Saturday, 10 May 2014

அன்னை





















அன்பு,பாசம்,
அரவணைப்பு,பாதுகாப்பு
இவை எல்லாம்
அன்னை என்ற சொல்லின்
அவதாரங்கள்!..

அன்னை!
பத்து மாதங்கள் தான்
கருவறையில் சுமந்தாள்!..
ஆயுள்வரை-தன்
நெஞ்சறையில் சுமக்கிறாள்!..

உனக்கு ஓர்
தீங்கு நிகழ்கிறதா?
உயிரிருந்தும் உயிரற்று
போகிறாள்
அன்னை!..

உலகை
அறிமுகம் செய்தவர்
தந்தையாகலாம் ...
தந்தையை தந்தவள்
அன்னைதான்!..

அன்னை!
ஓர் முத்தம் இடுகிறாள்
ஆயுளோ.. 
தூய்மையடைகிறது!..
ஆறிவை சலவை செய்கிறாள்
உனக்கு
நிலாக்காட்டி சோறூட்டிய போது!..

அன்னை தான்-உன்
நன்மை!..

அன்னையை
அபிசேகம்செய்யுங்கள்.. 
அன்பால்!.. -ஆயுள் முழுதும்
அழகு செய்யுங்கள்...
ஆதரவால்!..

அன்னை தான்-உன்
நன்மை!..

*இலக்கியன் மு.முர்சித்*

Tuesday, 6 May 2014

தர்மம்













பத்து ரூபா
கொடுக்காத நீ
நாளை
தொலைப்பாய்
பத்துஆயிரம் ரூபாவை!..

உனது தலையை
நீ
காக்கவில்லை
காக்கிறது தர்மம்!..

கொடுப்பதற்காக
நீளுகின்ற உனதுகை
சாவியாக மாறும்
சுவனக்கதவை 
திறப்பதற்கு!..

ஏழைகளின் கண்ணீரை
தொடைக்கின்ற
உனது தர்மம்.
உன்வீட்டுக்கு
அழைத்து வருகிறது
சந்தோசத்தை!..

உலோபியின்
செல்வத்திற்கு
உயிர் இல்லை!..
உனது செல்வம்
உயிர் பெருகிறது!..
தர்மம்
செய்யச்செய்ய....

நீ பாழுங்கிணறு
ஆகிறாய்
தர்மம் 
செய்யாதுதபோது!..

நீ
மழைபோன்று
ஆகிறாய்
தர்மம்
செய்கிறபோது!..

உனது
தர்மங்கள்
சிப்பியில் விழுகிற
நீர்த்துளி போல
மறுமையில் விளைந்திடும்
நல் முத்துக்களாய்!..

இருக்கும்போது
இல்லை என்று 
சொல்லிவிடாதே..
நீ
மனிதன் இல்லை என்று 
சொல்லிவிடும்-அது!..

தர்மம்
ஆயிறம் வணங்களையும்
விடப்பெரியது!..

தர்மம் செய்!
பெரும் தாகத்துடன்!..
பெரும் தேடலுடன்!..


*இலக்கியன் மு.முர்சித்*

Saturday, 3 May 2014

இயற்கை

















இறைவன் சொல்கிறான்
இயற்கை மூலம்
நான் பேருண்மை என்று!..

வானம் குடை!..
பூமி பூத்துக்கிடக்கிறது
அதற்குள்!..

பூமிக்கு உயிருண்டு என்பதை
நிரூபிக்கின்றன
தாவரங்கள்!..

பூமி
புன்னகைக்கின்றது
ஆஹா பூக்கள் மூலம்!..

கடல்,ஆறு,அருவி,ஏரி
மழைபடைத்த
வளங்கள் இவை!..

கார் மேகம்
கரைந்து கரைந்து
பூமியில் இறங்குகிறது
மழையாக!..

விருச்சங்களின் மகாநாடு
காடு!..-அது
மிருகங்கள்,பறவைகளின்
கூடு!..

