ஓ, இறைவா!
பாலஸ்தீன சிறார்களின்
உதடுகளில் புன்னகையை
மலரச்செய்திடு.
ஓ, இறைவா!..
பாலஸ்தீன சிறார்களின்
நிம்மதியான தூக்கத்தை பறித்த
சியோனிச ஆக்கிரமிப்பாளர்களை,
எங்கள் பிரார்த்தனையை கொண்டு சப்பித்துப்பிய வைக்கோலாக
ஆக்கிவிடு.
ஓ, இறைவா!..
பாலஸ்தீன சிறார்களின்
சந்தோஷமான கனவுகளில்
இரத்தம் குடித்துக்கொண்டிருக்கும்
சாத்தான்களை.
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் கொண்டு
மண்ணோடு மண்ணாக
புதைத்துவிடு.
ஓ, இறைவா!..
பாலஸ்தீன சிறார்களின்
பசியில் ருசிகானும்
தஜ்ஜாலின் அடிமைகளை,
உனது சோதனை அழிவுகளைக் கொண்டு
பஷ்பமாக்கிவிடு.
ஓ, இறைவா!..
பாலஸ்தீன சிறார்களின்
கண்களில் இருந்து கண்ணீரை
துடைத்துவிடு.
அவர்களின் இதயங்களில் இருந்து
துக்கத்தை அகற்றிவிடு.
ஓ, இறைவா!..
பாலஸ்தீன சிறார்களின்
வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும்
அருளிவிடு,
அவர்கள் நாட்டில்
சுதந்திரம் மற்றும் நீதியை
நிலைநாட்டிவிடு.
ஓ, இறைவா!
பாலஸ்தீன சிறார்களின்
உதடுகளில் புன்னகையை
மலரச்செய்திடு.
#முர்ஷித்
#standwithPalestine
#PrayForPalestine
#FreePalastine
No comments:
Post a Comment