delay ஆகிறது
•sleep குறைகிறது
•anxiety அதிகரிக்கிறது

இதுவே invisible business stress.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், entrepreneurship பற்றி பேசும்போது நாம் financial side பற்றி அதிகம் பேசுகிறோம்.
ஆனால் mental health side பற்றி மிகவும் குறைவாக பேசுகிறோம்.

ஒரு entrepreneur:

•uncertainty-யோடு வாழ்கிறார்
•family expectations handle செய்கிறார்
•customer pressure face செய்கிறார்
•debt calls attend செய்கிறார்
•business survival பற்றி தினமும் சிந்திக்கிறார்

இந்த continuous stress மெதுவாக emotional exhaustion-ஆக மாறலாம்.

பல நேரங்களில் business failure financial issue மட்டும் அல்ல.
அது psychological burnout.

நான் களத்தில் பார்த்திருக்கிறேன்:

•talented entrepreneurs confidence இழந்ததை
•motivated business owners hopelessness-இல் சென்றதை
•family relationships stress காரணமாக பாதிக்கப்பட்டதை

இதனால் ஒரு முக்கியமான விஷயம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு business-ஐ build செய்வது numbers மட்டும் அல்ல.
Emotional resilience-யும்.

இதற்காக entrepreneurs:

•realistic growth plan வைத்திருக்க வேண்டும்
•unnecessary loans தவிர்க்க வேண்டும்
•emergency savings maintain செய்ய வேண்டும்
•personal lifestyle inflation control செய்ய வேண்டும்

முக்கியமாக: “every opportunity-க்கும் debt எடுக்க வேண்டியதில்லை” என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று social media success pressure கூட ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது.

பல entrepreneurs:

•மற்றவர்களின் visible success பார்த்து
•தங்களையும் fast expansion-க்கு தள்ளுகிறார்கள்

ஆனால் அவர்கள் பார்க்காதது:

•அந்த success-க்குப் பின்னாலுள்ள struggles
•hidden losses
•years of slow growth

இதனால் comparison culture dangerous financial decisions-ஐ உருவாக்குகிறது.

ஒரு business slow-ஆக வளர்வது failure அல்ல.
Unsustainable growth தான் ஆபத்து.

இங்கே financial literacy மிகவும் முக்கியம்.

ஒரு entrepreneur தெரிந்திருக்க வேண்டும்:

•good debt என்ன?
•dangerous debt என்ன?
•cash flow risk என்ன?
repayment capacity என்ன?

இவை தெரியாமல் borrowing செய்வது, இருளில் வாகனம் ஓட்டுவது போன்றது.

அதே நேரத்தில் சமூகமும் மாற்றப்பட வேண்டும்.

ஒரு entrepreneur struggle செய்யும் போது:

•அவனை தோல்வியாளன் போல பார்க்காமல்
•ஒரு risk-taking மனிதராக பார்க்க வேண்டும்

ஏனெனில் entrepreneurship என்பது comfort zone வாழ்க்கை அல்ல.

அது:

•uncertainty
•sacrifice
•emotional pressure
•continuous problem-solving

இவைகளின் வாழ்க்கை.

சில நேரங்களில் ஒரு entrepreneur-ன் மிகப்பெரிய போராட்டம் சந்தையோடு அல்ல.
அது இரவு நேர அமைதியில், தனது மனஅழுத்தத்தோடு நடக்கிறது.

(தொடரும்…)

#BusinessLessons #BusinessTips #Entrepreneurship #SmallBusiness #AccountingMatters #BusinessGrowth #FinancialManagement #StartupLife #BusinessSuccess #TamilBusiness #BusinessEducation #EntrepreneurMindset

Saturday, 18 July 2026

05.தோல்வியடைந்த தொழில்களின் பாடங்கள்Part 5.3 — தவறான கூட்டுத்தொழில்கள்

#முர்ஷித்
 
பல தொழில்கள் சந்தை காரணமாக மட்டும் உடையவில்லை.
சில தொழில்கள் மனிதர்களால் உடைகின்றன.

Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் மிகவும் வேதனையுடன் பார்த்த விஷயங்களில் ஒன்று —
நல்ல ideas கொண்ட பல businesses, தவறான partnerships காரணமாக சிதறிப்போனது.
ஆரம்பத்தில் எல்லாம் அழகாகத்தான் இருக்கும்.

“நாம் சேர்ந்து பெரிய business உருவாக்கலாம்.”
“நம்பிக்கை இருந்தால் போதும்.”
“எங்களுக்கு agreement தேவையில்லை.”

ஆனால் business வளரத் தொடங்கிய பிறகு:

•profit sharing பிரச்சினைகள்
•decision-making conflicts
•வேலைப் பொறுப்பு சமநிலையின்மை
•financial transparency குறைபாடு
•ego clashes

மெதுவாக உருவாகத் தொடங்குகின்றன.

இதுவே partnership collapse.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில்:

நல்ல நண்பர்கள் எல்லோரும் நல்ல business partners ஆக முடியாது.

ஏனெனில் friendship மற்றும் business இரண்டும் வேறு உலகங்கள்.

Friendship emotion-இல் இயங்கலாம்.
ஆனால் business structure-இல் இயங்க வேண்டும்.

பல small entrepreneurs ஆரம்பத்தில்:

•legal agreements தவிர்க்கிறார்கள்
•written responsibilities fix செய்யவில்லை
•profit distribution clarity உருவாக்கவில்லை

ஏனெனில் அவர்கள் trust-ஐ மட்டும் நம்புகிறார்கள்.

