பச்சை போர்த்திய மலைகள்!..-நன்றாய்
இச்சை ஊட்டிய மலர்கள்!..
பிச்சை கொட்டிய அருவி!..-அழகாய்
கச்சை கட்டிய குறவர்!..
கட்டையோரம் ஊரும் அட்டை-கண்டேன்
பிச்சை கொட்டிய அருவி!..-அழகாய்
கச்சை கட்டிய குறவர்!..
கட்டையோரம் ஊரும் அட்டை-கண்டேன்
அட்டையில் தீட்டா ஓவியமாய்!..
மலையூர் செல்லும் நரைமேகங்கள்-நன்றாய்
கலையூர் கொள்ளை கொண்ட திரவியமாய்!..
பாம்பாட்டம் ஆடிவரும் ஆறுகள்-பார்த்து
பாம்பாட்டம் ஆடிவரும் ஆறுகள்-பார்த்து
தெம்பூற்றாய் தேறிவந்தது உள்ளம்!..
கொம்புத்தேன் வழிந்தோடிய விழியில்-இனிமை
கொவ்வைக்கனியாய் கனிந்து நின்றது மனசு!..
காலைப்பனி காதலனை மடிதாங்கும்-நன்றாய்
காதலிப்புல் நுனி சாயும்!..
காமக்கதையை படித்து முடித்து-அதிகாலை
சிந்திய கண்ணீர்; அமுதப்பன்னீர்!..
பனியை மோரும் குதிரை-உற்று
குதியை கீறும் குளிரால்!..
மதியில் ஊறும் கவிதை-சற்று
உயிரில் உரசும் எழிலால்!..
தாவரங்கள தாங்கிய பட்சிகள்-பச்சை
பூமரங்கள் சிந்திய தேன் துளிகள்!..
கொடிமரங்கள் பற்றிய கொழுகொம்பு-கொழு
பொடிவைக்கும் அழகின் அலைவரிசை!..
இத்தனையும் அத்தனையாய் பத்திரமாய்-கண்டேன்
இன்பத்தின் அத்வைத பாத்திரமாய்!..
நுவரெலிய பயணத்தில்-நான்
மலை ஏறிய பேரூந்தில்!...