Wednesday, 16 July 2014

முஸ்லீம் நாட்டார் இலக்கிய பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆய்வாளர் எஸ்.முத்து மீரானும் அவரின் பணியும். -கவிஞர்.இலக்கியன் மு.முர்சித்-



ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் சார்ந்த வரலாற்று விழுமியங்களை குறைகளின்றி நிறைவாகக் கூறும் இலக்கியங்களில்> நாட்டுப்புற இலக்கியங்களே முதன்மை பெற்று விளங்குகின்றன. உலகில் மனிதன் தோன்றி அவன் சமூதாயக் குழுக்களாக வாழத்தொடங்கிய காலத்திலிருந்து நாட்டார் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. எழுத்தறிவில்லா இம் மக்கள் தங்களது உணர்வுகளையெல்லாம் தங்களுக்குத் தெரிந்த மொழியின் மூலம் இலக்கியங்களாக படைக்கத்தொடங்கினார்கள்.