Saturday 14 October 2023

இலக்கியமும் அரசியலும் இரண்டு கண்கள் போன்றவை.

முர்ஷித்

இலக்கியமும் அரசியலும் மக்களுக்கான இரண்டு கலைகள். அவை இரண்டு கண்கள் போன்றவை. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை அல்லது பிரதிபலிப்பை செய்யக்கூடியவை.

இலக்கியம் மக்களின் கனவுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்கிறது. எனவே, இந்த இரண்டு துறைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன.


புராண காலங்களில் அரசர்களின் சபைகளில் அமைச்சர்கள் மற்றும் புலவர்கள், எழுத்தாளர்கள் சம அந்தஸ்துடன் இருந்தனர்.



அரசர்களால் புலவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் அற்றல் மற்றும் அறிவைப் பயன்படுத்தி தங்கள் நாட்டை கல்விச்செல்வம் செழுமையுற ஆட்சி செய்யப்பட்டது. புலவர்கள் அரசர்களின் ஆட்சியை நேர்மையாக விமர்சித்து, மக்களின் நலன்களைப் பாதுகாத்தனர்.

ஆனால் இன்றைய கால கட்டங்களில், அரசியலையும் இலக்கியத்தையும் அல்லது அரசியல்வாதிகளையும் இலக்கியவாதிகளையும் துருவப்படுத்தும் சம்பவங்கள் மற்றும் கருத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த துருவப்படுத்தும் மனநிலையால்தான் நாம் அரசியல் அனாதைகளாகவும், அரசியல்வாதிகளின் அடிமைகளாகவும் இருக்கிறோம். அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக மக்களையும் ஆட்சி அதிகாரங்களையும் பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது. மக்களின் நலன்கள் பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

சிலர் அரசியல் என்பது ஒரு தீய துறை, அது தீண்டத்தகாதது என்று நம்புகிறார்கள். அவர்கள் இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் அரசியல் பற்றி பேசுவதும் எழுதுவதும் தவறு என்று கருதுகின்றனர்.

இலக்கியவாதிக்கு அரசியல் எதற்கு என்று விமர்சிப்பது அறிவீனர்களின் நிலைப்பாடாகும்.

இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்கள் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும், எழுதவேண்டும்.

 அரசியல் என்பது சமூகத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே, இலக்கியவாதிகள் அரசியல் பற்றி பேசுவதும் எழுதுவதும் அவசியம்.

அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி கலை, இலக்கியவாதிகள் மட்டுமின்றி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் சிந்திக்கவேண்டும், பேச வேண்டும், எழுத வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் திறன்களைப் பயன்படுத்தி சமூகத்தை மேம்படுத்த வேண்டும்.

அதேபோல, அரசியல்வாதிகளும் சமூகத்தின் பிற துறைகள் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும்.

அப்போதுதான் நம் சமூகம் விடியலைக் காண முடியும். அனைவரும் ஒத்துழைந்து செயல்பட்டால், நம் சமூகம் ஒரு சிறந்த இடமாக மாறும். அனைவரும் சமமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் திறன்களைப் பயன்படுத்தி வெற்றிபெறுவார்கள்.

No comments:

Post a Comment