ஆனால் business pressure அதிகரிக்கும் போது, clarity இல்லாத relationships மிகவும் ஆபத்தானதாக மாறுகின்றன.

ஒரு partner:

அதிகமாக உழைக்கிறார்

மற்றொருவர் commitment இல்லாமல் இருக்கிறார்

அல்லது:

ஒருவர் money handle செய்கிறார்

மற்றவர்களுக்கு transparency கிடைக்கவில்லை

இதனால் suspicion உருவாகிறது.

Business-இல் once trust breaks, recovery மிகவும் கடினம்.

நான் களத்தில் பார்த்த பல நல்ல தொழில்கள்:

•குடும்ப உறுப்பினர்கள் இடையிலான conflicts
•நண்பர்கள் இடையிலான misunderstandings
•undocumented financial dealings

காரணமாக மூடப்பட்டன.

இதனால் ஒரு entrepreneur தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான பாடம்:

“Partnership என்பது நம்பிக்கையால் ஆரம்பிக்கலாம்.
ஆனால் structure-ஆல் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.”

ஒரு proper partnership-க்கு தேவை:

•written agreement
•clear roles
•financial transparency
•decision-making system
•exit strategy

இவை uncomfortable போல தோன்றலாம்.
ஆனால் இவையே long-term protection.

இன்னொரு முக்கியமான விஷயம் — values alignment.

ஒரு partner:

fast profit மட்டும் நினைக்கிறார்

மற்றொருவர்:

•sustainable growth நினைக்கிறார்
•இப்படியான mindset mismatch கூட future conflict-ஐ உருவாக்கும்.

இதனால் business partnership என்பது:

•skills combination மட்டும் அல்ல
•character compatibility-யும்

ஆகும்.

இன்று startup culture அதிகரிக்கிறது.
பல இளைஞர்கள் collaboration மூலம் businesses ஆரம்பிக்கிறார்கள்.

இது நல்ல மாற்றம்.
ஆனால் emotional excitement மட்டும் போதாது.

ஒரு entrepreneur partnership-க்கு முன் கேட்க வேண்டிய சில கேள்விகள்:

•இந்த மனிதர் pressure handle செய்வாரா?
•financial honesty இருக்கிறதா?
•long-term commitment இருக்கிறதா?
•conflict வந்தால் mature-ஆக handle செய்வாரா?

ஏனெனில் business-இல் மிகப் பெரிய losses பல நேரங்களில் money மூலம் அல்ல; மனித உறவுகள் மூலம் வருகிறது.

ஆனால் partnership failures-இல் கூட ஒரு lesson இருக்கிறது.

அவை entrepreneurs-க்கு:

•boundaries
•professionalism
•systems thinking
•emotional discipline

இவைகளை கற்றுக்கொடுக்கின்றன.

சில நேரங்களில் ஒரு தொழில் சந்தையில் தோல்வியடைவதில்லை.
அது partnership table-இல்தான் உடைந்து போகிறது.

(தொடரும்…)

#BusinessLessons #BusinessTips #Entrepreneurship #SmallBusiness #AccountingMatters #BusinessGrowth #FinancialManagement #StartupLife #BusinessSuccess #TamilBusiness #BusinessEducation #entrepreneurmindset

Friday, 17 July 2026

நம்பிக்கை முதல் நடத்தை வரை: நிலையான சமாதானத்தின் உண்மைப் பாதை

✍️ இலக்கியன் முர்ஷித்

இன்றைய உலகம் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனித மனங்களில் இன்னும் வெறுப்பு, பிளவு, வன்முறை, சகிப்பின்மை ஆகியவை தொடர்கின்றன. சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள், இன-மத வெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள், அரசியல் துருவமயமாக்கல் ஆகியவை சமாதானத்தின் அடித்தளத்தையே சவாலுக்கு உள்ளாக்குகின்றன.

இந்த நிலையில் ஒரு முக்கியமான உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நடத்தையும் திடீரென உருவாகுவதில்லை. அது மனிதனின் உள்ளத்தில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்ட நம்பிக்கைகளின் வெளிப்பாடாகும்.
நாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கைகளே நமது மதிப்புகளை உருவாக்குகின்றன. அந்த மதிப்புகள் நமது மனப்பான்மையை வடிவமைக்கின்றன. இறுதியில், மனப்பான்மையே நமது நடத்தையாக வெளிப்படுகிறது.

அதனால்தான் சமாதானத்தை உருவாக்க வேண்டுமெனில் நடத்தையை மட்டும் மாற்ற முயல்வது போதுமானதல்ல. அதன் வேராக இருக்கும் நம்பிக்கைகளை மாற்றும் பணியில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஒருவர் "மற்றவர் எனக்கு அச்சுறுத்தல்" என்று நம்பினால், அவரது நடத்தை சந்தேகம், ஒதுக்கல், வெறுப்பு அல்லது மோதலாக மாறும். அதே மனிதன் "வேறுபாடு என்பது பலம்; மனிதம் நம்மை இணைக்கிறது" என்று நம்பத் தொடங்கினால், அவரது நடத்தை மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கமாக மாறும்.

