முர்ஷித்
சருகென உதிரும் இரவில்
சாய்ந்து கிடக்கிறேன்.
இரவை உருட்டி விளையாடும்
உனது நினைவுகள்
பேய்க்காற்றின்
வேடம் தரித்திருக்கிறது.
இரவோடு இரவாக
சருகோடு சருகாக
எனது வாழ்வின் கூறுகள்
பந்தாடப்படுகிறது
விதியின் விடியல் என்னை
ஒரு துப்புரவுத் தொழிலாளியின் கைகளில் சிக்கவைத்து
குப்பை கிடங்கிற்கு
அனுப்பி வைக்கிறது
இத்தனைக்கும்
நீங்கள் நினைக்கும் குப்பை
நானில்லை
14 Oct 2021
No comments:
Post a Comment