இயற்கை எழுதிய 
மிக அழகான கவிதை
உயிரினங்கள்!..

இயற்கை!
வரம் எமக்கு..

மனிதா!
நீ இயற்கை!..

நீ
இயற்கையை சிதைக்கிறாய்!
உன்னை நீயே
சிதைக்கிறாய்!

இயற்கையை 
நேசி-நீ
புனிதனாவாய்!..

இலக்கியன் மு.முர்சித்

செம் மொழி















வார்த்தைப்பூக்களுக்கு 
வசந்த காலம்!..
பேனை முற்களில்
கவி பூக்கள் மலர்ந்தபோது!..

தேனீக்களின் தேர்வலம்!
காகித நிலவில்
தேன் ஊற்று 
கண்டுபிடிக்கப்பட்டபோது !.. 

மொழி மாநாட்டில்
'தமிழ்'
பௌர்ணமி தேன் கூடு!..

மொழி!
என்ற சொல் இனிக்கிறது -அதை
உச்சரிக்கும் போது!..

நாவும் புனிதமடைகிறது
தமிழ் எழுத்துகளில்-அது
உயிர்க்கும்போது!..

செம் மொழி!..
நம் மொழி!..
தொன் மொழி!..
பொன் மொழி!..
தமிழ் மொழி..
வாழிய வாழிய..
பெரு மொழி..
வாழிய வாழியவே....

*இலக்கியன் மு.முர்சித்*

சிந்தனை செய்




சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

சிறகுகள் முளைக்கிறதா?
உன் கனவுகளுக்கு...
நாளைய உலகம்
உன்கையில்!..

சிந்தனைகளை செயலால்
பட்டை தீட்டுகிறாயா?
உன் தோல்விகளும்
வெற்றி படியாகிறது!..

சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

புத்தாக்க சிந்தனையை நம் 
சொத்தாக்க வேண்டும்!..
தித்திப்பாய்;வசந்த
மத்தாப்பாய் வாழ்க்கை மணக்க!...

அக்கினி சுடரில்-ஓர்
தேன்துளி கசிகிறது!..
விடாமுயற்சி1- அதில்
தேன்தேடியபோது!

சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

இலக்கியன் மு.முர்சித்

கல்வி





















மதியே கரைகிறது
கல்வியால்!
புதிய உலகை பிரசவிக்க...

நீ கற்கின்றாயா?
ஒரு மலர் மலர்கின்றது!..
நீ கற்பிக்கின்றாயா?
ஓராயிரம் வண்டுகள்-அதில்
இஸ்பரிசிக்கின்றன!..

கண்டதை கற்பவன்
பண்டிதன் ஆவதில்லை!..
கண்டதை ஆய்ந்து
நன்றதை நன்கவன் கற்பதால்
பாண்டித்தியம் புனிதம் அடைகிறது!..

கல்வி!- அது
நெல் மணி!..
உழுதுகின்றனர் கரும்பலகை 
உழவர்கள்...
மாணாக்கர் பசி -அதில்
மாய்கின்றது!..

புத்தகங்கள் சொல்வது மட்டும்
கல்வியல்ல-உன்
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்
கல்விக்கான புனித
யாத்திரைதான்!

சூரிய ஆசான்கள்
ஒளி வழங்குகின்றனர்!..
நாளைய இருளில்
மின்மிப்பூச்சிகள்-நாம்
ஒளிகாண!..

கல்வி!- அது
காடு!..
கடல்!..
வானம்!..
ஏன் முழுப்பிரபஞ்சமும் கல்விதான்!..
முயற்சி உள்ளவனுக்கு!..

நீ
கற்கின்றாயா?
உன்
வாழ்க்கையை காதலிக்கின்றாய்!...

நீ
கற்றலை வெறுக்கின்றாயா?
உன் வாழ்க்கையை 
உயிருடன் புதைக்கின்றாய்!..

*இலக்கியன் மு.முர்சித்*