ஒரு சமாதான செயற்பாட்டாளராக நான் கற்ற மிகப் பெரிய பாடம் இதுதான்: வெறுப்பை எதிர்ப்பதைவிட நம்பிக்கையை மாற்றுவது முக்கியம். வன்முறையை கண்டிப்பதைவிட புரிந்துணர்வை வளர்ப்பது நிலையானது. சட்டங்கள் நடத்தையை கட்டுப்படுத்தலாம்; ஆனால் மனங்களை மாற்றுவது கல்வி, உரையாடல், பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் மனிதநேய மதிப்புகளே.

இன்றைய தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டிய மிகப் பெரிய பாரம்பரியம் கட்டிடங்களோ, பொருளாதார வளர்ச்சியோ அல்ல. வேறுபாடுகளை மதித்து ஒன்றாக வாழும் பண்பாடே உண்மையான செல்வம்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஒரு கேள்வியை நமக்குள் எழுப்புவோம்:

"நான் வெறுப்பின் அறிகுறிகளை மட்டுமே எதிர்க்கிறேனா, அல்லது அவற்றை உருவாக்கும் தவறான நம்பிக்கைகளை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறேனா?"

நிலையான சமாதானம் ஆயுதங்களால் பாதுகாக்கப்படுவதில்லை. அது மனித மனங்களில் விதைக்கப்படும் நம்பிக்கை, நீதி, பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வின் விதைகளிலிருந்து மலர்கிறது.

வேரை மாற்றினால், மரம் மாறும்.
நம்பிக்கையை மாற்றினால், சமூகம் மாறும்.

Thursday, 16 July 2026

5. தோல்வியடைந்த தொழில்களின் பாடங்கள்”Part 5. 2 — “கணக்குப்பதிவில்லாத தொழில்கள்”

#முர்ஷித்

பல சிறு தொழில்கள் சந்தையில் தோல்வியடைவதற்கு காரணம் product quality அல்ல.
அது “கணக்கில்லாத வளர்ச்சி.”

Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் மீண்டும் மீண்டும் கண்ட ஒரு மிகப் பெரிய பிரச்சினை —
பல entrepreneurs தங்கள் business-ஐ நடத்துகிறார்கள்.
ஆனால் அதை அளவிடுவதில்லை.

அவர்கள்:

•sales செய்கிறார்கள்
•customers இருக்கிறார்கள்
•daily cash flow இருக்கிறது

ஆனால்:

•உண்மையான profit எவ்வளவு?
•monthly expenses எவ்வளவு?
•எந்த product அதிகம் லாபம் தருகிறது?
•எந்த பகுதியில் loss நடக்கிறது?

என்பது தெரியாமல் இருக்கிறது.
இதுவே silent business blindness.

சில entrepreneurs தினமும் busy-ஆக இருக்கிறார்கள்.
ஆனால் business progress இல்லை.

ஏன்?

ஏனெனில் “busy இருப்பது” மற்றும் “growth” இரண்டும் ஒரே விஷயம் அல்ல.

ஒரு தொழிலின் இதயம் production அல்ல.
Cash flow.

அதை புரிந்துகொள்ளாமல் பல நல்ல முயற்சிகள் மெதுவாக collapse ஆகின்றன.

பல small businesses-இல் நான் கவனித்த பொதுவான தவறுகள்:

•personal expenses மற்றும் business money கலப்பது
•receipts save செய்யாதது
•stock records maintain செய்யாதது
•debt tracking இல்லாமை
•pricing calculation தவறுகள்

இவை அனைத்தும் ஆரம்பத்தில் சிறியதாகத் தோன்றும்.
ஆனால் நீண்டகாலத்தில் business foundation-ஐ பலவீனப்படுத்தும்.

ஒரு entrepreneur தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்:

“Sales அதிகமாக இருப்பது மட்டும் business success அல்ல.”

ஒரு business:

high sales வைத்திருந்தும் loss-இல் இருக்கலாம்

low sales வைத்திருந்தும் profitable ஆக இருக்கலாம்

இதைத்தான் numbers reveal செய்கின்றன.

ஆனால் இன்னும் பல small entrepreneurs accounting-ஐ பயப்படுகிறார்கள்.

அவர்கள் நினைப்பது:

•“இது பெரிய நிறுவனங்களுக்கானது”
•“எங்களுக்கு அவசியமில்லை”
°“நாங்கள் small business தான்”

ஆனால் உண்மையில் bookkeeping என்பது survival tool.

ஒரு small entrepreneur கூட தெரிந்திருக்க வேண்டும்:

•daily income
°daily expenses
°gross profit
•net profit
•inventory movement
•customer credit

இவை இல்லாமல் business decisions guesswork ஆகிவிடும்.

இன்று technology இந்தப் பிரச்சினையை மிகவும் எளிதாக்கியுள்ளது.

Simple mobile apps மூலமாக:

•sales tracking
°expense recording
•invoice generation
•inventory management

செய்ய முடிகிறது.

ஒரு notebook கூட ஆரம்பத்திற்கு போதுமானது.

முக்கியமானது consistency.

ஒரு business-ஐ வளர்க்க வேண்டுமெனில் entrepreneur:

•தனது numbers-ஐ face செய்ய வேண்டும்
•uncomfortable truths-ஐ ஏற்க வேண்டும்
•unnecessary expenses குறைக்க வேண்டும்

இதுவே financial maturity.

ஒரு முக்கியமான psychological issue கூட இருக்கிறது.

