Monday, 16 October 2023

அல் குர்ஆன் இஸ்லாமியர்களுக்கான புனித நூல் மட்டுமல்ல; முழு உலகத்தாருக்குமான வாழ்க்கை வழிகாட்டி .

முர்ஷித்  

அல் குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கான புனித நூல் மட்டுமல்ல, இன மத பேதங்களின்றி முழு அகிலத்தாருக்குமான அருட்கொடையாகும். அதில் உள்ள அழகிய படிப்பினைகள் மற்றும் நேர்வழிகள் அனைத்து மனிதர்களுக்கும் பயனளிக்கும்.


அழகிய படிப்பினைகள்

குர்ஆனில்  மனித வாழ்க்கைக்கு தேவையான அழகிய படிப்பினைகள் பெருமளவு சொல்லப்படுகிறது. அவற்றில் சிலதை பார்க்கலாம், 

1.நீதி, நேர்மை மற்றும் சமத்துவம்:

அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் நியாயத்தை நிலைநாட்டவும், தீமையைத் தடுக்கவும் முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் நீதி நியாயத்தை விரும்புபவர்." (அல் குர்ஆன் 7:199)

Sunday, 15 October 2023

இளைஞர்களிடத்தில் சுயதொழில் மற்றும் முயற்சியாண்மையை ஊக்குவிப்பதன் அவசியம்.

முர்ஷித்

இலங்கை தற்போது பொருளாதாரச் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தச் நெருக்கடியை சரியாக எதிர்கொள்ள, அரசாங்கம் மற்றும் தனியார் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமான ஒன்றாக இளைஞர்களிடத்தில் சுயதொழில் மற்றும் முயற்சியாண்மையை ஊக்குவிப்பது உள்ளது.


இளைஞர்கள் இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர். 2023 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, இலங்கையின் மக்கள்தொகையில் 60% பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள். எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது.

Saturday, 14 October 2023

குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் நாட்டின் நிலைபேருடைய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குமான சாத்தியப்பாட்டை திறப்பதற்கான வழி வகை.

முர்ஷித்

இலங்கையில் சமீபகாலமாக குற்றச்செயல்கள் பெருமளவு அதிகரித்திருப்பது செய்திகளூடாக அறியமுடிகிறது. கொலை, கொள்ளை, துப்பாக்கிச்சூடு, விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு, லஞ்சம் மற்றும் ஊழலென தினம் தினம் குற்றச்செயல்கள் பெருகிக்கொண்டே செல்கின்றன. இதற்கு நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியும் காரணமாக இருக்கலாம்.

குற்றச் செயல்கள் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும் சாபக்கேடாகவுமிருக்கிறது. குற்றச் செயல்கள் அதிகரிக்கும்போது, அது சமூகத்தில் அச்சம், பதற்றம் மற்றும் வன்முறை ஆகியவற்றை உருவாக்குகிறது.


இது பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, சமூக ஒற்றுமையைக் சீர்குழைக்கிறது மற்றும் நாட்டின் மதிப்பைக் குறைக்கிறது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வலுவானதும் அரசியல் தலையீடற்ற சுயாதீனமான நீதித்துறையின் அவசியம்

முர்ஷித்

சட்டத்தின் ஆட்சி என்பது ஒரு நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை ஒரு சட்டம் ஆளும் நாடு என்பதால், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதில் நீதித்துறையின் பங்கு மிக முக்கியமானது.

வலுவானதும் அரசியல் தலையீடற்ற சுயாதீனமான நீதித்துறை என்பது ஒரு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், அநீதிகளைத் தடுப்பதற்கும், நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அவசியம்.


சமீபகால இலங்கை வரலாற்றில், நீதித்துறை அரசியல் தலையீட்டிற்கு பலமுறை உள்ளாக்கப்பட்டுளமை யாவரும் அறிந்தவிடயமே. இதன் விளைவாக, பல அநீதிகள் நிகழ்ந்துள்ளன.

கடுமையான சமூக மற்றும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் அரச ஊழியர்கள்.

முர்ஷித்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக அரச ஊழியர்கள் மத்தியில் கடுமையான சமூக மற்றும் மன அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அழுத்தங்கள் தீவிரமானதாகி, சமூகத்தில் கலவரங்கள் மற்றும் சமூக ஒழுங்கின்மைக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

சமூக அழுத்தங்கள்

வருமான வீழ்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் உள்ள பல குடும்பங்கள் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பராமரிப்பதில் சிரமப்படுகின்றன. இதன் விளைவாக, அவர்களுக்கு இடையே குடும்ப உறவுகளில் பிரச்சினைகளும் சிக்கல்களும் ஏற்படுகின்றன.


மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் வருமான வழிகள் பெருமளவு குறைந்துள்ளன. இதன் விளைவாக, இளைஞர்கள் வேலையைப் பெறுவதில் சிரமப்படுகின்றன. இதனால், அவர்களிடம் விரக்தி மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது.

கனவு

ஓர்
சன்னக்குரலில்
ஊமைக் கனவுகளை
மொழிமாற்றம்
செய்துகொண்டிருக்கிறேன்
முகாரிராகப்பாடலை போல

ஓர்
தெருப்பாடகனின்
கீதாஞ்சலியில்
நனைந்து கொண்டிருக்கிறது
தனிமை வடிவில்
கனவு

#முர்ஷித்
02.10.2023


இலக்கியமும் அரசியலும் இரண்டு கண்கள் போன்றவை.

முர்ஷித்

இலக்கியமும் அரசியலும் மக்களுக்கான இரண்டு கலைகள். அவை இரண்டு கண்கள் போன்றவை. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை அல்லது பிரதிபலிப்பை செய்யக்கூடியவை.

இலக்கியம் மக்களின் கனவுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்கிறது. எனவே, இந்த இரண்டு துறைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன.


புராண காலங்களில் அரசர்களின் சபைகளில் அமைச்சர்கள் மற்றும் புலவர்கள், எழுத்தாளர்கள் சம அந்தஸ்துடன் இருந்தனர்.



அரசர்களால் புலவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் அற்றல் மற்றும் அறிவைப் பயன்படுத்தி தங்கள் நாட்டை கல்விச்செல்வம் செழுமையுற ஆட்சி செய்யப்பட்டது. புலவர்கள் அரசர்களின் ஆட்சியை நேர்மையாக விமர்சித்து, மக்களின் நலன்களைப் பாதுகாத்தனர்.

ஆனால் இன்றைய கால கட்டங்களில், அரசியலையும் இலக்கியத்தையும் அல்லது அரசியல்வாதிகளையும் இலக்கியவாதிகளையும் துருவப்படுத்தும் சம்பவங்கள் மற்றும் கருத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த துருவப்படுத்தும் மனநிலையால்தான் நாம் அரசியல் அனாதைகளாகவும், அரசியல்வாதிகளின் அடிமைகளாகவும் இருக்கிறோம். அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக மக்களையும் ஆட்சி அதிகாரங்களையும் பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது. மக்களின் நலன்கள் பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

சிலர் அரசியல் என்பது ஒரு தீய துறை, அது தீண்டத்தகாதது என்று நம்புகிறார்கள். அவர்கள் இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் அரசியல் பற்றி பேசுவதும் எழுதுவதும் தவறு என்று கருதுகின்றனர்.

இலக்கியவாதிக்கு அரசியல் எதற்கு என்று விமர்சிப்பது அறிவீனர்களின் நிலைப்பாடாகும்.

இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்கள் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும், எழுதவேண்டும்.

 அரசியல் என்பது சமூகத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே, இலக்கியவாதிகள் அரசியல் பற்றி பேசுவதும் எழுதுவதும் அவசியம்.

அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி கலை, இலக்கியவாதிகள் மட்டுமின்றி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் சிந்திக்கவேண்டும், பேச வேண்டும், எழுத வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் திறன்களைப் பயன்படுத்தி சமூகத்தை மேம்படுத்த வேண்டும்.

அதேபோல, அரசியல்வாதிகளும் சமூகத்தின் பிற துறைகள் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும்.

அப்போதுதான் நம் சமூகம் விடியலைக் காண முடியும். அனைவரும் ஒத்துழைந்து செயல்பட்டால், நம் சமூகம் ஒரு சிறந்த இடமாக மாறும். அனைவரும் சமமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் திறன்களைப் பயன்படுத்தி வெற்றிபெறுவார்கள்.

ஆளுமைமிக்க தலைமைத்துவம் ஒரு சமூகத்தின் அடித்தளம்.

