Monday, 8 December 2014

உலகத்தமிழ் இலக்கியத்தின் இலட்சிய புத்திரன் 'எஸ்.பொ.'எனும் எஸ்.பொன்னுத்துரை.

தமிழ் உலகின் மூத்த ஆளுமை 'எஸ்.பொ' எனப்படும் எஸ்.பொன்னுத்துரை!, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 26-11-2014 அன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். இவரை பற்றியும் இவரது இலக்கிய பணிபற்றியும் இன்றைய மற்றுமன்றி எதிர்கால இலக்கிய செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைரும் தெரிந்திருத்தல் காலத்தின் கட்டாயமாகும் அந்தவகையில் எஸ்.போவின் உற்ற நண்பரான இளம்பிறை எம்.ஏ ரகுமபன், மூத்த இலக்கிவாதி, கலாபூசணம், சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் மற்றும் இஸ்லாமிய இலக்கியக்காவலர் எஸ்.ஏ.ஆர்.எம் செய்யிது ஹஸன் மௌலானா ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கட்டுரை எழுதியிருக்கிறேன். 

Sunday, 7 September 2014

மலைக்காட்சி
















பச்சை போர்த்திய மலைகள்!..-நன்றாய்
இச்சை ஊட்டிய மலர்கள்!..
பிச்சை கொட்டிய அருவி!..-அழகாய்
கச்சை கட்டிய குறவர்!..

கட்டையோரம் ஊரும் அட்டை-கண்டேன்

அட்டையில் தீட்டா ஓவியமாய்!..

மலையூர் செல்லும் நரைமேகங்கள்-நன்றாய்
கலையூர் கொள்ளை கொண்ட திரவியமாய்!..

பாம்பாட்டம் ஆடிவரும் ஆறுகள்-பார்த்து
தெம்பூற்றாய் தேறிவந்தது உள்ளம்!..
கொம்புத்தேன் வழிந்தோடிய விழியில்-இனிமை
கொவ்வைக்கனியாய் கனிந்து நின்றது மனசு!..

காலைப்பனி காதலனை மடிதாங்கும்-நன்றாய்
காதலிப்புல் நுனி சாயும்!..
காமக்கதையை படித்து முடித்து-அதிகாலை
சிந்திய கண்ணீர்; அமுதப்பன்னீர்!..

பனியை மோரும் குதிரை-உற்று
குதியை கீறும் குளிரால்!..
மதியில் ஊறும் கவிதை-சற்று
உயிரில் உரசும் எழிலால்!..

தாவரங்கள தாங்கிய பட்சிகள்-பச்சை
பூமரங்கள் சிந்திய தேன் துளிகள்!..
கொடிமரங்கள் பற்றிய கொழுகொம்பு-கொழு
பொடிவைக்கும் அழகின் அலைவரிசை!..

இத்தனையும் அத்தனையாய் பத்திரமாய்-கண்டேன்
இன்பத்தின் அத்வைத பாத்திரமாய்!..
நுவரெலிய பயணத்தில்-நான்
மலை ஏறிய பேரூந்தில்!...

 மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)

காதல்!
















காதல்!-என்ற
மூன்றெழுத்துக்குள் முழு
பிரபஞ்சமேயடங்கி கிடக்கிறது!..

காதல்! தான்
உயிருக்கான அத்தாட்சி!..
உணர்வுகளுக்கான அரிச்சுவடி!..

எரிமலை குமுறுகிறதா?
'காதல்!..' என்ற சொல்லை
காற்றில் தூதுவிடுங்கள்-அது
பனிமலை ஆகிவிடும்!..

சூரியனில் ரோஜா
நட வேண்டுமா?..
காதலை நீராக்குங்கள்!..
காதலை உரமாக்குங்கள்!..

ஓராயிரம் ஆண்டுகள் செய்த
தவவலிமை கூட ஓர் நொடியில் 
பஸ்பமாகிவிடுகிறது!..
காதல் பார்வையில்!..

காதல்!
ஆக்கவும் செய்கிறது!..
காதல்!
அழிக்கவும் செய்கிறது!..

காதலில் தான்
உலகம் பிறந்தது!..
காதலால் தான்
உலகம் இறக்கயிருக்கிறது!..

 மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)

Tuesday, 26 August 2014

கண்ணீர் மடல்...



உலகில் காதலர்கள் எல்லாம்
பேசிக்கொள்ளும் ஒரே மொழி
மௌனம்!..


நீ கண் அசைத்தால்
இடிந்து போகிறது
என் இதயம்!..

என் இரவுகளுக்கு
தானம் செய்கிறேன்
உன் நினைவுகளை!..

என் கண்கள்
பேசும் பாசை
உனக்கு புரிகிறதா?..

என் விழிகள் வரைகிறது
ஆயிரம் மடல்கள்
உனக்காகவே!..

புதிதாய் மலர்கிறது
என் கண்கள்
உன்னை காணும் போதெல்லாம்!..

கனவுகளை மட்டும் ஓட விட்டு
என் கண்களை
திருடிக் கொண்டாய்!..

என் கனவில்
அஞ்சலிட்ட கடிதம்
உன்னை வந்து சேர்ந்ததா?..

என் கண்கள்
அடிக்கடி பிரசவிக்கிறது
கண்ணீரை மட்டும் தான்!..

* மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*




பிரபல சிறுகதையாசிரியர் எஸ். முத்துமீரானின் '' மானிடம் உயிர் வாழ்கிறது'' எனும் சிறுகதைக்கான எனது விமர்சனம் 2014.08.23 (சனி) அன்று வீரகேசரியின் 'சங்கமம்' இலக்கியப்பகுதியில் வெளியானது
வீரகேசரியின் ''சங்கமம்'' இலக்கியப் பகுதி 

முதுமை


மன மலரில்
தேன் ஊறுகிறது...
தேக வேரில்
தண்ணீர் ஏருகிறது...
முதுமை!
தகமை!
முதுமை!
அறிவின் முதிர்ச்சி!

கல்விச்சோலையில்
தென்றலாய் உலாவியபோது
பட்டமும் பதவியும்
இரு கண்களாய் கிடைத்தன!..
செல்வமும் கௌரமும்
வாழ்வின் தூண்களாய்
நிலை நிறுத்தின!..
இப்படி...
இப்படி...
அழைப்பிதல் தந்து
அழைத்துச்சென்றது முதுமையிடம்...

போசாக்கான உணவுக்குளத்தில்
குளித்தபோது
ஆரோக்கியம் பளிச்சிட்டது!..
பால்,பழங்கள்,
தாணியங்கள்,தாவரங்கள்
உண்டபோது
நோய்கள் பயந்தோடின
நெருங்காமல் 
அவை மாண்டன!..

அழகான கவிதைபோல்
மனைவி!..
முத்து பூத்தாற்போல்
இரு பிள்ளைகள்!..
சொத்தாக வித்தாக
வாழ்வின் சத்தாக
கல்விப்பால் ஊட்டி
நல்ல நிலை செய்தபோது
அமைதி வெளியில்
சிறகு முளைத்து பறந்தேன்!..

கற்கண்டு வாழ்க்கையில்
தித்திப்பு கரந்தேன்!...
முதுமை மாணிக்கமானது
பட்டை தீட்டதீட்ட!..
முதுமை முழுமையானது..
மகிழ்ச்சி ஊறஊற!..

வாழக்கை சாலையின்
ஓரத்தில் வந்து நின்றபோது
பௌர்ணமி கொண்டது 
என் முதுமையில்
கல்வியால் வென்றேன
என் ஆயுளை!..

('தேசிய முதியோர் வாரம்-2010' யில் நிந்தவூர் பிரதேச செயலக போட்டியில் வெற்றி பெற்றது)

*மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*

Wednesday, 16 July 2014

முஸ்லீம் நாட்டார் இலக்கிய பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆய்வாளர் எஸ்.முத்து மீரானும் அவரின் பணியும். -கவிஞர்.இலக்கியன் மு.முர்சித்-



ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் சார்ந்த வரலாற்று விழுமியங்களை குறைகளின்றி நிறைவாகக் கூறும் இலக்கியங்களில்> நாட்டுப்புற இலக்கியங்களே முதன்மை பெற்று விளங்குகின்றன. உலகில் மனிதன் தோன்றி அவன் சமூதாயக் குழுக்களாக வாழத்தொடங்கிய காலத்திலிருந்து நாட்டார் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. எழுத்தறிவில்லா இம் மக்கள் தங்களது உணர்வுகளையெல்லாம் தங்களுக்குத் தெரிந்த மொழியின் மூலம் இலக்கியங்களாக படைக்கத்தொடங்கினார்கள்.

