Tuesday, 18 March 2025

சுய தொழில் தொடங்குவதற்கான அடிப்படையான வழிகாட்டுதல்.

#முர்ஷித்

தொழில் செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு, ஒரு வேலைவாய்ப்பிலிருந்து தொழில்முனைவோர் வாழ்க்கைக்குச் செல்லும் பயணம் ஒரு முக்கியமான முடிவாகும்.

இது சுதந்திரத்தையும், பொறுப்புகளையும் ஒருசேரக் கொண்ட ஒரு பயணமாகும். ஆனால், எந்த தொழிலாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக உருவாக்க முன்பே திட்டமிடல், முதலீடு, வாடிக்கையாளர்கள் அடையாளம் காணுதல் போன்ற அடிப்படை நடவடிக்கைகள் அவசியம்.



இந்த கட்டுரை, தொழில்முனைவோருக்கான முழுமையான வழிகாட்டுதலாக இருந்து, தொழில் தொடங்குவதற்கான முக்கியமான கட்டங்களையும், வளர்ச்சியை உறுதி செய்யும் நடைமுறைகளையும் விளக்கும் என நம்புகிறேன்.

1. முதல்நிலை நிதித் திட்டம் – உங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துங்கள்!

தொழில் ஆரம்பிப்பதற்கும், முதலாவது ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரையில் தேவையான செலவுகளுக்கு நிதியுதவி செய்வதற்கும் தேவையான பணத்தை முன்கூட்டியே சேமிக்க வேண்டும்.

• வீட்டு செலவுகள்: உணவு, மின்சாரம், வீட்டு வாடகை அல்லது கடன் தவணை, குழந்தைகளின் கல்வி போன்ற அடிப்படை செலவுகளை முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தல் வேண்டும்.

• குடும்ப நலத்திற்காக: தொழில் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய வருவாய் கிடைக்காது. எனவே, ஆரம்ப கால கட்டத்திற்கான நிதியை திரட்டி வைத்திருக்க வேண்டும்.

•  தொழில் முதலீடு செய்யும் முன், உங்கள் குடும்பத்தினரின் ஆதரவை உறுதிப்படுத்துங்கள். அதுவே உங்களை உடல், உள உறுதிப்பாட்டுடன் சரியானதும் வலுவானதுமான முடிவுகளை எடுத்து செயற்படுத்த உதவும். 

2. தொழிலுக்கு தேவையான முதலீடுகளை அறிந்து கொள்ளுங்கள்!

ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த, இரண்டு முக்கிய முதலீடுகள் தேவை:

I. நிலையான முதலீடு (Fixed Capital):

இது, தொழிலை தொடங்க ஒருமுறை செய்யும் முதலீடு ஆகும்.

• அலுவலக advance
• இயந்திரங்கள், கணினி Etc..
• வாகனங்கள், தொழில் தேவைக்கேற்ப பொருட்கள்

II. நடைமுறைச் செலவுகள் (Working Capital):

தொழிலின் தினசரி செயல்பாடுகளுக்கான செலவுகள் இதில் அடங்கும்.

• அலுவலக வாடகை
• ஊழியர்களின் சம்பளம்
• மின் கட்டணம், தொலைபேசி செலவு
• விளம்பர செலவுகள்
• கொள்முதல் செலவுகள்

தொழிலை ஆரம்பிக்க தேவையான பணத்தை முன்கூட்டியே கணக்கிட்டு ஏற்பாடு செய்யுங்கள்.

3. தொழிலுக்கான முன் வேலைகளை திட்டமிடுங்கள்!

தொழிலை தொடங்குவதற்கு முன்பே, தொழிலுக்குத் தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுவிடுங்கள்.

• Project Report தயாரித்தல்
• இடம் தேர்வு செய்தல்
• TIN, VAT, PAN, CST, IEC போன்ற அரசாங்க அனுமதிகளைப் பெறுதல்
• வங்கி கணக்கு தொடங்குதல்
• அலுவலகத்திற்கான உள்தளம் (layout) அமைத்தல்
• வாடிக்கையாளர்களை அடைய Business Card, Brochure, Pamphlet போன்றவற்றை உருவாக்குதல் Etc..