முர்ஷித்

ஒரு சமூகம் தனது உரிமை மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்களை சிறந்த முறையில் முன்னேற்றவும் பாதுகாக்கவும் ஆளுமைமிக்க தலைமைத்துவம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆளுமைமிக்க தலைவர்களால் ஒரு சமூகத்தின் இலக்குகள் மற்றும் நலன்களை அடைய ஒரு திசையை அல்லது முன்மாதிரியை வழங்க முடியும். 


அவர்களால் சமூகத்தை ஒருங்கிணைக்கவும், ஒரு பொதுவான நோக்கத்தை நோக்கி செயல்படவுமாகவுமிருக்கும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் செல்நெறி: ஒரு பார்வை

முர்ஷித்

முஸ்லிம் சமூகமானது இலங்கையின் மொத்த சனத் தொகையில் சுமார் 9.7% ஆகும். இவர்கள் இலங்கையின் மூன்றாவது பெரிய சமூகமாக உள்ளனர்.

இந்த சமூகமானது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இதனால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் செல்நெறியானது ஒற்றைத் திசை கொண்டதல்ல என்பதை குறிப்பிடமுடியும்.

சற்றே தள்ளி நில்லுங்கள்

படுக்கையறைக்குள் நுழைந்த
நிழலின் நிற நாய்க்குட்டியொன்று
கவிதைகளுக்குள்
வாலாட்டுகிறது
கவிதைகள்
தனிமையை போர்த்தியபடி 
அமைதியின் வழியில் 
நடக்க முனைகிறது
இப்போது அந்த நாய் 
குரைக்க ஆரம்பித்துவிடலாம் 
சற்றே தள்ளி நில்லுங்கள் 
சிலவேளை 
கடித்தும் விடலாம்

#முர்ஷித்
12 Oct 2015

தென் கிழக்கின் கரையோர கிராமங்களை மேயும் கடல்; ஒழுவில் துறைமுகமும் அதன் விளைவுகளும்.

-முர்ஷித்

ஒலுவில் துறைமுகம்.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் துறைமுகமானது 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. டென்மார்க் அரசின் 46.1 மில்லியன் யூரோ வட்டியில்லா கடனுடன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 5 வருடகால கட்டுமான பணிகளைத் தொடர்ந்து துறைமுக வேலைப்பணிகள் 2013ல் நிறைவு பெற்றது.



 01.09.2013ம் திகதியன்று மாலை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப கர்த்தா முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு வர்த்தக மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகும். வர்த்தக துறைமுகம் 5,000 டிடன் தொகுதி கொண்ட சிறிய கப்பல்களுக்கும், மீன்பிடி துறைமுகம் 300 மீன்பிடி படகுகளுக்கும் சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகம் திறக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அதன் பாதக-சாதக விளைவுகள் குறித்து சர்ச்சைகள் எழுந்த வண்ணமேயுள்ளன. 

சிலர், துறைமுகம் தென்கிழக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் அது சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.

துறைமுகத்தின் பொருளாதார விளைவுகள்

ஒலுவில் துறைமுகத்தை  திறப்பதனூடாக, தென்கிழக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுகம் மூலம், இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டை ஈர்க்க முடியும், இது வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். என நம்பப்படுகிறது.

துறைமுகத்தின் சுற்றுச்சூழல் விளைவுகள்

ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பகுதி ஒரு முக்கியமான பாரம்பரிய கடல் மீன்பிடி பகுதியாகும். துறைமுகம் அமைப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.  துறைமுகம் சாதாரண,  பாரம்பரிய மீனவர்களின்  வாழ்க்கையை பாதித்துள்ளது, மேலும் துறைமுகய்தின் வடக்கு நோக்கிய ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை வரையிலான  கரையோர அயல் கிராமங்கள் கடலரிப்பால் காவு கொள்ளப்பட்டிருக்கிறது.

அதுபோல, ஒலுவில் துறைமுகமத்தின் தெற்கு பகுதியான பாலமுனை இருந்து பொத்துவில் வரையிலான  கரையோர கிராமங்களில் சில, கடல் அரிப்பிற்கும், சில மண் வார்ப்பிற்கும் உள்ளாகி அசாதாரண சூழல் நிலவுகிறது.

கடலரிப்பின் விளைவுகள்

கடலரிப்பின் விளைவுகளாக வீடுகள், விவசாய நிலங்கள், தென்னை மரங்கள், கட்டிடங்கள்,  வீதிகள் மட்டுமின்றி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெருமதிவாய்ந்த கட்டிடங்கள் உள்ளிட்ட கரையோர வளங்கள் பல முற்றாக கடலால் அழித்தொழிக்கப்பட்டுள்ளன .