Friday, 27 June 2014

குறுங்கவிதை-தினக்குரல்


கடந்த 2010.12.05 ஞாயிறு தினக்குரலில் (இலங்கை) வெளியான எனது குறுங்கவிதைகள் , நன்றி தினக்குரல் வாரமஞ்சரி.

அரபு வசந்தம்-தினக்குரல்



கடந்த 2014.05.25 ஞாயிறு தினக்குரலில் (இலங்கை) வெளியான ''அரபு வசந்தம்'' எனும் எனது கவிதை ,நன்றி தினக்குரல் வாரமஞ்சரி.

Saturday, 10 May 2014

அன்னை





















அன்பு,பாசம்,
அரவணைப்பு,பாதுகாப்பு
இவை எல்லாம்
அன்னை என்ற சொல்லின்
அவதாரங்கள்!..

அன்னை!
பத்து மாதங்கள் தான்
கருவறையில் சுமந்தாள்!..
ஆயுள்வரை-தன்
நெஞ்சறையில் சுமக்கிறாள்!..

உனக்கு ஓர்
தீங்கு நிகழ்கிறதா?
உயிரிருந்தும் உயிரற்று
போகிறாள்
அன்னை!..

உலகை
அறிமுகம் செய்தவர்
தந்தையாகலாம் ...
தந்தையை தந்தவள்
அன்னைதான்!..

அன்னை!
ஓர் முத்தம் இடுகிறாள்
ஆயுளோ.. 
தூய்மையடைகிறது!..
ஆறிவை சலவை செய்கிறாள்
உனக்கு
நிலாக்காட்டி சோறூட்டிய போது!..

அன்னை தான்-உன்
நன்மை!..

அன்னையை
அபிசேகம்செய்யுங்கள்.. 
அன்பால்!.. -ஆயுள் முழுதும்
அழகு செய்யுங்கள்...
ஆதரவால்!..

அன்னை தான்-உன்
நன்மை!..

*இலக்கியன் மு.முர்சித்*

Tuesday, 6 May 2014

தர்மம்













பத்து ரூபா
கொடுக்காத நீ
நாளை
தொலைப்பாய்
பத்துஆயிரம் ரூபாவை!..

உனது தலையை
நீ
காக்கவில்லை
காக்கிறது தர்மம்!..

கொடுப்பதற்காக
நீளுகின்ற உனதுகை
சாவியாக மாறும்
சுவனக்கதவை 
திறப்பதற்கு!..

ஏழைகளின் கண்ணீரை
தொடைக்கின்ற
உனது தர்மம்.
உன்வீட்டுக்கு
அழைத்து வருகிறது
சந்தோசத்தை!..

உலோபியின்
செல்வத்திற்கு
உயிர் இல்லை!..
உனது செல்வம்
உயிர் பெருகிறது!..
தர்மம்
செய்யச்செய்ய....

நீ பாழுங்கிணறு
ஆகிறாய்
தர்மம் 
செய்யாதுதபோது!..

நீ
மழைபோன்று
ஆகிறாய்
தர்மம்
செய்கிறபோது!..

உனது
தர்மங்கள்
சிப்பியில் விழுகிற
நீர்த்துளி போல
மறுமையில் விளைந்திடும்
நல் முத்துக்களாய்!..

இருக்கும்போது
இல்லை என்று 
சொல்லிவிடாதே..
நீ
மனிதன் இல்லை என்று 
சொல்லிவிடும்-அது!..

தர்மம்
ஆயிறம் வணங்களையும்
விடப்பெரியது!..

தர்மம் செய்!
பெரும் தாகத்துடன்!..
பெரும் தேடலுடன்!..


