Saturday, 3 May 2014

கல்வி





















மதியே கரைகிறது
கல்வியால்!
புதிய உலகை பிரசவிக்க...

நீ கற்கின்றாயா?
ஒரு மலர் மலர்கின்றது!..
நீ கற்பிக்கின்றாயா?
ஓராயிரம் வண்டுகள்-அதில்
இஸ்பரிசிக்கின்றன!..

கண்டதை கற்பவன்
பண்டிதன் ஆவதில்லை!..
கண்டதை ஆய்ந்து
நன்றதை நன்கவன் கற்பதால்
பாண்டித்தியம் புனிதம் அடைகிறது!..

கல்வி!- அது
நெல் மணி!..
உழுதுகின்றனர் கரும்பலகை 
உழவர்கள்...
மாணாக்கர் பசி -அதில்
மாய்கின்றது!..

புத்தகங்கள் சொல்வது மட்டும்
கல்வியல்ல-உன்
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்
கல்விக்கான புனித
யாத்திரைதான்!

சூரிய ஆசான்கள்
ஒளி வழங்குகின்றனர்!..
நாளைய இருளில்
மின்மிப்பூச்சிகள்-நாம்
ஒளிகாண!..

கல்வி!- அது
காடு!..
கடல்!..
வானம்!..
ஏன் முழுப்பிரபஞ்சமும் கல்விதான்!..
முயற்சி உள்ளவனுக்கு!..

நீ
கற்கின்றாயா?
உன்
வாழ்க்கையை காதலிக்கின்றாய்!...

நீ
கற்றலை வெறுக்கின்றாயா?
உன் வாழ்க்கையை 
உயிருடன் புதைக்கின்றாய்!..

*இலக்கியன் மு.முர்சித்*

No comments:

Post a Comment