பல entrepreneurs:

•sales வந்தால் confidence பெறுகிறார்கள்
•cash கையில் இருந்தால் business நல்லா போகுது என்று நினைக்கிறார்கள்

ஆனால் accounting இல்லாமல் அந்த confidence dangerous illusion ஆக மாறலாம்.

ஏனெனில் business-இல்:

•தெரியாத loss
•hidden costs
•unpaid credits
•slow-moving stock

இவை அமைதியாக profit-ஐ சாப்பிடத் தொடங்கும்.

ஒரு entrepreneur தனது business-ஐ உண்மையாக நேசிக்கிறார் என்றால்,
அவர் தனது கணக்குகளையும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் numbers பொய் சொல்லாது.

ஒரு தொழில் மூடப்படும் முன், அதன் கணக்குகள் பெரும்பாலும் நீண்ட காலமாக warning கொடுத்துக்கொண்டே இருக்கும்.

(தொடரும்…)

 #BusinessLessons #BusinessTips #Entrepreneurship #SmallBusiness #AccountingMatters #BusinessGrowth #FinancialManagement #StartupLife #BusinessSuccess #TamilBusiness #BusinessEducation #EntrepreneurMindset

Monday, 13 July 2026

5. தோல்வியடைந்த தொழில்களின் பாடங்கள்Part 5.1 — நல்ல தொழில்களும் ஏன் மூடப்படுகின்றன?

#முர்ஷித்

ஒவ்வொரு மூடப்பட்ட shop-இன் பின்னாலும்,
ஒரு தோல்வியடைந்த business மட்டுமில்லை.
ஒரு மனிதனின் அமைதியான கனவும் இருக்கும்.

Industrial Development Board of Ceylon உடன் பணியாற்றிய பல ஆண்டுகளில், நான் இரண்டு வகையான entrepreneurs-ஐ பார்த்திருக்கிறேன்.
ஒரு தரப்பு —
சிறிய ஆரம்பத்திலிருந்து மெதுவாக வளர்ந்தவர்கள்.

மற்றொரு தரப்பு —
நல்ல முயற்சி இருந்தும், சில ஆண்டுகளில் தொழிலை மூட வேண்டிய நிலைக்கு சென்றவர்கள்.

இந்த இரண்டாவது குழுவின் கதைகள் தான் மிகவும் முக்கியமானவை.
ஏனெனில் வெற்றியைவிட தோல்வி அதிகமான பாடங்களை கற்பிக்கிறது.

பலர் நினைப்பது போல, தொழில்கள் quality இல்லாததால் மட்டும் தோல்வியடைவதில்லை.

உண்மையில் நான் களத்தில் கண்ட முக்கிய காரணங்கள்:

•திட்டமிடல் இல்லாமை
•financial discipline குறைபாடு
•சந்தை புரிதல் இல்லாமை
•emotional decision making
•customer care புறக்கணிப்பு
•digital adaptation இல்லாமை

இவை.

சில entrepreneurs நல்ல product உருவாக்குகிறார்கள்.
ஆனால் அவர்கள் market-ஐப் புரிந்துகொள்வதில்லை.

சிலர் sales ஆரம்பித்தவுடன்:

•unnecessary expansion செய்கிறார்கள்
•அதிக கடன் எடுக்கிறார்கள்

profit-ஐ business growth-க்கு பயன்படுத்தாமல் lifestyle change-க்கு பயன்படுத்துகிறார்கள்


இதுவே silent collapse.

ஒரு மிக முக்கியமான உண்மை என்னவெனில்:

“ஒரு தொழிலை ஆரம்பிப்பது எளிது.
அதை நிலைத்திருக்கச் செய்வதே உண்மையான சவால்.”

இன்று social media entrepreneurship-ஐ glamorous ஆக காட்டுகிறது.

ஆனால் real business வாழ்க்கை:

•uncertainty
•stress
•slow growth
•repeated failures
•continuous learning

இவைகளால் நிரம்பியுள்ளது.

பல small entrepreneurs ஆரம்பத்தில்:

•motivation-இல் இயங்குகிறார்கள்

ஆனால் business நீண்டகாலம் survive செய்ய:

•systems
•discipline
•planning
•adaptability

தேவைப்படுகிறது.

ஒரு தொழில் தோல்வியடையும் போது, பெரும்பாலும் அந்த collapse ஒரே நாளில் நிகழ்வதில்லை.

அது மெதுவாக ஆரம்பிக்கிறது:

•கணக்குகள் குழப்பமாகிறது
•customer complaints அதிகரிக்கிறது
•cash flow குறைகிறது
•motivation சோர்கிறது
•கடன் அழுத்தம் அதிகரிக்கிறது

ஆனால் பல entrepreneurs இந்த warning signs-ஐ ஆரம்பத்தில் கவனிக்கவில்லை.

ஏனெனில் அவர்கள் business-ஐ data-ஆக பார்க்காமல் emotion-ஆக பார்க்கிறார்கள்.

ஒரு entrepreneur தனது தொழிலுக்கு passion வைத்திருக்க வேண்டும்.
ஆனால் passion மட்டும் போதாது.

அவருக்கு:

•numbers புரிந்திருக்க வேண்டும்
•customer behavior புரிந்திருக்க வேண்டும்
•market change observe செய்யத் தெரிந்திருக்க வேண்டும்

இன்று உலகம் வேகமாக மாறுகிறது.