*இலக்கியன் மு.முர்சித்*

Saturday, 3 May 2014

இயற்கை

















இறைவன் சொல்கிறான்
இயற்கை மூலம்
நான் பேருண்மை என்று!..

வானம் குடை!..
பூமி பூத்துக்கிடக்கிறது
அதற்குள்!..

பூமிக்கு உயிருண்டு என்பதை
நிரூபிக்கின்றன
தாவரங்கள்!..

பூமி
புன்னகைக்கின்றது
ஆஹா பூக்கள் மூலம்!..

கடல்,ஆறு,அருவி,ஏரி
மழைபடைத்த
வளங்கள் இவை!..

கார் மேகம்
கரைந்து கரைந்து
பூமியில் இறங்குகிறது
மழையாக!..

விருச்சங்களின் மகாநாடு
காடு!..-அது
மிருகங்கள்,பறவைகளின்
கூடு!..

இயற்கை எழுதிய 
மிக அழகான கவிதை
உயிரினங்கள்!..

இயற்கை!
வரம் எமக்கு..

மனிதா!
நீ இயற்கை!..

நீ
இயற்கையை சிதைக்கிறாய்!
உன்னை நீயே
சிதைக்கிறாய்!

இயற்கையை 
நேசி-நீ
புனிதனாவாய்!..

இலக்கியன் மு.முர்சித்

செம் மொழி















வார்த்தைப்பூக்களுக்கு 
வசந்த காலம்!..
பேனை முற்களில்
கவி பூக்கள் மலர்ந்தபோது!..

தேனீக்களின் தேர்வலம்!
காகித நிலவில்
தேன் ஊற்று 
கண்டுபிடிக்கப்பட்டபோது !.. 

மொழி மாநாட்டில்
'தமிழ்'
பௌர்ணமி தேன் கூடு!..

மொழி!
என்ற சொல் இனிக்கிறது -அதை
உச்சரிக்கும் போது!..

நாவும் புனிதமடைகிறது
தமிழ் எழுத்துகளில்-அது
உயிர்க்கும்போது!..

செம் மொழி!..
நம் மொழி!..
தொன் மொழி!..
பொன் மொழி!..
தமிழ் மொழி..
வாழிய வாழிய..
பெரு மொழி..
வாழிய வாழியவே....

*இலக்கியன் மு.முர்சித்*

சிந்தனை செய்




சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

சிறகுகள் முளைக்கிறதா?
உன் கனவுகளுக்கு...
நாளைய உலகம்
உன்கையில்!..

சிந்தனைகளை செயலால்
பட்டை தீட்டுகிறாயா?
உன் தோல்விகளும்
வெற்றி படியாகிறது!..

சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

புத்தாக்க சிந்தனையை நம் 
சொத்தாக்க வேண்டும்!..
தித்திப்பாய்;வசந்த
மத்தாப்பாய் வாழ்க்கை மணக்க!...

அக்கினி சுடரில்-ஓர்
தேன்துளி கசிகிறது!..
விடாமுயற்சி1- அதில்
தேன்தேடியபோது!

சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

இலக்கியன் மு.முர்சித்

கல்வி





















மதியே கரைகிறது
கல்வியால்!
புதிய உலகை பிரசவிக்க...

நீ கற்கின்றாயா?
ஒரு மலர் மலர்கின்றது!..
நீ கற்பிக்கின்றாயா?
ஓராயிரம் வண்டுகள்-அதில்
இஸ்பரிசிக்கின்றன!..

கண்டதை கற்பவன்
பண்டிதன் ஆவதில்லை!..
கண்டதை ஆய்ந்து
நன்றதை நன்கவன் கற்பதால்
பாண்டித்தியம் புனிதம் அடைகிறது!..

கல்வி!- அது
நெல் மணி!..
உழுதுகின்றனர் கரும்பலகை 
உழவர்கள்...
மாணாக்கர் பசி -அதில்
மாய்கின்றது!..

புத்தகங்கள் சொல்வது மட்டும்
கல்வியல்ல-உன்
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்
கல்விக்கான புனித
யாத்திரைதான்!

சூரிய ஆசான்கள்
ஒளி வழங்குகின்றனர்!..
நாளைய இருளில்
மின்மிப்பூச்சிகள்-நாம்
ஒளிகாண!..

