தமது நாட்டார்
கலை இலக்கிய வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பதில் முஸ்லிம்கள் அசமந்தமாக
இருக்கிறார்கள் என்கிறார் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த எழுகவி ஜெலீல் (49) “நாட்டார் பாடல்களுக்கு ஆசியரியர்கள் இல்லை”
எனும் பொது நியதியை தகர்த்து “அரை நிலை நாட்டார் பாடல்கள்” எனும் புது வடிவத்தினை
இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்கொண்டு செல்கிறார் ஜெலீல்.
முஸ்லிம் கலை,
இலக்கியப் பாரம்பரியம் மிக்க தென்கிழக்குப்
பிராந்தியத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வாழ்பவர்தான் இவர் , நாட்டார் பாடல்களை சந்தர்ப்பத்திற்கு
ஏற்றாற்போல பாடுவதிலும் அதனைப் பாதுகாத்துத் தொகுதியாக்குவதிலும் 35வருடங்களுக்கு மேலாக தன்னை ஈடுபடுத்தி வருபவர்.