ஒரு காலத்தில் வேலை செய்த business model, இன்று வேலை செய்யாமல் இருக்கலாம்.

இதனால் entrepreneurs:

•தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்
•digital tools பயன்படுத்த வேண்டும்
•customer expectations-ஐ update செய்ய வேண்டும்

இல்லையெனில் நல்ல products கூட சந்தையில் மறைந்து போகலாம்.

ஆனால் தோல்வியைப் பற்றி பேசும்போது இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் மறக்கக்கூடாது.

ஒரு business failure என்பது ஒரு மனிதனின் முழு வாழ்க்கை தோல்வி அல்ல.

பல வெற்றிகரமான entrepreneurs கூட:

•multiple failures
•financial collapse
•rejected ideas
•broken partnerships

இவற்றைக் கடந்தே வளர்ந்தவர்கள்.

சில நேரங்களில் தோல்வியடைந்த தொழில்,
அடுத்த வெற்றிக்கான மிகவும் விலையுயர்ந்த பயிற்சியாக மாறுகிறது.

(தொடரும்…)

Saturday, 11 July 2026

4. Digital Era இல் கிராமிய தொழில்கள்Part 4.5 — AI மற்றும் எதிர்கால சிறு தொழில்கள்”

#முர்ஷித்

ஒரு புதிய பொருளாதார காலம் அமைதியாக உருவாகிக்கொண்டிருக்கிறது.
அந்தக் காலத்தின் மையத்தில் இருக்கும் ஒரு சக்தி — Artificial Intelligence.

பல small entrepreneurs இன்னும் AI-ஐ ஒரு பெரிய தொழில்நுட்ப உலகத்தின் விஷயமாகவே பார்க்கிறார்கள்.
ஆனால் உண்மையில், AI ஏற்கனவே சிறு தொழில்களின் கதவுகளுக்குள் நுழைந்துவிட்டது.
 கள அனுபவங்களில் நான் தெளிவாக உணர்ந்த ஒன்று —
எதிர்காலத்தில் survive செய்யப்போகும் small businesses, வெறும் உழைப்பால் மட்டும் அல்ல; smart adaptation மூலமாகவும் வளரப்போகின்றன.

ஒரு காலத்தில்:

•machine power தொழில்களை மாற்றியது
•internet market-ஐ மாற்றியது

இன்று AI business decision-making-ஐ மாற்றத் தொடங்கியுள்ளது.

ஆனால் இங்கே ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது.

AI என்பது மனிதர்களை முழுமையாக மாற்றும் கருவி மட்டும் அல்ல.
அது small entrepreneurs-க்கு ஒரு multiplier ஆகவும் மாற முடியும்.

இன்று ஒரு small business owner கூட AI மூலம்:

•product descriptions எழுதலாம்
•social media captions உருவாக்கலாம்
•logo ideas பெறலாம்
•marketing content உருவாக்கலாம்
•customer communication improve செய்யலாம்
•business planning support பெறலாம்

இதற்கு முன்பு இத்தகைய வசதிகள் பெரிய நிறுவனங்களுக்கே இருந்தன.

இப்போது technology democratization காரணமாக, ஒரு கிராமிய entrepreneur கூட advanced tools பயன்படுத்த முடிகிறது.

இதுவே future competitive advantage.

ஒரு முக்கியமான மாற்றம் என்னவெனில், future economy “hard work மட்டும்” அடிப்படையிலான பொருளாதாரம் அல்ல.

அது:

•smart work
•digital literacy
•creative adaptability
•fast learning

இவைகளின் பொருளாதாரம்.

இதனால் small entrepreneurs:

•technology-யை பயப்படாமல் அணுக வேண்டும்
•AI tools பற்றி அடிப்படை புரிதல் பெற வேண்டும்
•digital productivity culture உருவாக்க வேண்டும்

ஏனெனில் future market மிகவும் வேகமாக மாறப்போகிறது.

ஆனால் இன்னொரு ஆழமான உண்மையையும் நாம் மறக்கக்கூடாது.

AI எல்லாவற்றையும் உருவாக்க முடியும்.
ஆனால் மனித உணர்வை முழுமையாக உருவாக்க முடியாது.

இதனால் future-இல் மிகவும் மதிப்புமிக்கதாக மாறப்போகிறவை:

•authenticity
•handmade identity
•cultural uniqueness
•human storytelling
•emotional connection

அதாவது கிராமிய தொழில்களின் மனிதநேய தன்மையே எதிர்காலத்தில் அவர்களின் மிகப்பெரிய பலமாக மாறலாம்.

•ஒரு handmade food product.
•ஒரு traditional craft.
•ஒரு family-based production story.

இவை AI உருவாக்க முடியாத human value.

இதனால் future strategy என்னவாக இருக்க வேண்டும்?

“Technology + Humanity”

அதாவது:

•AI tools பயன்படுத்த வேண்டும்
•ஆனால் மனித touch இழக்கக்கூடாது
•automation embrace செய்ய வேண்டும்
•ஆனால் authenticity காப்பாற்ற வேண்டும்

இதுவே sustainable future entrepreneurship.

இன்று ஒரு entrepreneur வெறும் உற்பத்தியாளர் மட்டும் இல்லை.

அவர்:

•digital learner
•content creator
•community builder
•data observer
•AI-assisted strategist

ஆகவும் மாறிக்கொண்டிருக்கிறார்.