கல்வி!- அது
காடு!..
கடல்!..
வானம்!..
ஏன் முழுப்பிரபஞ்சமும் கல்விதான்!..
முயற்சி உள்ளவனுக்கு!..

நீ
கற்கின்றாயா?
உன்
வாழ்க்கையை காதலிக்கின்றாய்!...

நீ
கற்றலை வெறுக்கின்றாயா?
உன் வாழ்க்கையை 
உயிருடன் புதைக்கின்றாய்!..

*இலக்கியன் மு.முர்சித்*

Tuesday, 29 April 2014

மாறாது















நிலா முகம்
வட்டம் ஆகலாம்!..
உலா வருகையில்
தேய்ந்து போகலாம்!..

தென்றல் அவிழ்த்த
மொட்டும் கூம்பலாம்!..
மொட்டு உமிழ்ந்த
தேனும் காயலாம்!..

மறையாது - என்றும்
என் கனவுத்திரையில்
உன் நினைவுப்படங்கள்!..

மாறாது - என்றும்
நம் காலத்திரையில்
காதல்ப்பாடல்கள்!..

*இலக்கியன் மு.முர்சித்*  

ஓர் கண்ணீர் துளி




















என்
கல்லறை கனாக்களில்
நம்
காதல் கவிதைகளின்
ராஜாங்கம்!..

உன்
புருவ வாட்களால்
புன்னகை புயல்
தாக்கியபோது !..

நீ
கல்யாணி வாசித்தாய்
முகாரிய வாடை -என்
நினைவுகளில்!.. 

'நீ
என் நிழலாய்'என்றாய்
'நீயாய் நான்' என்றபோது!.. 

நீ-என் 
கல்லறையில் மலர்கள்
வைக்கத்தேவையில்லை!..

ஓர் 
கண்ணீர் துளி போதும்
நம்
காதலாவது வாழட்டும்!..

*இலக்கியன் மு.முர்சித்*  

Monday, 28 April 2014

ஆழிப்பேரலையால்












மனிதா!..- உன்
அழ்ந்த உறக்கம் களைந்தது
ஆழிப்பேரலையால்!..

மனிதா!..-நீ; பணத்தில்
அழ்ந்த உலகை கண்டதும்
ஆழிப்பேரலையால்!..

மனிதன் மட்டும் அழியவில்லை
ஆழிப்பேரலையால்!.. 
மனிதமும் கூடவே அழிந்ததுவிட்டது
ஆழிப்பேரலையால்!.. 

வடுக்கள்மாறா.. நினைவுத்திரிகள்..
இன்றும் எரிவது கண்ணீரால்!..

*இலக்கியன் மு.முர்சித்*

காதல் உலகம்














காதல்!
என்று சொல்லிப்பார்
உலகமும் பீனிக்ஸ் 
பறவைதான்!..

காதல் தான் உலகம்!
உலகம் தான் காதல்!
என்றான போது!..

காதல்!
சடத்துவத்தை மீறியது-அது
அத்வைதமானது!..

வாழத் தெரியாதவனாகிறாய்-நீ
காதலிக்க தெரியாத போது!..

உடம்பில் 
உயிர் இல்லாதவன்
''பிணம்'' இல்லை...

உணர்வில்
காதல் இல்லாதவன்
''உயிருள்ள பிணம்'' ஆகின்றான்!..

*இலக்கியன் மு.முர்சித்*

கல்லறை கதை



















என் 
அங்கங்கள் செயலிழந்து
புலன்கள் புலம்பெயர்ந்து
விட்டது...

என் 
இதய ரோஜாவை-ஓர்
சூரியசுனாமி சுட்டெரித்து
விட்டது..

விருந்தோ...
மருந்தாய்!..ஆனது
மருந்தோ... 
விருந்தாய் ஆனபோது

என்
நினைவுகள் பரிதவிக்கும்
கல்லறை கதைக்கு-என்
கண்ணீர் கவிதை எழுதுகினறேன்!..

''என்
வாழ்க்கை சிற்பமானது
உன்
உறவுகளால்!..; உணர்வுகளால்!..'' 

*இலக்கியன் மு.முர்சித்*