Sunday, 6 April 2025

பெண்களின் தனிமையும் வறுமையும்..

பெண்கள் ஒரு தலைமுறையின் ஆணிவேர். குழந்தைகளின் முதல் பல்கலைகழகம். ஆனால் அவர்களின் தனிமையும் வறுமையும் சில வழிகேடர்களுக்கு வருவாயீட்டும் வழிகளாக மாறிவருகின்றன.

பல்வேறுபட்ட சட்டவிரோத, கலாசார சீர்கேடான விடயங்களுக்கு பெண்களின் தனிமையையும் வறுமையையும் பயன்படுத்தி சிலர் வயிறு வளர்த்தும் பாக்கெட்டுகளை நிரப்பியும் ஹராமான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் தினமும் பார்த்தும் கேட்டும் வருகிறோம்.

இந்த நிலை மாற வேண்டும்.. மாற்ற வேண்டும்..

பெண்களை ஹலாலான சுய தொழில்களின் பக்கம் ஈர்க்க வேண்டும். அவர்களின் சக்திக்கு ஏற்ற வகையில் சந்தை வாய்ப்புக்களை கருத்திற்கொண்டு குழுக்களாக ஒன்றிணைத்து உற்பத்தி சார் தொழில் முயற்சிகளில் ஈடுபட வைப்போமேயானால் செழிப்பான பொருளாதாரத்தினூடாக குடும்ப வன்முறைகள், கலாசார சீர்கேடுகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறைந்து குடும்பங்கள் மட்டுமல்லாது ஊரும் சமூகமும் தலைமுறை தலைமுறையாக தலைநிமிரும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்கான வாய்ப்புக்களையும் வசதிகளையும் உருவாக்க செல்வாக்கும் சொல்வாக்குமுள்ள கனவான்கள் முன்வர வேண்டும்.

இது தேர்தல் காலம் என்பதால் பெரும் பெரும் கொடை வல்லல்கள் நமது உள்ளூர் அரசியல்வாதிகளின் வடிவில் முளைத்துக்கொண்டிருப்பதால் இதனை கருத்திற்கொண்டு சமூக ஆர்வலர்கள் செயற்படவேண்டும்.

#முர்ஷித்

No comments:

Post a Comment