இந்த அனைத்து நடவடிக்கைகளும், தொழில் தொடங்கிய முதல் நாளிலிருந்தே வருவாய் ஈட்டுவதற்கு உதவும்.

4. வாடிக்கையாளர்களை அடையாளம் காணுங்கள்!

தொழில் வெற்றியடைய வேண்டுமென்றால், வாடிக்கையாளர்களை அடையாளம் காண வேண்டும்.

• முதலில் Revenue Customers (நிதியளிக்கும் வாடிக்கையாளர்கள்) யாரென்று தெளிவாகக் கண்டறியுங்கள்.

•  தொழிலின் ஆரம்ப காலத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க விளம்பரங்கள் உள்ளிட்ட யுக்திகளை பயன்படுத்துங்கள்.

5. செலவுகளை கட்டுப்படுத்தும் வழிகள்!

தொழிலின் ஆரம்ப கட்டத்தில் அதிக செலவுகளை கட்டுப்படுத்துதல் அவசியம்.

• அலுவலக வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற நிரந்தர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

• விளம்பர செலவுகளை தகுந்த இடத்தில் செய்யுங்கள்.

• Supplier-களுடன் பேசி, சுமுகமான கொள்முதல் மற்றும் கடன் வசதிகளை ஏற்படுத்துங்கள்.

தொழிலின் ஆரம்பத்தில் செலவுகளை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

6. நிதி முகாமைத்துவம்– கடனைத் தீர்வாக பார்காதீர்கள்!

தொழிலுக்காக கடன் வாங்குவது ஒரு நல்ல தீர்வாக இருக்கலாம், ஆனால் அதற்கும் ஒரு வரம்பு இருக்க வேண்டும்.

• முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பாகக் கடன் வாங்கலாம். ஆனால் அதற்கு மேல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

• வட்டியுடன் அடிப்படை தொகையையும் திருப்பிச் செலுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

7. தொழிலின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய செயல்பாடுகள்!

•  தொழில் ஆலோசகர்களை சரியாக தேர்வு செய்யுங்கள்.
• மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட Supplier-களிடமிருந்து விலைப்பட்டியல் பெறுங்கள்.
• தொழிலின் ஆரம்ப நிலைக்கு குடும்பத்தின் உதவியைப் பயன்படுத்துங்கள்.
• வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தொழிலின் சேவைகளை மாற்றம் செய்யுங்கள்.

8. ஒரே நேரத்தில் பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்!

• தொழிலின் ஆரம்பத்தில் ஒரே தொழிலில் முழு கவனம் செலுத்துங்கள்.
• வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்ததும் மற்ற துறைகளில் கவனம் செலுத்தலாம்.

9. பணம் உங்களை தேட வர வழிகளை உருவாக்குங்கள்!

• உங்கள் வாடிக்கையாளர்களை உங்கள் சேவைகளை தேர்வு செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
• சிறந்த சேவையை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

10. ஊழியர்களை எப்போது நியமிக்க வேண்டும்?

• தொழிலின் வருமானம் நிலையானது என்று உணர்ந்த பிறகே ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதுவரை கட்டுப்பாடுகள் அவசியம்
• முதல் சில மாதங்கள் தொடர்ந்து நீங்களே உழைக்க வேண்டும்.

தொழிலை வெற்றிகரமாக நடத்த, திட்டமிடல், நிதி முகாமைத்துவம், வாடிக்கையாளர்களை அடையாளம் காணுதல் ஆகியவை முக்கியமானவை. ஒரு சிறந்த திட்டத்துடன் தொடங்கினால், தொழில் வளர்ச்சி என்பது உறுதியாகும்.

தன்னம்பிக்கை, சரியான திட்டமிடல் மற்றும் தொடர் முயற்சி தொழில்முனைவோரை வெற்றிக்குத் தூண்டும்!

No comments:

Post a Comment