இந்த மாற்றத்தை ஏற்காத small businesses மெதுவாக market-இல் மறைந்து போகலாம்.

ஆனால் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் entrepreneurs:

•global customers-ஐ அடையலாம்
•niche brands உருவாக்கலாம்
•low-cost digital expansion செய்யலாம்
•உலக சந்தையில் தனித்த அடையாளம் பெறலாம்

இலங்கையின் எதிர்கால சிறு தொழில்கள் வெறும் survival economy-ஆக இருக்கக்கூடாது.
அவை innovation economy-ஆக மாற வேண்டும்.

ஒரு smartphone, ஒரு internet connection, மற்றும் கற்றுக்கொள்ளும் மனநிலை —
இவை இணையும் போது, ஒரு கிராமிய தொழிலும் உலகத்தோடு போட்டியிடக்கூடிய காலம் இது.

— முடிவு —

Wednesday, 8 July 2026

4.Digital Era இல் கிராமிய தொழில்கள்”Part 4.4 — E-Commerce வாய்ப்புகள்

#முர்ஷித்

ஒரு காலத்தில் ஒரு கிராமிய தொழிலின் சந்தை அதன் அருகிலுள்ள நகரம் வரை மட்டுமே இருந்தது.
இன்று அந்த zelfde தொழில், ஒரு இணைய இணைப்பின் மூலம் நாடு முழுவதையும் — சில நேரங்களில் உலகத்தையும் — அடையக்கூடிய நிலைக்கு வந்துள்ளது.

இதற்கான கதவு — E-Commerce.

Industrial Development Board of Ceylon உடன் பணியாற்றிய அனுபவங்களில், நான் ஒரு மிக முக்கியமான மாற்றத்தை கவனித்தேன்.
முன்பு entrepreneurs:

“எங்கே விற்கலாம்?” என்று சிந்தித்தார்கள்

இன்று அவர்கள்:

“எப்படி online-இல் scale செய்யலாம்?” என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுவே digital commerce-இன் புதிய மனநிலை.

E-Commerce என்பது வெறும் online selling அல்ல.
அது:

•digital visibility
•customer convenience
•direct access
•market expansion
•data-driven selling

இவைகளின் கூட்டுத்தொகை.

ஒரு கிராமிய entrepreneur இன்று:

•Facebook Shop உருவாக்கலாம்
•WhatsApp catalog maintain செய்யலாம்
•delivery partnerships அமைக்கலாம்
•online payments பெறலாம்
•nationwide orders handle செய்யலாம்

இதற்கு முன்பு இத்தகைய market reach பெரிய நிறுவனங்களுக்கே இருந்தது.

ஆனால் இன்று technology சந்தையை ஜனநாயகமாக மாற்றிவிட்டது.

ஒரு village-based food producer கூட:

•Colombo customers-க்கு விற்க முடிகிறது
•repeat online buyers உருவாக்க முடிகிறது
•தனது own digital brand உருவாக்க முடிகிறது

இதுவே borderless commerce.

ஆனால் online selling ஆரம்பித்தாலே business வளர்ந்து விடும் என்று நினைப்பது தவறு.

E-Commerce-க்கு தனித்துவமான discipline தேவை.

ஒரு online customer பார்க்கும் முக்கிய விஷயங்கள்:

•product photos
•clear descriptions
•pricing transparency
•delivery reliability
•customer reviews
•response speed

இவை அனைத்தும் business credibility-ஐ தீர்மானிக்கின்றன.

இன்று customers products-ஐ மட்டும் வாங்குவதில்லை.
அவர்கள் convenience-ஐ வாங்குகிறார்கள்.

அதனால் ஒரு small entrepreneur:

•ordering process எளிமையாக வைத்திருக்க வேண்டும்
•customer communication professional ஆக இருக்க வேண்டும்
•delivery delays குறைக்க வேண்டும்
•after-sales trust உருவாக்க வேண்டும்

இதுவே sustainable online business culture.

இன்னொரு மிக முக்கியமான மாற்றம் — data awareness.

Traditional selling-இல்:

•customer behavior guesswork ஆக இருந்தது

ஆனால் digital commerce-இல்:

•எந்த product அதிகம் விற்கிறது?
•எந்த நேரத்தில் orders வருகிறது?
•எந்த content customers-ஐ attract செய்கிறது?

போன்ற insights கிடைக்கின்றன.

இதுவே smart entrepreneurship.

ஆனால் இன்னும் பல கிராமிய தொழில்கள் digital hesitation-இல் இருக்கின்றன.

அவர்கள் நினைப்பது:

“online business நமக்கானது அல்ல”

“technology கடினம்”

“நாம் கிராமத்தில் இருக்கிறோம்”

ஆனால் உண்மையில் digital economy geography-யை மெதுவாக உடைத்துக்கொண்டிருக்கிறது.

இன்று location-ஐவிட:

•visibility
•quality
•communication
•customer trust

இவைகள்தான் முக்கியம்.

இதனால் கிராமிய தொழில்களுக்கு இது ஒரு unprecedented opportunity.

ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், E-Commerce small businesses-க்கு independence-ஐயும் கொடுக்கிறது.

முன்பு:

•shops மீது dependency
•middlemen மீது dependency
•limited physical reach
இருந்தது.

இப்போது:

•producer நேரடியாக customer-ஐ அடைய முடிகிறது
•தனது brand identity உருவாக்க முடிகிறது
•தனது pricing control செய்ய முடிகிறது

இதுவே digital empowerment.