கரையோர மீனவ மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து  இடம்பெயர்ந்து ஏனைய பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர். சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபட்டு இயற்கையின் சமநிலை மாற்றமடைந்துள்ளது. கரையோர  இயற்கை மற்றும் உயிரியல் பல்வகைமை சீர்குழைத்த நிலையை அடைந்துள்ளது.

கடலரிப்பின் தீர்வுகள்

கடலரிப்பை தடுக்கவும், அதன் தாக்கத்தை குறைக்கவும் இல்லாமலாக்கவும்  துறைசார்ந்த வல்லுனர்களால்  தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன

அதில், கடலரிப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் பாறைகளை அமைத்தல், கடலரிப்பு தடுப்பு மரங்களை நட்டு பராமரித்தல், வடிகால் அமைப்புகளை மேம்படுத்துதல், கடல் மட்ட உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல் போன்றவை முக்கியமானவையாகும்.

கடலரிப்பை தடுக்க ஒலுவில் துறைமுகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

ஒலுவில் துறைமுகம் கடலரிப்பை அதிகரிப்பதில் ஒரு முக்கிய காரணியாகும். துறைமுகத்தின் பொருத்தமற்ற அமைவிடத்தால், கடல் நீரின் ஓட்டம் மாறி, கடல் அரிப்பு அதிகரிக்கிறது. அந்தவகையில் ஒலுவில் துறைமுகம் அல்லது துறைமுக அதிகார சபை கடலரிப்பை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது

அந்தவகையில் துறைமுகத்தின் அருகில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் பாறைகளை அமைக்க வேண்டும், துறைமுகத்தின் செயல்பாட்டால் ஏற்படும் கடல் மாசுபாட்டைக் குறைக்க திட்டங்களை நடைமுறைப் படுத்தவேண்டும், துறைமுகத்தின் செயல்பாட்டால் ஏற்படும் கடல் மட்ட உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், துறைமுகம் மற்றும் உள்ளூர் சமூகங்கள் இடையே சிறந்த உறவை கட்டியெழுப்பி அடிகடி நிகழும் அமைதியின்மை, நம்பிக்கையின்மை மற்றும் பய உணர்வு உள்ளிட்ட வெற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் சுமூகமான தீர்வுக்கான நம்பிக்கையின் கதவுகள் திறக்கும்.

அது போலவே அரசுடன் இணைந்து அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள், பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினர்  குறித்த அழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் ஒன்றிணைந்து துரிதமாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நானில்லை

முர்ஷித்

சருகென உதிரும் இரவில் 
சாய்ந்து கிடக்கிறேன். 
இரவை உருட்டி விளையாடும் 
உனது நினைவுகள் 
பேய்க்காற்றின் 
வேடம் தரித்திருக்கிறது.
இரவோடு இரவாக
சருகோடு சருகாக
எனது வாழ்வின் கூறுகள்
பந்தாடப்படுகிறது
விதியின் விடியல் என்னை
ஒரு துப்புரவுத் தொழிலாளியின் கைகளில் சிக்கவைத்து 
குப்பை கிடங்கிற்கு 
அனுப்பி வைக்கிறது
இத்தனைக்கும் 
நீங்கள் நினைக்கும் குப்பை 
நானில்லை

14 Oct 2021


சமூகநீதி இலங்கையின் நிலைபேருடைய அதிவிருத்தியின் அடித்தளம்

முர்ஷித்

இலங்கையானது பல்இன, பல் மொழி, பல் கலாசாரம் கொண்ட பன்மைத்துவ நாடு. இங்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர்.


இவ் இனக்குழுக்களிடையே சமூக நீதி என்பது ஒரு முக்கியமான கொள்கையாகும், இது சமூக அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு உதவுகிறது.

பாலஸ்தீன சிறார்களின் உதடுகளில் புன்னகையை மலரச்செய்திடு

ஓ, இறைவா! 
பாலஸ்தீன சிறார்களின் 
உதடுகளில் புன்னகையை 
மலரச்செய்திடு.

ஓ, இறைவா!..
பாலஸ்தீன சிறார்களின் 
நிம்மதியான தூக்கத்தை பறித்த 
சியோனிச ஆக்கிரமிப்பாளர்களை, 
எங்கள் பிரார்த்தனையை கொண்டு சப்பித்துப்பிய வைக்கோலாக 
ஆக்கிவிடு.