Saturday, 3 May 2014

இயற்கை

















இறைவன் சொல்கிறான்
இயற்கை மூலம்
நான் பேருண்மை என்று!..

வானம் குடை!..
பூமி பூத்துக்கிடக்கிறது
அதற்குள்!..

பூமிக்கு உயிருண்டு என்பதை
நிரூபிக்கின்றன
தாவரங்கள்!..

பூமி
புன்னகைக்கின்றது
ஆஹா பூக்கள் மூலம்!..

கடல்,ஆறு,அருவி,ஏரி
மழைபடைத்த
வளங்கள் இவை!..

கார் மேகம்
கரைந்து கரைந்து
பூமியில் இறங்குகிறது
மழையாக!..

விருச்சங்களின் மகாநாடு
காடு!..-அது
மிருகங்கள்,பறவைகளின்
கூடு!..

இயற்கை எழுதிய 
மிக அழகான கவிதை
உயிரினங்கள்!..

இயற்கை!
வரம் எமக்கு..

மனிதா!
நீ இயற்கை!..

நீ
இயற்கையை சிதைக்கிறாய்!
உன்னை நீயே
சிதைக்கிறாய்!

இயற்கையை 
நேசி-நீ
புனிதனாவாய்!..

இலக்கியன் மு.முர்சித்

No comments:

Post a Comment