ஆனால் இந்தப் புதிய உலகில் survive செய்ய வேண்டுமெனில் continuous learning அவசியம்.

ஒரு entrepreneur இன்று:

•technology-ஐ பயப்படாமல் கற்றுக்கொள்ள வேண்டும்
•online customer psychology புரிந்துகொள்ள வேண்டும்
•digital trends observe செய்ய வேண்டும்

ஏனெனில் எதிர்கால சந்தை increasingly online ஆக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு கிராமத்தில் அமைதியாக ஆரம்பித்த தொழில் கூட,
சரியான digital strategy இருந்தால், ஒரு நாடு முழுவதும் அறியப்படும் brand ஆக மாறக்கூடிய காலம் இது.

(தொடரும்…)

Monday, 6 July 2026

4. Digital Era இல் கிராமிய தொழில்கள்Part 4.3 — “TikTok மற்றும் கிராமிய சந்தைப்படுத்தல்”

#முர்ஷித்

ஒரு காலத்தில் விளம்பரம் என்பது பெரிய நிறுவனங்களின் அதிகாரமாக இருந்தது.
இன்று ஒரு smartphone camera கூட ஒரு கிராமிய தொழிலின் சந்தையை மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது.

அந்த மாற்றத்தின் மிக வேகமான முகங்களில் ஒன்று — TikTok.

பலர் இன்னும் TikTok-ஐ வெறும் entertainment platform ஆகவே பார்க்கிறார்கள்.
ஆனால் digital economy-யை நெருக்கமாக கவனித்தால், அது இன்று ஒரு powerful marketing ecosystem ஆக மாறிவிட்டது.
கள அனுபவங்களில் நான் கவனித்த ஒரு முக்கியமான மாற்றம் —
முன்பு visibility இல்லாமல் இருந்த பல small businesses, short video content மூலம் திடீரென மக்கள் கவனத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

ஒரு village food producer தனது cooking process-ஐ video ஆக பகிர்கிறார்.
ஒரு handicraft creator தனது handmade work-ஐ காட்டுகிறார்.
ஒரு tailoring entrepreneur before/after designs upload செய்கிறார்.

இந்த videos:
•thousands of views பெறுகின்றன
•புதிய customers-ஐ கொண்டு வருகின்றன
•brand curiosity உருவாக்குகின்றன

இதுதான் visual economy.

இன்று மக்கள் advertisements-ஐ மட்டும் பார்க்கவில்லை.
அவர்கள்:

•மனிதர்களை பார்க்க விரும்புகிறார்கள்
•உண்மையான கதைகளை பார்க்க விரும்புகிறார்கள்
•production journey-ஐ காண விரும்புகிறார்கள்

இதனால் TikTok போன்ற platforms authenticity-க்கு பெரிய இடம் கொடுக்கின்றன.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், high-budget production இல்லாமல்கூட good content உருவாக்க முடியும்.

ஒரு honest video:

•ஒரு கிராமத்தின் உழைப்பை காட்டலாம்
•ஒரு குடும்பத்தின் journey-ஐ சொல்லலாம்
•ஒரு product-ன் uniqueness-ஐ வெளிப்படுத்தலாம்

இதுவே emotional marketing.

ஆனால் இன்னும் பல small entrepreneurs camera-வைப் பயப்படுகிறார்கள்.

அவர்கள் நினைப்பது:

•“நாங்கள் professional அல்ல”
•“எங்களிடம் studio இல்லை”
•“எங்களால் content உருவாக்க முடியாது”

ஆனால் digital era-வின் புதிய உண்மை — perfection அல்ல, connection தான் முக்கியம்.

ஒரு simple authentic video கூட:

•trust உருவாக்க முடியும்
•customer engagement அதிகரிக்க முடியும்
virality பெற முடியும்

இன்று algorithm-driven platforms பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் ஆதரவாக இல்லை.
Creative storytelling உள்ள small creators-க்கும் வாய்ப்பு தருகின்றன.

இதனால் கிராமிய தொழில்களுக்கு இது ஒரு historic opportunity.

முன்பு:

•நகர நிறுவனங்களுக்கே visibility இருந்தது

இப்போது:

•ஒரு village entrepreneur கூட national audience-ஐ அடைய முடிகிறது

இதுவே digital equalization.

ஆனால் TikTok marketing என்பது வெறும் random videos upload செய்வது அல்ல.

ஒரு entrepreneur:

•consistent content உருவாக்க வேண்டும்
•தனது niche-ஐ புரிந்துகொள்ள வேண்டும்
•storytelling skill வளர்க்க வேண்டும்
•audience engagement maintain செய்ய வேண்டும்

மிக முக்கியமாக, content மற்றும் business quality இரண்டும் ஒன்றாக வளர வேண்டும்.

ஏனெனில் viral attention கிடைப்பது ஒரு விஷயம்.
அதை sustainable business ஆக மாற்றுவது வேறொரு விஷயம்.

இன்று customers online-இல்:

•transparency எதிர்பார்க்கிறார்கள்
•realness எதிர்பார்க்கிறார்கள்
•behind-the-scenes content விரும்புகிறார்கள்

இதனால் small businesses தங்களின் மனிதநேய முகத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு farmer.
ஒரு artisan.
ஒரு home baker.
ஒரு rural entrepreneur.

இவர்கள் இன்று வெறும் producers அல்ல.
அவர்கள் content creators-ஆகவும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இது புதிய பொருளாதார மொழி.

சில நேரங்களில் ஒரு 30-second video கூட,
ஒரு கிராமிய தொழிலின் பல வருட அமைதியான போராட்டத்தை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறது.

(தொடரும்…)

Sunday, 5 July 2026

4. Digital Era இல் கிராமிய தொழில்கள்Part 4.2 — “WhatsApp Business சக்தி”

#முர்ஷித்

இன்று உலகின் மிக சக்திவாய்ந்த business tools-ல் ஒன்று,
பல small entrepreneurs-களின் கைகளில் ஏற்கனவே இருக்கிறது.

அது ஒரு பெரிய software அல்ல.
Expensive system அல்ல.

அது — WhatsApp.
குறிப்பாக WhatsApp Business, இன்று கிராமிய தொழில்களுக்கு ஒரு அமைதியான digital revolution ஆக மாறியுள்ளது.

 கள அனுபவங்களில் நான் தெளிவாகக் கண்ட மாற்றங்களில் ஒன்று —
முன்பு customers-ஐ அடைய சிரமப்பட்ட பல small businesses, இன்று WhatsApp மூலமாக நேரடி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளன.

ஒரு home baker.
ஒரு tailoring entrepreneur.
ஒரு spices producer.
ஒரு handicraft seller.

இவர்கள் பலருக்கும் இன்று:

•orders
•inquiries
•customer feedback
•repeat sales

அனைத்தும் WhatsApp மூலமாகவே வருகிறது.

ஏன் இது இவ்வளவு முக்கியமான மாற்றம்?

ஏனெனில் WhatsApp communication-ஐ personal ஆக மாற்றுகிறது.

Facebook visibility தரலாம்.
ஆனால் WhatsApp relationship உருவாக்குகிறது.

ஒரு customer:

•நேரடியாக message அனுப்புகிறார்
•product details கேட்கிறார்
•trust develop செய்கிறார்
•order confirm செய்கிறார்

இதனால் business மிகவும் human-centered ஆகிறது.

ஆனால் இன்னும் பல entrepreneurs WhatsApp-ஐ சாதாரண chatting app போலத்தான் பயன்படுத்துகிறார்கள்.

உண்மையில் WhatsApp Business ஒரு complete micro-business system ஆக மாற முடியும்.

அதில்:

•business profile
•product catalog
•automated replies
•quick responses
•labels for customer management
•business hours information

போன்ற பல professional features உள்ளன.

ஒரு small entrepreneur கூட இன்று:

•தனது products-ஐ catalog format-இல் காட்டலாம்
•delivery details share செய்யலாம்
•payment information அனுப்பலாம்
•loyal customer network உருவாக்கலாம்

இதுவே digital relationship economy.

ஒரு முக்கியமான மாற்றம் என்னவெனில், WhatsApp small businesses-க்கு “direct market access” கொடுக்கிறது.

முன்பு: producer → middleman → shop → customer

இன்று: producer → customer

இந்த distance குறைவது small entrepreneurs-க்கு மிகப் பெரிய economic advantage.

இதனால்:

•profit margin மேம்படுகிறது
•customer understanding அதிகரிக்கிறது
•repeat business உருவாகிறது
•brand trust வலுப்படுகிறது

ஆனால் technology மட்டும் போதாது.

ஒரு entrepreneur digital professionalism-யும் கற்றுக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக:

customer messages-க்கு தாமதமில்லாமல் பதில் அளித்தல்

•clear pricing
•polite communication
•proper delivery coordination
•after-sales relationship

இவைகள் மிகவும் முக்கியமானவை.

ஏனெனில் online business-இல் first impression பல நேரங்களில் message மூலமாகவே உருவாகிறது.

இன்று customers:

•quick response எதிர்பார்க்கிறார்கள்
•clarity எதிர்பார்க்கிறார்கள்
•professionalism எதிர்பார்க்கிறார்கள்

இதனால் WhatsApp communication itself ஒரு business skill ஆக மாறியுள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் —
WhatsApp இன்று community commerce-ஐ உருவாக்குகிறது.

ஒரு satisfied customer:

•product photo share செய்கிறார்
•status போடுகிறார்
•friends-க்கு recommend செய்கிறார்

இதனால் organic marketing உருவாகிறது.

இதுவே digital word-of-mouth economy.

முன்பு ஒரு கிராமிய தொழிலின் reach மிகவும் குறைந்தது.
இப்போது ஒரு WhatsApp forward கூட புதிய சந்தைகளைத் திறக்க முடிகிறது.

ஆனால் இந்த digital era-வில் entrepreneurs கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் — trust.

Online world-இல் trust build செய்ய:

•honesty
•consistency
•quality
•customer care

இவைகள் மிகவும் அவசியமானவை.

ஏனெனில் technology business-ஐ தொடங்க உதவும்.
ஆனால் நம்பிக்கையே அதை நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்யும்.

இன்று ஒரு smartphone வெறும் communication device அல்ல.
அது:

•ஒரு கடை
•ஒரு marketing office
•ஒரு customer service centre
•ஒரு business network

ஆக மாறிவிட்டது.

சில நேரங்களில் ஒரு small entrepreneur-ன் மிகப்பெரிய business expansion,
ஒரு WhatsApp notification-இல்தான் ஆரம்பிக்கிறது.

(தொடரும்…)